ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

1) சங்க காலம் என்பது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலம். சங்க காலம் என்பது இனக்குழுச் சமூக
வாழ்க்கை முறை நிலவிய காலம். அப்போது
வேலைப்பிரிவினை நிலவியது. அது நன்கு உறுதி
செய்யப்பட்ட நிலையில் நிலவியது. குறிஞ்சி முல்லை
மருதம்  நெய்தல் பாலை என்னும் ஐந்து திணைகளிலும்
திணைக்கேற்ற வாழ்க்கை நிலவியது. அப்போது நிலவிய
வேலைப்பிரிவினையானது சாதியாக வளர்ச்சி
அடைந்திருக்கவில்லை.
**
சாதி என்பது பேரரசுகளின்
உருவாக்கத்துடன் நேரடித் தொடர்பு கொண்டது.
உபரியைக் கைப்பற்றும் சுரண்டல் நோக்கம்
கொண்டது. மையப்படுத்தப்பட்ட சுரண்டல்
தோன்றிய போதுதான் சாதியும் தோன்றியது.
வெவ்வேறு திணைகளில் மக்கள்  வாழ்ந்தபோது,
மையப்படுத்தப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட
அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறையின் துணை
கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்ட  
பேரரசின் மைய அதிகாரம் எதுவும் இல்லை. எனவே
சாதி என்பது சுரண்டலின் ஒரு வடிவமாக இருக்கவில்லை.
**
2) ஆரியர் வருகை என்பதெல்லாம் கற்பனை. அதெல்லாம்
பிரிட்டிஷ் காலனிய தாசர்களின் பிரித்தாளும்
சூழ்ச்சிக்கான போலிக் கோட்பாடு.
**
3) தமிழகத்தில் அடிமை முறை இருந்ததாக திரு
 சிவசுப்பிரமணியன் குறிப்பிடுவது பேரரசுகளின்
காலக்கட்டத்தில். என்னுடைய கட்டுரையில்
குறிப்பிடுவது, புராதன பொதுவுடைமைச் சமூகத்தை
அடுத்து, ஐரோப்பிய பாணி ஆண்டான் அடிமை சமூக
அமைப்பு தமிழகத்தில் நிலவவில்லை என்பது. 
அடிமைச் சமுதாயம் (slavery society) என்ற சமுதாய
அமைப்பு தமிழ்நாட்டில் நிலவவில்லை. அப்படி
இருந்தால் அதை யாராவது நிரூபிக்கட்டும்.
***********************************************************

அ) ஆசிய உற்பத்தி முறை இங்கு இல்லை. அதே நேரத்தில்
அடிமைச் சமூகமும் (slavery society) இங்கு இருந்திருக்கவில்லை.
இங்கு (தமிழ்நாட்டில்) என்ன இருந்தது என்பதை
ஆராய்ந்து கண்டறிந்து மார்க்சியத்தைப் பிரயோகிக்க
வேண்டும். ஏற்கனவே உள்ள ஒரு குறிப்புச் சட்டகத்தை
(frame of reference) கையில் எடுத்து வைத்துக் கொண்டு,
அதற்குள் இங்குள்ள நிலைமையைப் பொருத்தப்
பார்ப்பது சரியல்ல. 
**
ஆ) மருத நிலம் இருந்தது. நிலவுடைமை இருந்தது.
வர்க்க வேறுபாடுகள் இருந்தன. நிலப்பிரபுத்துவ
சமூக அமைப்பாக இது  உருவாவதற்கு பேரரசுகளும்
படைகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்
சுரண்டலும் வேண்டும். இது சங்க காலத்தில்
நிகழவில்லை. அதன் பிறகே நிகழ்ந்தது.
(குறிப்பு: துல்லியமான கால வரையறை இங்கு
மேற்கொள்ளவில்லை. சாராம்சமாகவே கூறப்படுகிறது).
**
இ) தமிழகத்திலும் பார்ப்பனர்கள் இருந்தனர். பிற
பகுதிகளில் இருந்தும் வந்தனர். எல்லோருமே
வந்தேறிகள் என்பதற்கு ஆதாரம் இல்லை.
**
ஈ) peasant state தமிழ்நாட்டில் நிலவில்லை.  

-----------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக