திங்கள், 9 மே, 2022

 பழைய பென்ஷன் திட்டத்தை 

திமுக ஒருபோதும் கொண்டு வராது!

கொண்டு வர வேண்டும் என்று 

விலைபோன CPI, CPM கட்சிகள் போராடாது!

------------------------------------------------------------------  

1) ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

அசோக் கெலாட் முதல்வர். ராஜஸ்தானில் 

பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் 

கொண்டு வரப்பட்டு விட்டது. புதிய பென்ஷன் 

திட்டத்தை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு 

ஏற்க மறுத்து விட்டது.


2) ராஜஸ்தானைத் தொடர்ந்து சட்டிஸ்கர் 

மாநிலத்திலும் பழைய பென்ஷன் திட்டம் 

கொண்டு வரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை 

சட்டிஸ்கரின் காங்கிரஸ் அரசு செய்து 

வருகிறது. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் 

பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு 

வருவதில் உறுதியாக இருக்கிறார்.


3) ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி

நடக்கிறது. முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்.

ராஜஸ்தானைப் பின்பற்றி இங்கும் 

பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு 

வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட 

எதிர்க்கட்ச்சிகள் கோரி வருகின்றன.


4) பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு 

வருவோம் என்று தேர்தல் வாக்குறுதி 

கொடுத்து வாக்குகளை பெற்று 

ஆட்சிக்கு வந்து விட்டு, வாக்குறுதியை 

நிறைவேற்ற முடியாது என்று திமுக 

சொல்கிறது.


5) பழைய பென்சனின் ஆதரவாளர்களான 

CPI, CPM கடசிகள் போராடுமா?

போராடாது. ஏற்கனவே சீதாராம் எச்சூரியிடம் 

சபரீசன் மொபைலில் பேசி மிரட்டி இருக்கிறார்.

பழைய பென்ஷனைப் பற்றிப் பேசக்கூடாது 

என்று சபரீசன் கூறியதும் பம்மிப் பதுங்கி 

பழைய பென்ஷன் பற்றிப் பேச மாட்டோம் 

என்று உறுதி கொடுத்துள்ளார் யெச்சூரி 

என்று ஆங்கில ஊடகவியலாளர்கள் கூறி 

வருகின்றனர். 


6) ரூ 25 கோடிக்கு திமுகவிடம் கட்சியை

அடகு வைத்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்

திமுகவை எதிர்க்குமா? எதிர்க்க முடியுமா?

எதிர்த்தால் இவர்களின் முதுகுத் தொலியை 

திமுக உரித்து விடுமே!


7) இப்போது CPI, CPM தமிழகத் தலைவர்களின்

எண்ண ஓட்டம் இதுதான்! திமுகவிடம் ஒரு 

பெர்ம் பேசுவது; பழைய பென்ஷன் பற்றிப் 

பேசாமல் இருப்பதற்கு உரிய கூலியைக் 

கேட்பது. கணிசமான சி பெறுவது.

இதுதான் CPI, CPMன் திட்டம்.    




8) எப்படியும் சபரீசன் கணிசமான தொகை 

கொடுப்பார்' லம்பாகக் கிடைக்கும் என்று 

நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு 

போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கிடக்கின்றன.

இவர்களை இன்னும் நம்பும் கோமாளிப் பயல்களை

என்ன செய்வது?

************************************************* 

திமுக செய்வதையெல்லாம் 

எதிர்க்க வேண்டியதில்லை!

--------------------------------------------

தாராளவாத சிந்தனையம் பின்நவீனத்துவ 

சிந்தனையும் உடைய குட்டி முதலாளித்துவம் 

திமுக அரசின் இந்த உத்தரவை எதிர்க்கும்.

அதன் மூலம் தன்னை முற்போக்காகக் 

காட்ட முனையும்!


இப்படிப்பட்ட குட்டி முதலாளித்துவர்களுக்கு 

இன்றைய பள்ளிகளில் உள்ள மாணவர்கள் நிலை,

அவர்களின் உளப்பாங்கு, ஒழுங்கீனமே 

ஒழுங்காக மாறியிருக்கும் நிலை ஆகியவை 

பற்றி ஒரு இழவும் தெரியாது.


தனியார் பள்ளிகளை ஒழுங்காக 

நடத்தும்போது அரசுப் பள்ளிகளில் மட்டும் 

ஏன் இந்த அவலநிலை என்று 

குட்டி முதலாளித்துவம் சிந்திக்காது.


கையில் சாதிக்கயிறு கட்டும் விவகாரத்தில்

அண்மையில் ஒரு மாணவன் கொலை 

செய்யப்பட்டு விட்டான். இரண்டு மாணவர்கள் 

கைது செய்யப் பட்டுள்ளார்கள். 


கண்டிக்க வேண்டிய இடத்தில் 

கண்டிக்க வேண்டும்.

தண்டிக்க வேண்டிய இடத்தில் 

தண்டிக்க வேண்டும்.


அரசுப் பள்ளிப் பிள்ளைகளைக் கெடுப்பவர்கள்

தாராளவாத மனப்போக்கு உடைய குட்டி 

முதலாளித்துவக் கபோதிகளே!


எந்த ஒரு CORRECTIVE MEASUREஐயும் 

தர்க்கமே  இல்லாமல் எதிர்க்கும் 

குட்டி முதலாளித்துவத்தை ஒதுக்காமல் 

தமிழ்ச் சமூகம் உருப்படாது.

------------------------------------------------  

          

        


ஞாயிறு, 8 மே, 2022

 கொள்ளி வை! கொள்ளி வை!!

திராவிடத்துக்குக் கொள்ளி வை!

-------------------------------------------------- 

திமுக மூத்த எம்பி திருச்சி சிவாவின் மகன் 

திராவிடத்துக்குக் கொள்ளி வைத்து விட்டு

பாஜகவில் சேருகிறார். பாஜக அலுவலகலமான 

கமலாலயத்தில் பாஜக தலைவர் நாகராஜனுடன் 

திருச்சி சிவாவின் மகன் நிற்பதை படத்தில் 

பாருங்கள்.


ஏற்கனவே இனமானக் காவலர் பேராசிரியர் 

அன்பழகன் அவர்களின் பேரன் திராவிடத்துக்குக் 

கொள்ளி வைத்து விட்டு பாஜகவில் 

அடைக்கலம் ஆகி இனமானம் காத்தார்..  


கொள்கையோ கோட்பாடோ எதுவும் இல்லாமல் 

ஊழல் புரிவதை மட்டுமே நடைமுறையாகக் 

கொண்டிருந்தால் இன்னும் நிறையப்பேர்

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் 

சேருவார்கள்.


திருச்சி சிவாவின் மகனின் நெற்றியில் 

மங்கலகரமான சந்தனம். நல்ல கடவுள் பக்தர்.

திமுகவில் எல்லோர்க்கும் கடவுள் நம்பிக்கை 

உண்டு.


கருணாநிதி கடவுள் நம்பிக்கை உள்ளவர்.

அவர் ஒரு போலி நாத்திகர். கருணாநிதி 

ஒரு ஜோசியப் பித்தர். ஜோசியன் சொன்னான் 

என்பதற்காக மஞ்சள் துண்டை சாகும் வரை 

அணிந்த போலி நாத்திகர்தான் கருணாநிதி.


இனி திமுககாரப்பயல் எவனாவது பகுத்தறிவு 

என்று பேசினால் மக்கள் சாணியைக் கரைத்து 

ஊற்றி அடிப்பார்கள்!

----------------------------------------------


 

  


புதன், 4 மே, 2022

சீதாராம் யெச்சூரியை செருப்பால் அடித்த 
அரவிந்த் கேஜ்ரிவால்! 
2024ல் வெல்லப் போவது யார் என்ற 
கட்டுரையின் முன்னுரை (4)
---------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------

2015ல் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் 

தேர்தலில் CPM கட்சியானது 7 கட்சிக் கூட்டணி 

அமைத்துப் போட்டியிட்டது. டெல்லி சட்டமன்ற 

மொத்த இடங்கள் = 70. CPM தலைமையிலான 

இடதுசாரிக் கூட்டணி 15 இடங்களில் போட்டியிட்டது.


போட்டியிட்ட 15 இடங்களிலும் CPM கூட்டணி

படுதோல்வி அடைந்தது. டெபாசிட் இழந்தது. 

