செவ்வாய், 28 ஜூன், 2022

சோதிடம் என்றால் என்ன?
----------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
வானத்தில் கோள்களும் நட்சத்திரங்களும் நிலவுகளும் 
இன்ன பிற வான்பொருட்களும் சஞ்சரிக்கின்றன.
இவற்றின் சஞ்சாரம் பூமியில் வாழும் மனிதர்களின் 
வாழ்க்கையில் பாரதூரமான பாதிப்புகளை 
ஏற்படுத்துகிறது. இப்படி நம்புவதுதான் சோதிடத்தின் 
அடித்தளம்; ஆதாரம்.

எனவே விண்ணில் சஞ்சரிக்கும் வான்பொருட்கள் 
என்னென்ன பாதிப்புகளை மனித வாழ்க்கையில் 
ஏற்படுத்தும் என்று கணிப்பதும், அந்தக் கணிப்புக்கு 
ஏற்ப, தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு 
பாதிப்புக்களில் இருந்து மனித இனத்தைக் காத்துக் 
கொள்வதற்கும் சோதிடம் தேவைப்படுகிறது.
இவ்வாறுதான் சோதிடத்தின் இருப்புக்கான நியாயத்தை 
அதன் ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர்.

கிரகங்களின் சஞ்சாரம் பூமியில் வாழும் மனிதர்களின்
சொந்த வாழ்க்கையில் எவ்விதமான பாதிப்பையும் 
ஏற்படுத்துவதில்லை: ஏற்படுத்தவும் இயலாது. 
இதுதான் உண்மை. ஒருவனுக்கு படிப்பு வருவதற்கும் 
வராமல் போவதற்கும், ஒரு பெண்ணுக்கு தகுந்த 
பருவத்தில் திருமணம் நடப்பதற்கும் நடக்காமல் 
தள்ளிப் போவதற்கும், ஒரு தம்பதிக்கு குழந்தை 
பிறப்பதற்கும் பிறக்காமல் போவதற்கும் கிரகங்களின் 
சஞ்சாரம் எவ்விதத்திலும் காரணம் அல்ல. இதுதான் 
உண்மை.

எனவே அஷ்டமத்தில் சனி இருப்பதால் முன்னேற 
இயலாது என்பதும் சுக்கிர திசை நடக்கும்போது 
செல்வம் பெருகும் என்பதும் மிகவும் இழிந்த 
முட்டாள்தனமான கூற்றுக்கள் ஆகும். 
இதிலெல்லாம் எள்முனையளவும் உண்மை இல்லை.

எனவே சோதிடம் என்பது என்ன? பொய், புரட்டு,
பித்தலாட்டம், மோசடி, ஏமாற்று, அறியாமை, 
பெருந்தற்குறித்தனம் ஆகியவற்றின் ஒட்டு 
மொத்தத் திரட்சியே சோதிடம் ஆகும்.

வானில் சுற்றும் கோள்கள் கெப்ளரின் விதிகளுக்கு 
உட்பட்டு (Kepler's laws of planetary motion) இயங்குகின்றன.
கடவுளுக்குக் கட்டுப்பட்டு கோள்கள் இயங்குவதில்லை.
இல்லாத கடவுள் எங்கிருந்து எந்தக் கோளின் 
இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்? 

எனவேதான் பாரதியார் தமது புதிய ஆத்திசூடியில்
சோதிடந்தனை இகழ் என்கிறார். வானநூல் பயிற்சி 
கொள் என்கிறார். Astronomyயைக் கற்றுக் கொள்ள 
வேண்டும் என்றும் Astrologyயை இகழ வேண்டும் 
என்றும் கூறுகிறார் பாரதியார்.

சோதிடத்தின் மீதான ஈர்ப்பு உலகெங்கும் இருக்கிறது.
மக்களிடையே அறிவியல் மனப்பான்மை 
வளர வளர சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகள் 
அறுந்து விடும். 

அறிவியல் தற்குறிகளின் தேசமான இந்தியாவில் 
சோதிடத்தின் மீதான ஈர்ப்பு சோதிடப் பித்தாக 
வளர்ந்து நிற்கிறது. இந்தியாவில் சோதிடத்தை 
பெருமளவுக்குப் போற்றி வளர்ப்பவர்கள் 
அரசியல்வாதிகளும் சினிமாக் கூத்தாடிகளுமே.

தமிழ்நாட்டில் பொருள்முதல்வாதத்தோடு 
எள்முனையளவும் தொடர்பற்ற ஒரு போலிப் 
பகுத்தறிவுவாதம் ஈ வெ ராமசாமியால் அறிமுகப் 
படுத்தப் பட்டது. இந்தப் போலிப்பகுத்தறிவுவாதம்
சோதிடப் பித்துப் பிடித்த மு கருணாநிதியின் 
மஞ்சள் துண்டாக வெளிப்பட்டது. 

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்புமனு 
தாக்கல் செய்த எந்த ஒரு போலிப்பகுத்தறிவு திமுக 
வேட்பாளராவது கொழுத்த ராகுகாலத்தில் 
வேட்புமனு செய்தது உண்டா? மு கருணாநிதியின் 
குடும்பத்துப் பெண்களைப்போல வேறு எந்தக்
குடும்பத்திலும் இவ்வளவு மூடநம்பிக்கை உண்டா?