அது மட்டுமல்ல இவர்கள் நிறுத்திய 

15 வேட்பாளர்களில் ஒருவர் கூட நான்கு இலக்க

வாக்குகளை பெறவில்லை. அதாவது ஒருவர் 

கூட 1000 வாக்குகளை பெறவில்லை. இதுதான் 

CPM கட்சியின் லட்சணம்.  


இதைச் சுட்டிக்காட்டி, சீதாராம் யெச்சூரியை 

செருப்பால் அடித்தது போல இழிவுபடுத்தினார் 

அரவிந்த் கேஜ்ரிவால்.

--------------------------------------------------------- 


2020 தேர்தலில் CPM போட்டியே இடவில்லை.

நீங்களெல்லாம் ஏண்டா கட்சி நடத்துகிறீர்கள்?

திங்கள், 2 மே, 2022

 காங்கிரசுக்கு முன்பே முக்தி அடைந்த
போலிக் கம்யூனிஸ்டுகள்!
2024 தேர்தலில் வெல்லப் போவது யார் என்ற
கட்டுரையின் முன்னுரை (2)
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
சனிப்பிணம் தனியாகப் போகாது என்று சொல்லுவார்கள்.
அது போல காங்கிரஸ் பிணம் போலிக் கம்யூனிஸ்ட்
பிணத்தையும் கூட்டிக்கொண்டு சுடுகாட்டுக்குப்
போகிறது.
இந்தியாவின் தேர்தல் அரசியலில் காங்கிரசின்
உச்சத்தையும் அதன் படிப்படியான சரிவையும்
புள்ளி விவரங்களின் துணையுடன் பார்த்தோம்.
வரலாற்றிலேயே இல்லாதபடிக்கு 2014, 2019
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசானது
மூன்று இலக்கத்தில் மக்களவையில் இடங்களைப்
பெறாமல் 44 என்றும் 52 என்றும் இரண்டு இலக்கத்தில்
சுருங்கி விட்டது.
அதே நேரத்தில் பாஜகவானது 1984 முதல் 2019 வரை
தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
பாஜக போட்டியிட்ட முதல் தேர்தல் தொடங்கி
இப்போது வரை அது பெற்றுள்ள இடங்கள்:
1984 ... 2. (7.74 சதவீத வாக்குகள்)
1989 .... 85 (11.36)
1991 .... 120 (20.11)
1996 .... 161 (20.29)
1998 .... 182 (25.59)
1999 .... 182 (23.75)
2004 .... 138 (22.16)
2009 .... 116 (18.80)
2014 .... 282 (31.00)
2019 .... 303 (37.36)
இந்த 10 தேர்தல்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம்
நிதானமாகவும் உறுதியாகவும் உயர்ந்து கொண்டே
வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இதற்கு மாறாக இந்த 10 தேர்தல்களிலும் காங்கிரசும்
சரி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி (CPI, CPM) தொடர்ந்து
சரிந்து கொண்டே வருவதை தேர்தல் புள்ளி விவரங்கள்
உணர்த்துகின்றன.
CPI, CPM இரு கட்சிகளும் பெற்ற இடங்கள்மற்றும்
வாக்கு சதவீதம் பற்றிப் பார்ப்போம்.
1996.... 44 (CPI 12, 1.97 சதவீதம், CPM 32, 6,12 சதவீதம்)
1998 .... 41 (CPI 9, 1.75 சதவீதம், CPM 32, 5.16 சதவீதம்)
1999..... 37 (CPI 4, 1.48 சதவீதம், CPM 33, 5.40 சதவீதம்)