பகுத்தறிவு பேசுகிற எந்த ஒரு போலிப்பயலும் 
கருணாநிதியின் மஞ்சள் துண்டைக் கண்டித்தது 
கிடையாது. கருணாநிதி குடும்பப் பெண்களின் 
ஆன்மிக மூடநம்பிக்கைகளைக் கண்டிக்க
முன்வந்தது கிடையாது.

திமுக, அதிமுக, உள்ளிட்ட திராவிடக் கட்சிகள்தான்
தமிழ்நாட்டில் சோதிடத்துக்கு மொத்தக் குத்தகை 
எடுத்துள்ளன. தமிழ்நாட்டில் சோதிட மூட 
நம்பிக்கையை மக்களிடம் பரப்புவதில் 
முன்னணியில் இருப்பவை திராவிடக் கட்சிகளே.
ராமச்சந்திர மேனன், கருணாநிதி, ஜெயலலிதா,
வி கே சசிகலா ஆகிய திராவிடத் தலைவர்களின் 
சோதிடப் பித்துக்கு உலகில் ஈடு இணையே கிடையாது.

சோவியத் ஒன்றியத்தில் லெனின் தலைமையிலான 
போல்ஷ்விக்குகளின் ஆட்சியின்போது சோதிடம் 
முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு இருந்தது.
சீனாவில் மாவோவின் தலைமையிலான சோஷலிச 
ஆட்சியின்போது சோதிடம் நூறு சதவீதமும் 
தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் சோதிடத்தைத் தடை செய்ய முடியுமா?
அரசியல்வாதிகளும் கூத்தாடிப் பயல்களும் 
தடை செய்ய விடுவார்களா? மாட்டார்கள்.

இந்தியாவின் பல்கலைக் கழகங்களில் சோதிடம் ஒரு 
பாடமாகக் கொண்டு வரப்பட்டது எப்போது தெரியுமா?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (1999-2004).
அப்போது வாஜ்பாய் கருணாநிதி கூட்டணியில் 
இருந்தனர். வாஜ்பாயின் அமைச்சரவையில் முரசொலி 
மாறன், டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர் 
அமைச்சர்களாக இருந்து பதவி சுகம் அனுபவித்துக் 
கொண்டிருந்த நேரம் அது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 
முரளி மனோகர் ஜோஷி கருணாநிதியின் 
ஒப்புதலைப் பெற்ற பின்பு, இந்தியாவின் பல்கலைக் 
கழகங்களில் சோதிடத்தை ஒரு பாடமாகக் 
கொண்டு வந்தார். சோதிடம் வந்ததும் 
கருணாநிதி அதை எதிர்த்தாரா? திமுக அதை 
எதிர்த்ததா? சோதிடம் பாடமாக வரக்கூடாது என்று 
தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தார்களா 
திமுக அமைச்சர்கள்? இல்லையே!
*********************************************
பின்குறிப்பு:
சோதிடத்துக்கு ஆதரவாகவும் சோதிடத்தை 
பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பாகக் 
கொண்டு வந்த திமுக ஆஷாடபூதிகளுக்கு 
ஆதரவாகவும் இங்கு எவரேனும் பின்னூட்டம் 
இட்டால், அவர்களின் முதுகுத்தொலி உரிக்கப்படும்.
------------------------------------------------------------- 
  

    
 

    


 குறள் வெண்பாவில் 

பிறந்த நாள் வாழ்த்து!

---------------------------------

மருதிருவர் வாழியவே மன்னுபுகழ் பெற்று 

பெருந்திருவைப் பெற்றிடுவீர் இன்று.

--------------------------------------------------

இயற்றியவர்: 

வாழும் காளமேகம் வீரவநல்லூர் இளங்கோவனார்.

பெட்டிக்குள் ஒளிந்திருக்கும் துகள்!
-------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------
1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி உயரம் உள்ள ஒரு
கன சதுரப் பெட்டிக்குள் ஒரு எலக்ட்ரான் இருப்பதாக
வைத்துக் கொள்வோம். பெட்டியின் நடுவிலோ,
ஓரத்திலோ, அடியிலோ, பக்கவாட்டிலோ இப்படி
ஏதேனும் ஓர் இடத்தில் அத்துகள் இருக்கக் கூடும்.

அத்துகள்  எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் 
கூற இயலுமா? குவாண்டம் விசையியல் என்ன
கூறுகிறது?

வெர்னர் ஹெய்சன்பெர்க் (Werner Heisenberg) இதற்குப்
பதிலளிக்கிறார். பெட்டிக்குள் உள்ள எலக்ட்ரான் எந்த 
இடத்தில் இருக்கிறது என்பதை ஒருபோதும் துல்லியமாகக்
கூற முடியாது என்கிறார் வெர்னர் ஹெய்சன்பெர்க்.