2004..... 53 (CPI 10, 1.41 சதவீதம், CPM 43, 5.66 சதவீதம்)
2009 .... 20 (CPI 4, 1.43 சதவீதம், CPM 16, 5.33 சதவீதம்)
2014 ..... 10 (CPI 1, 0.78 சதவீதம், CPM 9, 3.25 சதவீதம்)
2019 ..... 5 (CPI 2, 0.58 சதவீதம், CPM 3, 1.75 சதவீதம்)
2019 தேர்தலில் CPI, CPM இரண்டு கடசிகளும் சேர்ந்து
பெற்ற இடங்கள் 5ல் 4 தமிழ்நாட்டில் திமுகவுடன்
கூட்டணியில் இருந்ததால் கிடைத்தவை. திமுக
கூட்டணியைக் கழித்து விட்டுப் பார்த்தால்
இவ்விரு கட்சிகளும் சேர்ந்து இத்தேர்தலில் (2019)
பெற்றுள்ளது ஒரே ஒரு இடம்தான் என்றாகிறது.
1996ல் இரண்டு கட்சிகளும் சேர்ந்து 44 இடங்களைப்
பெற்றிருந்தபோது, CPI கட்சியானது தேவகெளடா
அமைச்சரவையிலும், பின் ஐ கே குஜ்ரால்
அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருந்தது.
இந்திரஜித் குப்தா, சதுரானந்த் மிஸ்ரா ஆகிய
CPI தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
2004ல் இவ்விரு கட்சிகளும் சேர்ந்து 53 இடங்களைப்
பெற்றிருந்தபோது டாக்டர் மன்மோகன்சிங்கின்
ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தன.
CPMன் சோம்நாத் சட்டர்ஜி நாடாளுமன்ற
சபாநாயகராக இருந்தார்.
இதன் பிறகு சரிவு, சரிவு, ஒரே சரிவுதான்.
தற்போது 2019ல் ஒற்றை இலக்கத்துக்கு
இவ்விரு கட்சிகளும் வந்து விட்டன. இவ்விரு
கட்சிகளின் அகில இந்தியக் கட்சி என்ற
அங்கீகாரம் கிழிந்து தொங்குகிறது. தேர்தல்
கமிஷ்னரிடம் கெஞ்சிக் கூத்தாடி காலில் விழுந்து
கதறி தேர்தல் சின்னத்தைத் தக்க வைத்துக்
கொண்டுள்ளன இக்கட்சிகள். சுருங்கிக் கொண்டே
வரும் இக்கட்சிகளின் செல்வாக்கு இக்கட்சிகள்
போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பதை
நிரூபிக்கின்றன.
காங்கிரஸ் என்னும் பிணம் தன்னோடு கம்யூனிஸ்ட்
என்னும் பிணத்தையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு
சுடுகாட்டுக்குப் போகிறது.
காங்கிரஸ் முக்தி அடைகிறது; சரி. கூடவே போலிக்
கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் முக்தி அடைகின்றன?
ஏனெனில், போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு
சொந்தமாக கொள்கைகள் கிடையாது. அவை
காங்கிரசின் போலியான மதச்சார்பின்மை,
இந்து மத வெறுப்பு, இஸ்லாமிய கிறிஸ்துவ
சிறுபான்மை மதங்களுக்கு ஆதரவு என்னும்
கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றன.
எனவே காங்கிரஸ் செத்துப்போகும்போது இவையும்
கூடவே செத்துப் போகின்றன.
******************************
 ஆடி வில்லை வேறுபாடு
------------------------------------------ 