இவ்வாறு துல்லியமாகக் கூற முடியாமல் போவதற்கு
என்ன காரணம்? கருவிகளின் நுட்பமின்மையா?
இல்லை என்கிறார் ஹெய்சன்பெர்க். இந்த 
உறுதியின்மையானது இயற்கையின் உள்ளார்ந்த 
இயல்பு (This uncertainty is INHERENT in nature) என்கிறார் அவர்.

ஹெய்சன்பெர்க் தாம் கண்டு பிடித்த உறுதியின்மைக் 
கோட்பாட்டுக்காக (uncertainty principle) நோபல் பரிசு பெற்றவர்.
மிகவும் எளிமையாகச் சொன்னால், உறுதியின்மைக்
கோட்பாடு என்பது இதுதான்:

"ஒரு துகளின் இருப்பிடத்தையும் அதன் வேகத்தையும்
ஒரே சமயத்தில் ஒருபோதும் துல்லியமாகச் சொல்ல முடியாது.
இருப்பிடத்தைத் துல்லியமாகக் கூறினால்,
வேகத்தைத் துல்லியமாகக் கூற இயலாது.அதைக்
கணிப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்.
வேகத்தைத் துல்லியமாகக் கூறினாலோ, இருப்பிடத்தை
அளப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்". இதுதான்
உறுதியின்மைக் கோட்பாடு.(Uncertainty principle:
"The position and momentum of a particle cannot be simultaneously
measured with precision.)"

துகளின் இருப்பிடம், வேகம் இவ்விரண்டையும் ஒரேநேரத்தில் 
கூற வேண்டிய தேவை என்ன? ஏதாவது ஒன்றைக் கூறினால் 
போதாதா? இருப்பிடத்தை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு  
உறுதியின்மையில் இருந்து தப்பிக்கலாமே என்று வாசகர்கள் 
கேட்கலாம். ஒரு பொருளுக்கு  எத்தனை சுதந்திர நிலைகள் 
(freedom) உண்டோ,அத்தனை நிலைகளிலும் அப்பொருளைப் 
பற்றிக் கூற வேண்டும். அப்போதுதான் அப்பொருளை 
முழுமையாக வர்ணித்ததாக அமையும். எனவே ஒரு துகளைப் 
பற்றிக் கூறுவதெனில், குறைந்தது அதன் இருப்பிடம், வேகம்
ஆகிய இரண்டையும் பற்றிக் கூறியே ஆக வேண்டும். அவ்வாறு 
கூற முற்படும்போது உறுதியின்மைக் கோட்பாடு
குறுக்கிட்டே தீரும்.

அப்படியானால் பெட்டிக்குள் இருக்கும் எலக்ட்ரானின்
இருப்பிடத்தை அறியவே முடியாதா? இதற்கு
விடையளிக்கிறார் எர்வின் ஷ்ராடிங்கர் (Erwin Schrodinger)
என்னும் ஆஸ்திரிய விஞ்ஞானி. இவரும் இயற்பியலில்
நோபல் பரிசு பெற்றவர்.

பெட்டிக்குள் இருக்கும் எலக்ட்ரான் துல்லியமாக இந்த 
இடத்தில்தான் இருக்கிறது என்று கூறுவதுதான் கடினமே 
தவிர,  அது எந்த இடத்தில் இருக்கக்கூடும் என்பதற்கான 
நிகழ்தகவை (probability) தெளிவாகக் கூற முடியும் என்கிறார் 
எர்வின் ஷ்ராடிங்கர். இதற்காக அவர் ஒரு சமன்பாட்டைக்
கூறுகிறார். ஷ்ராடிங்கரின் அலைச் சமன்பாடு 
(Schrodinger's wave equation என்று அதற்குப் பெயர். குவாண்டம் 
விசையியலில் மிகவும் பிரசித்தி பெற்ற சமன்பாடு இது.

படத்தில் உள்ள ஷ்ராடிங்கரின் சமன்பாட்டைப்
பாருங்கள். இச்சமன்பாட்டுக்கான விளக்கம்
இக்கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.
சமன்பாட்டில் வரும் கிரேக்க எழுத்தான
ப்சை (psi) என்பதைக் கவனியுங்கள்.

இந்த "ப்சை" ஐ square செய்து அதன் absolute valueஐக்
கண்டறிந்தால், அது துகள் இருக்கும் இடத்திற்கான
நிகழ்தகவை அறிவிக்கும். அதாவது,
modulus psi squared = probability density. இப்போது சிக்கல் தீர்ந்து 
விட்டது. பெட்டியின் வலது ஓரத்தில்,  கீழிருந்து மூன்று அங்குலம் 
தொலைவில் உள்ள இடத்தில்  துகள் இருப்பதற்கான 
வாய்ப்பு அதிகம் என்று ஷ்ராடிங்கரின் அலைச்சமன்பாடு 
கூறுமெனில், அந்த இடத்தில் துகள் இருக்கக்கூடும் 
என்று நாம் அறியலாம்.  

சாதாரண அல்ஜிப்ரா சமன்பாடு அனைவருக்கும் 
பரிச்சயமானது. ஐன்ஸ்டைனின் E = mc^2 என்னும் சமன்பாடு
ஒரு அல்ஜிப்ரா சமன்பாடே. ஆனால் இங்கு நாம் பார்க்கும் 
ஷ்ராடிங்கரின் அலைச்சமன்பாடு ஒரு அல்ஜிப்ரா
சமன்பாடு அல்ல. அது வகைக்கெழுச் சமன்பாடு 
(differential equation) ஆகும்  அதிலும் பகுதிசார்  
வகைக்கெழுச் சமன்பாடு (partial differential equation) ஆகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சையான மாறிகள் 
இருக்கும் ஒரு சூழலில் (when there are more than one independent variable),
ஒரு நேரத்தில் ஒரு மாறி மட்டும்  மாற்றத்துக்கு உள்ளாவதும் 
இன்னொரு மாறி மாற்றத்துக்கு உள்ளாகாமலும் இருக்கும் நிலையில் 
நாம் பகுதிசார் வகைக்கெழுவை மேற்கொள்ளுகிறோம்.                 

ஒரு துகள் எங்கே இருக்கிறது என்பதைக்கூட
அறிவியலால் சொல்ல முடியாதா? அப்படியானால்
அறிவியல் குறைபாடு உடையதுதானே என்று
சிலர் கேட்கலாம். துகளின் இருப்பிடத்தை
கூற முடியாமல் போனதில் அறிவியலின் குறைபாடு
எதுவும் இல்லை. இயற்கை அப்படித்தான் இருக்கிறது.
அதாவது பௌதிக மெய்ம்மை எனப்படும் physical reality
அப்படித்தான் இருக்கிறது.

பௌதிக மெய்ம்மை அதாவது இயற்கை இப்படித்தான்
இருக்க வேண்டும் என்று  மனிதன் ஒரு சட்டகத்தை
(frame) உருவாக்கிக் கொண்டு, அதனுள் இயற்கையை
அடைக்க முடியாது. " இயற்கை எப்படி இருக்கிறதோ
அதை அப்படியே மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும்"
என்கிறார் வெர்னர் ஹெய்சென்பெர்க்.

என்றாலும் ஐன்ஸ்டின் குவான்டம் விசையியலில்
உள்ள இந்த உறுதியின்மையை (uncertainty) ஏற்றுக்
கொள்ள விரும்பவில்லை. ஐன்ஸ்டின் மட்டுமா?
லூயி டி பிராக்லியும் விரும்பவில்லை. இன்னும்
சிலரும் விரும்பவில்லை. அக்காலத்தில் நியல்ஸ் போர்
(Neils Bohr) தலைமையில் சிலரும் ஐன்ஸ்டின்
தலைமையில்  சிலரும் என அறிவியல் உலகமே
இரு பிரிவாகப் பிரிந்து நின்று விவாதித்தது.

மனிதனின் சட்டகத்துக்குள் (frame) இயற்கையை ஒருபோதும்
அடக்க இயலாது. மாறாக இயற்கையை அது எப்படி இருக்கிறதோ
அப்படியே புரிந்து கொள்வதுதான் சரியானது.
பௌதிக மெய்ம்மை (physical reality) என்பது 
ஏகப்பட்ட உறுதியின்மைகளைக் கொண்டிருக்கிறது 
என்றால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் 
சரியானது.

உறுதியின்மைக் கொள்கை பிரகடனம் செய்யப் பட்டதுமே 
கடவுளின் ஆதரவாளர்கள் அதீத உற்சாகம் அடைந்தனர்.
அவர்கள் பின்வரும் வாதத்தை முன்வைத்தனர். 
"தன்னால் கடவுளின் இருப்பிடத்தைக் கூறமுடியாது என்று 
அறிவியல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டது. இதன் 
பொருள் கடவுள் இருக்கிறார் என்பதே. கடவுள் இல்லை 
என்று அறிவியல் சொல்லுவது, கடவுளின் இருப்பிடத்தைச் 
சுட்டிக்காட்ட இயலாத அதன் பலவீனம் காரணமாகவே. 
ஆக பகுப்பாய்ந்து பார்த்தால், கடவுள் இருக்கிறார் 
என்பதற்கு  உறுதியின்மைக் கொள்கை ஒரு சாட்சியம் 
ஆகி விடுகிறது."

கடவுளின் ஆதரவாளர்கள் கூறுவது உண்மையா? 
உறுதியின்மைக் கொள்கை கடவுள் இருக்கிறார் என்பதற்கான   
ஆதாரமா? பரிசீலிப்போம். உறுதியின்மைக் கொள்கையானது 
இயற்பியலின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று 
என்றபோதிலும், எல்லா விஷயங்களிலும் அதைப் பொருத்த
இயலாது. நுண்ணிய துகள்களின் மீது மட்டுமே உறுதியின்மைக்
கொள்கை செயல்படும். அளவில் பெரிய பொருட்களின் மீது 
(macro objects) அது செயல்படாது. அல்லது பெரிய பொருட்களின் 
மீதான உறுதியின்மை மிக மிகச் சிறியது, நுட்பமானது 
என்பதால் அன்றாட வாழ்க்கையில் அதை உணர இயலாது.