ஆதியிலே வந்தது முகம் பார்க்கும் 
கண்ணாடி  (MIRROR). ஆண்டாள் காலத்திலேயே 
முகம் பார்க்கும் கண்ணாடி வந்து விட்டது.
திருப்பாவையில்,

"உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை"  

என்று வருவதை ஓர்க. 

(முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று) 
அப்போது, ஆண்டாள் காலத்தில் "முகம் பார்க்கும் கண்ணாடி"க்கு 

தட்டொளி என்று பெயர். தட்டொளி என்பது 

அழகிய காரணப் பெயர்.


ஆடி என்ற சொல் MIRRORஐக் குறிக்கும் 

சொல்லாக எப்போது வந்தது எனில்,

நிலவுடைமைச் சமூகம் நன்கு வளர்ச்சி 

பெற்று முதிர்ந்தபோது வந்தது.    


ஆடியும் லென்சும் ஒன்றை அடுத்து மற்றது 

உடனடியாக வந்த போதிலும் நடைமுறைப் 
பயன்பாட்டில் லென்ஸ் காலத்தால் சற்றுப்
பிந்தியே வந்தது. லென்ஸ் வந்த காலம் 
முதலாளியச் சமூக காலம்.

முதலாளியச் சமூக காலத்தில் தமிழ் 
உற்பத்தி மொழியாக இல்லை. எனவே 
லென்சுக்கு நிகரான தமிழ்ச்சொல் 
உருவாக்கப்படவே இல்லை.

அதற்காக mirrorக்கு உரிய சொல்லான 
ஆடியையே லென்சுக்கும் பயன்படுத்தலாம் 
என்பது தவறு மட்டுமல்ல கிரிமினல் குற்றமும் 
ஆகும்.

தன் பொண்டாட்டிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும்
வெவ்வேறு உறவுமுறைப் பெயர் வேண்டாம்,
ஒரே பெயரே போதும் என்ற கருத்தில் எனக்கு 
உடன்பாடு இல்லை. இது தமிழை அழிக்கும்.
மேலும் இது அறிவியலுக்கு எதிரானது.

spectacle என்ற சொல் ஆரம்பத்தில் மூக்குக் 
கண்ணாடி என்று அழைக்கப்பட்டு பின் 
மருவி தற்போது கண்ணாடி என்று 
வழங்கப் படுகிறது. இது வழக்கு. இதில் 
தவறில்லை. நான் வலியுறுத்துவது 
lens என்ற சொல்லுக்கு ஆடி என்ற சொல்லைப் 
பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.  

lens என்ற சொல்லின் தமிழாக்கமாக தற்போது 
பயன்படும் "வில்லை" என்ற சொல்லைப் 
பயன்படுத்தினால் என்ன தவறு?
என் கண்ணில் வில்லை பொருத்தப் பட்டது 
என்று சொன்னால் எழுதியவருக்கு குஷ்டம் 
வந்து விடுமா?

ஒன்று வில்லை என்று அவர் எழுதி 
இருக்க வேண்டும். அல்லது லென்ஸ் என்றே 
எழுதியிருக்க வேண்டும். இரண்டையும் 
தவிர்த்து விட்டு ஆடி என்று எழுதியுள்ளார்.
இது கயமை அல்லவா?


அவருக்கும் அறிவியலுக்கும் ஸ்நானப் பிராப்தி 
கிடையாது. நிற்க. வில்லைகள் ஒளி விலகல் 
கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும்.
இது நான் பிறக்கும் முன்பே கண்டுபிடிக்கப் 
பட்டு விட்டது. நான் 11ஆம் வகுப்பிலும் பின்னர் 
பியூசியிலும் பின்னர் பட்டப்படிப்பில் optics 
பிரிவிலும் இதைப் படித்தேன். இதற்கான 
creditஐப்பெற எனக்கு அருகதை இல்லை.

அதே நேரத்தில் பல்வேறு  வாய்ப்புகளில் 
ஆடி, வில்லை வேறுபாடு பற்றியும்,
வில்லைகள் ஒளி விலகல் கோட்பாட்டின்படி 
இயங்குபவை என்பதையும் விடாது சொல்லி 
வருபவன் நான்தான். இதன் மூலம் இயற்பியல் 
மாணவர்களைத் தாண்டி ஏனையாரிடம் 
இச்செய்தியைக் கொண்டு சென்றுள்ளேன்;
கொண்டு சென்று வருகிறேன்.

ஹெச் ஜி வெல்ஸின் Invisible Man என்னும் 
அறிவியல் புனைவைப் படிக்க வேண்டும். 
படிக்க வேண்டும். படிக்க வேண்டும். 
அது முழுவதும் ஒளி விலகல் கோட்பாட்டின் 
அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனை.    

சனிப்பிணம் தனியாகப் போகாது என்று சொல்லுவார்கள்.
அது போல காங்கிரஸ் பிணம் போலிக் கம்யூனிஸ்ட் 
பிணத்தையும் கூட்டிக்கொண்டு சுடுகாட்டுக்குப் 
போகிறது.

இந்தியாவின் தேர்தல் அரசியலில் காங்கிரசின் 
உச்சத்தையும் அதன் படிப்படியான சரிவையும் 
புள்ளி விவரங்களின் துணையுடன் பார்த்தோம்.
வரலாற்றிலேயே இல்லாதபடிக்கு 2014, 2019
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசானது 
மூன்று இலக்கத்தில் மக்களவையில் இடங்களைப்
பெறாமல் 44 என்றும் 52 என்றும் சுருங்கி விட்டது.