ஒளியின் வேகத்தில் முக்கால் பங்கு வேகத்தில் (0.75c)
செல்லும் ஒரு எலக்ட்ரான் மீது உறுதியின்மை செயல்படும்.
எனவே அதன் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கூறுதல்   
இயலாது. ஆனால் 70 கிகி நிறையுடன் மணிக்கு 120 கிமீ 
வேகத்தில் பாய்ந்து செல்லும் ஒரு சிறுத்தையின்
இருப்பிடத்தைக் கூறுவதில் உறுதியின்மைக் கொள்கை 
குறுக்கே வராது.

ஆக கடவுளின் மீது உறுதியின்மைக் கொள்கையைச் 
செயல்படுத்த முடியுமென்றால், கடவுள் துகள் வடிவில் 
இருக்கிறார் என்பது பெறப்படுகிறது. இந்த இடத்தில் 
கடவுளின் ஆதரவாளர்கள் மீது, இரண்டு மாபெரும் 
விஷயங்களை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டு  . 
விடுகிறது.

1) கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க வேண்டும்.
2) அந்தக் கடவுள் துகள் வடிவில் இருக்கிறார் என்றும் 
நிரூபிக்க வேண்டும்.

இந்த நிரூபண நிர்ப்பந்தங்கள் கடவுளின் ஆதரவாளர்களின் 
நிலையை முதலுக்கே மோசம் என்றாக்கி விடுகின்றன.
கடவுள் இருக்கிறார் என்று யார் எவரும் இதுவரை 
நிரூபித்தது இல்லை. ஏனெனில் கடவுள் என்று எவரும் 
இல்லை; என்றும் எங்கும் இருந்ததும் இல்லை. அதாவது 
கடவுளுக்கு ஒரு பௌதிக இருப்பு கிடையாது. 

ஒன்று இருக்கிறது என்பதன் அடையாளம் அதன் பௌதிக 
இருப்பே. ஒரு எலக்ட்ரானின் நிறை .9.1 x 10^minus 31 கிலோகிராம் 
என்னும் அளவுக்கு அதீத நுண்ணியதாக இருந்தபோதிலும் 
அதற்கு ஒரு பௌதிக இருப்பு இருக்கிறது. அண்ட வெளியில்
(space) அது தனக்கேயுரிய நுண்ணிய இடத்தை அடைத்துக் 
கொண்டுள்ளது. அதன் இருப்பு உணரப் படுகிறது. அண்ட
வெளியில் அதன் இருப்பை கார்ட்டீசியன் அச்சுக்களைக் 
கொண்டோ அல்லது கட்ட வெளியின் (phase space) இருப்பிட 
மற்றும் உந்த அச்சுக்களைக் கொண்டோ (position and 
momentum coordinates) சுட்டிக் காட்ட இயலும்.

ஆனால் கடவுளுக்கு பௌதிக இருப்பு இல்லாததால்,  
எந்த ஒரு வெளியை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலும் 
கடவுளின் இருப்புக்குரிய ஆதாரமோ அடையாளமோ 
இல்லை. யூக்கிளிட்டின் வெளி, மின்கோவ்ஸ்கியின் வெளி,
கில்பெர்ட்டின் வெளி என்று சாத்தியமான எந்த வெளியை 
எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலும் கடவுளின் பௌதிக 
இருப்புக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

ஃபோட்டான் என்பது நிறையே இல்லாத துகள் (massless). 
என்றாலும் அதற்கு பௌதிக இருப்பு உள்ளது. இது 
அனந்த கோடி பரிசோதனைகளில் நாளும் நிரூபிக்கப் பட்டு 
வருகிறது. ஒரு பொருள் இருக்கிறது என்பதன் அடையாளமே 
அதன் பௌதிக இருப்புத்தான். பௌதிக இருப்பு 
இல்லையென்றால் ஆளே இல்லை என்றுதான் பொருள். 
கடவுளுக்கு பௌதிக இருப்பு இல்லையென்றால் கடவுளே 
இல்லை என்றுதான் பொருள்.

மேலே கூறிய அனைத்தையும் அக்கறையுடன் பரிசீலித்துப் 
பார்க்கும் ஒருவர் என்ன முடிவுக்கு வருவார்? உறுதியின்மைக்
கொள்கை வெளிவந்த பிறகு கடவுளின் நிலைமை கந்தலாகக் 
கிழிந்து தொங்குகிறது என்ற முடிவுக்கே வருவார்.

1927ல் உறுதியின்மைக் கொள்கை உலகிற்கு அறிமுகம் 
ஆகிறது. முன்னதாக 1925ல் ஷ்ராடிங்கர் தமது அலைச்சமன்பாட்டை முன்மொழிந்தார். தொடர்ந்து குவாண்டம் விசையியல் திரட்சி
பெறுகிறது. இது இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய 
நமது கண்ணோட்டத்தைப் புரட்சிகரமாக மாற்றி 
அமைக்கிறது. நாம் கற்பனை செய்தது போன்றோ 
அல்லது நாம் உருவாக்கிய கட்டளைச் சட்டகத்திற்குள் 
(template) அடங்குவதாகவே பிரபஞ்சம் இல்லை என்ற 
பேருண்மையை குவாண்டம் விசையியல் மனித 
குலத்திற்கு உணர்த்தி உள்ளது. 

இயற்கையானது இயல்பாகவே தன்னில் நிறைய 
உறுதியின்மைகளைக் கொண்டிருக்கிறது. இயற்கையில் 
எந்த ஒன்றும் இப்படித்தான் நிகழும் என்று உறுதிபடக் 
கூற இயலாததாகவும், பல்வேறு வாய்ப்புகளில் ஏதேனும் 
ஒன்று சாத்தியப்படுவதற்கான நிகழ்தகவைக் 
கொண்டிருப்பதாகவுமே இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது.
இந்த உண்மையத் தயக்கமின்றி ஏற்கும் உளப்பாங்கை 
நாம் அனைவரும் பெறுவதற்கு முயல்வோம்.
********************************************
    
      




   

            
  
   
   
     


 
  



.

  .     
  

திங்கள், 27 ஜூன், 2022

 பிரதமர் மோடி மீதான குஜராத் கலவர வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று முற்றிலுமாக அழித்து ரத்து செய்தது.

தீர்ப்பு திடுக்கிடும் விவரங்களையும் வெளிப்படுத்தியது -
பிரதமர் மோடிக்கு எதிராக பொய்யான வாக்குமூலம் அளிக்க 22 சாட்சிகளுக்கு டீஸ்டா ஜாவேத் செடல்வாட் பயிற்சி அளித்ததாக தீர்ப்பு கூறியது.
பிரதமர் மோடிக்கு எதிராக தவறான அறிக்கை அளித்ததாக முன்னாள் ஐபிஎஸ் ஆர்பி ஸ்ரீகுமாரும் இன்று கைது செய்யப்பட்டார்.
பாரதத்தின் முதல் கிரையோஜெனிக் இன்ஜின் ராக்கெட்டை உருவாக்கிய முதல் விஞ்ஞானியான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை சீரழித்த அதே ஐ.பி.எஸ்.
அவர் முன்னாள் ஐபிஎஸ் சஞ்சீவ் பட் உடன் சேர்ந்து சதி செய்து இப்போது பிரதமர் மோடிக்கு எதிராக பொய்யான அறிக்கையை அளித்து, சிறையில் அடைந்துள்ளார்.
நான் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் விவரங்களைத் தருகிறேன். 3-4 முறை டீஸ்டா ஜாவேத் செடல்வாட் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்,
ஒவ்வொரு முறையும் அவரது வழக்கு நீதிபதி அஃப்தாப் ஆலம் பெஞ்சிற்குச் சென்றது,
எப்படி?
நீதிபதி அஃப்தாப் ஆலம் மகள் அருசா ஆலம், டீஸ்டாவின் அதே என்ஜிஓவில் பங்குதாரராக உள்ளார்.
டீஸ்டா மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் கோடிகளை சம்பாதித்துள்ளார், இப்போது அவருக்கு மும்பையின் ஜூஹூவில், 3 ஏக்கர் புல்வெளியுடன் மிகப்பெரிய பங்களா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜூஹுவில் 3 ஏக்கர் புல்வெளி சொத்தை கற்பனை செய்து பாருங்கள்,
அவருக்கு காங்கிரஸால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த அனைத்து தர்பாரிகளும், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 22 போலி சாட்சிகள், NGO மற்றும் ஊடகங்கள் என நீதிபதி முதல் வழக்கறிஞர் வரை சாட்சி வரை கார்டெல்லைக் கொண்டுள்ளனர்.
சற்று யோசித்துப் பாருங்கள், இத்தனைக்கும் பிறகு 10 ஆண்டுகளாக காங்கிரஸின் ஆதரவுடன் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாமல் போனது ஒரே ஒரு விஷயத்தால் தான் - உண்மை.
அவர்கள் அனைவருக்கும் வெட்கம்,
என் ஆசை
இப்போது டீஸ்டா, ஐபிஎஸ் இருவரும் சிறையில் இருக்கிறார்கள், டீஸ்டாவுக்கு கோடிக்கணக்கான பணத்தை மாற்றிய மேலும் 3 ஐஏஎஸ், நீதிபதி அஃப்தாப் ஆலம் மற்றும் 3 ஊடகவியலாளர் பர்கா, ராஜ்தீப், கரண் தாப்பர், இந்திரா ஜெய்சிங் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். .
Babu Babuji
இடைத்தேர்தல் முடிவுகள்!
போலி மார்க்சிஸ்ட் கட்சியின் இறுதி ஊர்வலத்தில் 
பங்கேற்க நாளை திரிபுரா செல்கிறேன்!
---------------------------------------
2022 ஜூன் 26ல் வெளியான ஆறு மாநிலங்களில் 
நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வருமாறு:- 

சட்டமன்றத் தொகுதிகள்:
------------------------------------- 
தேர்தல் நடந்தவை = 7
பாஜக வெற்றி = 3 (திரிபுரா) 
ஆம் ஆத்மி = 1 (டெல்லி)) 
YSR கட்சி = 1 (ஆந்திரா) 
காங்கிரஸ் = 2 (ஜார்க்கண்ட்).
மார்க்சிஸ்ட் - 0.