அதே நேரத்தில் பாஜகவானது 1984 முதல் 2019 வரை 
தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது.    
பாஜக போட்டியிட்ட முதல் தேர்தல் தொடங்கி 
இப்போது வரை அது பெற்றுள்ள இடங்கள்: 

1984 ... 2. (7.74 சதவீத வாக்குகள்) 
1989 .... 85 (11.36)
1991 .... 120 (20.11)
1996 .... 161 (20.29)
1998 .... 182 (25.59)
1999 .... 182 (23.75)
2004 .... 138 (22.16)
2009 .... 116 (18.80)
2014 .... 282 (31.00)
2019 .... 303 (37.36)

இந்த 10 தேர்தல்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் 
நிதானமாகவும் உறுதியாகவும் உயர்ந்து கொண்டே 
வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இதற்கு மாறாக இந்த 10 தேர்தல்களிலும் காங்கிரசும் 
சரி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி (CPI, CPM) தொடர்ந்து 
சரிந்து கொண்டே வருவதை தேர்தல் புள்ளி விவரங்கள் 
உணர்த்துகின்றன.


CPI, CPM இரு கட்சிகளும் பெற்ற இடங்கள்மற்றும் 
வாக்கு சதவீதம் பற்றிப் பார்ப்போம்.
1996....  44 (CPI 12, 1.97 சதவீதம், CPM 32, 6,12 சதவீதம்)
1998 .... 41 (CPI 9, 1.75 சதவீதம், CPM 32, 5.16 சதவீதம்)
1999..... 37 (CPI 4, 1.48 சதவீதம், CPM 33, 5.40 சதவீதம்)
2004..... 53 (CPI 10, 1.41 சதவீதம், CPM 43, 5.66 சதவீதம்)            
2009 ....  20 (CPI 4, 1.43 சதவீதம், CPM 16, 5.33 சதவீதம்) 
2014 ..... 10 (CPI 1, 0.78 சதவீதம், CPM 9, 3.25 சதவீதம்) 
2019 .....  5 (CPI  2, 0.58 சதவீதம், CPM 3, 1.75 சதவீதம்)

2019 தேர்தலில் CPI, CPM இரண்டு கடசிகளும் சேர்ந்து 
பெற்ற இடங்கள் 5ல் 4 தமிழ்நாட்டில் திமுகவுடன் 
கூட்டணியில் இருந்ததால் கிடைத்தவை. திமுக 
கூட்டணியைக் கழித்து விட்டுப் பார்த்தால் 
இவ்விரு கட்சிகளும் சேர்ந்து இத்தேர்தலில் (2019)
பெற்றுள்ளது ஒரே ஒரு இடம்தான் என்றாகிறது.

1996ல் இரண்டு கட்சிகளும் சேர்ந்து 44 இடங்களைப் 
பெற்றிருந்தபோது, CPI கட்சியானது தேவகெளடா
அமைச்சரவையிலும், பின் ஐ கே குஜ்ரால் 
அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருந்தது.
இந்திரஜித் குப்தா, சதுரானந்த் மிஸ்ரா ஆகிய 
CPI தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.    

2004ல் இவ்விரு கட்சிகளும் சேர்ந்து 53 இடங்களைப் 
பெற்றிருந்தபோது டாக்டர் மன்மோகன்சிங்கின் 
ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தன.
CPMன் சோம்நாத் சட்டர்ஜி நாடாளுமன்ற 
சபாநாயகராக இருந்தார். 

இதன் பிறகு சரிவு, சரிவு, ஒரே சரிவுதான்.
தற்போது 2019ல் ஒற்றை இலக்கத்துக்கு
இவ்விரு கட்சிகளும் வந்து விட்டன. இவ்விரு 
கட்சிகளின் அகில இந்தியக் கட்சி என்ற
அங்கீகாரம் கிழிந்து தொங்குகிறது. தேர்தல் 
கமிஷ்னரிடம் கெஞ்சிக் கூத்தாடி காலில் விழுந்து 
கதறி தேர்தல் சின்னத்தைத் தக்க வைத்துக் 
கொண்டுள்ளன இக்கட்சிகள். சுருங்கிக் கொண்டே
வரும் இக்கட்சிகளின் செல்வாக்கு இக்கட்சிகள்
போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பதை 
நிரூபிக்கின்றன.  