திரிபுராவில் 4 இடங்களில் 3ல் பாஜக வெற்றி.
1ல் காங்கிரஸ் வெற்றி. இந்த 4 தொகுதிகளிலும் 
போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வி.
ஒன்றில் கூட இப்போலி மார்க்ஸ்டுகளால் 
வெல்ல முடியவில்லை.
 
நாளை திரிபுராவில் போலிக் கம்யூனிஸ்ட் கட்சியான 
மார்க்சிஸ்ட் கட்சியின் இறுதி ஊர்வலம் நடக்கிறது. 
திரிபுரா சுடுகாட்டில்  வைத்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு 
கொள்ளி வைக்கப் படுகிறது. இதில் கலந்து கொள்ள 
நாளை திரிபுரா செல்கிறேன்.

நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிவுகள்:
---------------------------------------------------------------
தேர்தல் நடந்த இடம் = 3 (உபி = 2; பஞ்சாப் =1)
பாஜக வெற்றி = 2.
அகாலிதளம் மான் பிரிவு வெற்றி = 1.
சமாஜ்வாதி = 0.
மாயாவதியின் பகுஜன் = 0.
ஆம் ஆத்மீ = 0.

உபி ராம்பூர் தொகுதி சமாஜ்வாதி தலைவர் 
அசம் கானின் கோட்டை.
தொகுதி வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் 
அதிகமாக இஸ்லாமியர்கள் உள்ள தொகுதி இது.

இந்தத் தொகுதியில் பாஜக வென்றுள்ளது.
சமாஜ்வாதி வசமிருந்த இத்தொகுதியை பாஜக 
தட்டைப் பறித்துள்ளது. பாஜகவின் இந்த 
வெற்றியின் முக்கியத்துவம் என்னவெனில், 
மொத்த வாக்குகளில் 52 சதவீதம் வாக்குகளைப் 
பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது.

சமாஜ்வாதி, பகுஜன், காங்கிரஸ் என்று எல்லா 
எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் கூட்டினால்
வருவதை விட அதிகமான வாக்குகள் பெற்று 
பாஜக வென்றுள்ளது. 52 சதவீதம் வாக்குகளைப் 
பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதன் மூலம் 
இஸ்லாமியர்களும் கணிசமாக பாஜகவுக்கு 
வாக்களித்துள்ளனர் என்பது புலனாகிறது.

மிகப்பெரும் ரௌடி மாநிலமாகிய உபியில் 
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்பது 
மிகப்பெரும் சவால். அதை யோகி ஆதித்யநாத்
சிறப்பாகச் செய்கிறார் என்பதே ராம்புர் 
தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதன் 
காரணம் ஆகும்.
*******************************************    
    

 

 
 


 2015ல் முகநூலில், தமிழில் எழுதி பெரும் ஆதரவு பெற்ற பதிவு, தற்போது நீதிமன்றம், மூலம் நிரூபிக்கப் பட்டு, குஜராத் கலவரங்களுக்கு மோடி காரணமல்ல என தீர்ப்பு வந்துள்ளது. என்னை போன்ற பலர் 2010 முதல் இது குறித்து பேசி, பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளோம்.

பலருக்கு இன்னமும் குஜராத் கலவரத்தில், எப்படி பொய்கள் பரப்பப் பட்டன என்பது குறித்து தெளிவில்லை. ஒரு பெரும் காட்டாற்று வெள்ளம் போன்ற பொய்களின் சில துளிகளை மட்டுமே கொடுக்க இயலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவற்றின் மூலம் நீங்களே உணரலாம், எவ்வளவு பொய்கள் அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை. மீண்டும் உங்கள் பார்வைக்கு.
--------------------------------------------------------------------------
யாரையும் புண்படுத்தவோ, ஆதரிக்கவோ இந்த பதிவு செய்யப்படவில்லை. அதே சமயம் எந்தவித நியாயமின்றி உண்மை அறியாமல், தவறான எண்ணம் ஏற்பட்ட நல்ல மனிதர்களுக்கு உண்மையை தெரியப்படுத்தும் முயற்சி. ஒவ்வொன்றும் பெரும்பாலும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.
தேர்தல் களம் மக்களுக்கு ஆற்றும் தொண்டின் அடிப்படையில் நடைபெறவேண்டும், உண்மை அறியாமல் ஏற்படும் தனிமனித வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல. முடிந்த வரை நடுநிலைமையுடன் இந்த பதிவை எழுதியுள்ளதாக நம்புகிறேன். பொறுமையாக விருப்பு வெறுப்பின்றி படித்தால் உண்மை விளங்கும்.
குஜராத்தை பற்றி எத்தணை பொய்கள் சமூக வளைதலத்தில், அனைத்தையும் பொய்யென்று நிரூபிக்க என்னால் முடியாது, அதற்கு என் வாழ்நாள் முழுவதும் போதாது. இந்த பதிவு 2002ல் நடைபெற்ற கலவரத்தை ஒட்டி, பரப்பப் பட்ட பல பொய்களில், ஒரு சிலவற்றை மட்டுமே ஆதாரத்துடன் நிரூபிக்கும் முயற்சி.
பத்திரிகைகள் வெளியிடும் முதல் தகவலை மட்டும் நம்புபவர்கள், அதே பத்திரிகைகளில் பின்னர் வரும் உண்மையை, திரும்பி கூட பார்ப்பதில்லை. கேவலப்படுத்த மட்டுமே உரிமை உள்ளவர்கள், பாதிக்க பட்டவரின் நியாயத்தை மதிக்காததில் வியப்பென்ன?
ஒரு தாய் பசுவிற்கு ஏற்பட்ட தவற்றை கூட, தீர விசாரித்து, தன் மகனை இரதமேற்றி கொன்ற மன்னன், சிலம்பை தவறாக புரிந்து, தண்டனையளித்ததை, தாளாமல் உயிர் விட்ட மன்னன், இப்படி பலர் நீதியையும் தர்மத்தையும் உயிரினும் மேலாக மதித்த தமிழ் இனம், இன்று வெறுப்பின் உச்ச கட்டத்தில் ஒரு மாநில மக்களை தவறாக திரித்து, கற்பனையாக குற்றம் சாற்றி, இன்பமுறுவதை கண்டு இந்த பதிவு.
இதன் மூலநோக்கம் மதக்கலவரம் நடந்ததா இல்லையா என்பதல்ல. எந்தவொரு விஷயத்தையும் விஷமாக்கும், சில கீழ்புத்திகாரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே. சிலவற்றையே சொல்லியுள்ளேன், இதுபோல தினம் தினம் சமூக வளைதலத்தில் அரங்கேற்றமாகிறது.
இதற்கெல்லாம் ஒரே காரணம் அரசியல், மதவெறி, பணம், இந்தியாவை துண்டாடுதல். இதற்கு பின் மிகப்பெரிய சக்திகள், வெளிநாட்டு சக்திகள், இவற்றை எதிர்த்து எங்களை போல சாதாரணமானவர்கள் என்ன செய்ய முடியும். முடிந்ததை செய்வோம், மற்றதை கடவுள் பார்த்து கொள்வார்.
Like
Comment
Share

 தமிழரும் நாட்காட்டிகளும்...

இன்று நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டிக்கு வானியலோடு நெருங்கிய தொடர்பு இல்லை. உதாரணமாக பிப்ரவரியில் 28 நாட்கள் என்பதை சூரியனின் சுழற்சி முடிவு செய்யவில்லை. அகஸ்டச்சும், ஜூலியஸ் சீசரும் - தங்கள் பெயர் உள்ள மாதங்களுக்கு 31 நாட்களைக் கொடுக்க ஒரு நாளை பிப்ரவரியில் இருந்து திருடியதன் சுவடுதான் பிப்ரவரியில் 28 நாட்கள். லீப் ஆண்டில் பிப்ரவரியில் மட்டும் ஒரு நாள் கூடுவதற்குப் பின்பும் அறிவியல் இல்லை - அது ஒரு இழப்பீடு. ரோமானிய அரசர்களின் ஆதிக்கத்துக்கு கீழ்ப்பட்ட முட்டாள்தனமான நாட்காட்டியைத்தான் இன்றும் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அது போக கிறிஸ்து பிறந்த ஆண்டைத் தவறாகக் குறிக்கும் வரலாற்றுப் பிழை, போப்பாண்டவர்கள் செய்த மாற்றங்கள் எல்லாம் இன்றைய காலெண்டரில் உண்டு. ஆனால் அது நமக்கு அறிவியல்.
ஆனால் தமிழரின் நாட்காட்டியில் உள்ள 12 மாதங்களும் சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டவை. 30 டிகிரி அல்லது ஒரு ராசி அல்லது இரண்டேகால் நட்சத்திரங்களை சூரியன் நீள்வட்டப் பாதையில் சுழன்று கடக்க எடுத்துக் கொள்ளும் காலமே இங்கு ஒரு மாதம்.
நமக்கும் லீப் ஆண்டு உண்டு அதற்கு ‘நெட்டாண்டு’ என்று பெயர். தமிழரின் நெட்டாண்டில் ஒரு மாதத்தில் மட்டும் நாட்கள் மாறாது. வைகாசி, ஆனி, தை, மாசி ஆகிய 4 மாதங்களின் நாட்கள் எண்ணிக்கைகளும் மாறும். காரணம் சூரியனின் பாதையை முழுமையாக மீண்டும் கணக்கிட்டு இந்த நாட்கள் முடிவு செய்யப்படுகின்றன. நமது நாட்காட்டியை மதம் மாற்றியது இல்லை, அரசர்கள் ஆதிக்கம் செலுத்தியது இல்லை. ஆனால் இது நமக்கு மூடநம்பிக்கை, அயலார் கொடுத்து!.
பஞ்சாங்கத்தைக் கேலி செய்யும் கும்பலுக்கு காலண்டரின் வரலாறு தெரியாததுதான் சோகம். என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்?
-வரலாற்று ஆய்வாளர் (நாணயவியல்) திரு மன்னர் மன்னன்
Like
Comment
Share