காங்கிரஸ் என்னும் பிணம் தன்னோடு கம்யூனிஸ்ட் 
என்னும் பிணத்தையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு 
சுடுகாட்டுக்குப் போகிறது.

காங்கிரஸ் முக்தி அடைகிறது; சரி. கூடவே போலிக் 
கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் முக்தி அடைகின்றன?
--------------------------------------------------

 

     
 
  

  

ஞாயிறு, 1 மே, 2022

 போலியான தமிழ்ப் பற்றும்

மிரரும் லென்சும்!

----------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------- 

நன்கு வயது மூத்த ஒரு தமிழ்க் குடிமகன்.

He is a septuagenarian. அவர் கண்புரை நீக்க

அறுவை சிகிச்சை மேற்கொண்டு,

கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தி இருக்கிறார்.

(lens implanted)    


இந்தச் செய்தியை அவர் மக்களுக்குத்  

தெரிவிக்கிறார்.பின்வருமாறு சொல்கிறார்:

"சிகிச்சை முடிந்து ஆடி பொருத்தப் பட்டுள்ளது".


படித்த எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"ஆடி பொருத்தப் பட்டுள்ளது" என்ற தொடரின் 

அபத்தம் ஒருவரின் குரல்வளையை 

நெரிக்கும் அபத்தம் ஆகும்.


என்றாலும் அவருக்கு கண்ணுக்குள்

லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது 

என்பதையும், அதைத்தான் அவர் 

ஆடி பொருத்தப் பட்டுள்ளது என்று 

கூறுகிறார் என்றும் எனக்குப் புரிந்தது.


போலியானதும் முட்டாள்தனமானதுமான 

தமிழ்ப்பற்று தமிழை அழிக்கிறது.

தமிழனை மூடன் ஆக்குகிறது.


ஆடி (mirror) வேறு; லென்ஸ் (lens) வேறு.

கண்களில் பொறுத்தப்படுவது லென்ஸ் ஆகும்.


ஆடி என்பது ஒளி பிரதிபலித்தல் (reflection)

என்னும் தத்துவத்தில் வேலை செய்யும்.

லென்ஸ் என்பது ஒளி விலகல் (refraction) 

என்னும் கோட்பாட்டில் வேலை செய்யும்.


நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள ஆடிகள்

அனைத்தும் அளவில் பெரிதாக இருக்கும்.

லென்சுகள் அளவில் சிறிதாக இருக்கும்.

கண்ணுக்குள் பொருத்தப்படும் லென்சுகள் 

எவ்வளவு சிறிதாக இருக்கும் என்று 

வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அளவில் பெரிய ஒரு ஆடியை கண்ணுக்குள் 

பொருத்த முடியுமா என்றும் பொருத்தினால் 

கண் என்ன ஆகும் என்றும் வாசகர்கள் 

சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  


ஒளி பிரதிபலித்தல் (reflection) 

ஒளி விலகல் (refraction)

என்னும் இரண்டும் வேறு வேறு கோட்பாடுகள்.


எந்த ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல்,

உரிய கல்வியைக் கற்காமல் 

தமிழுக்கு தான்தான் அத்தாரிட்டி என்று 

கற்பனையாக சுயஇன்பம் அனுபவித்துக் 

கொண்டு,

தமிழை அழிக்கிறார்கள் ஏமாற்றுக்காரர்கள்.


தமிழ்ப்புலமையற்ற தமிழ்ப்பற்று,  

அறிவியல் அறிவே இல்லாத வெற்றுத் 

தமிழ்ப்பற்று ஆகியன சமூகத் தீங்குகள்.


லென்ஸ் என்பதை தற்போது வில்லை என்று 

மொழிபெயர்க்கிறார்கள்.இந்தச் சொல் 

ஓரளவு பரவாயில்லை. வேறு நல்ல சொல்லை 

உருவாக்கும்வரை லென்ஸ் என்றே 

எழுத வேண்டும்.

********************************************

லென்சுக்கு நல்லதொரு தமிழ்ச் 

சொல்லை நாளை நியூட்டன் அறிவியல் 

மன்றம் உருவாக்கி அறிவிக்கும்.