வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கல்வித் தந்தைகள் அதிர்ச்சி. இதற்கு அப்புறமும்
இடங்கள் நிரம்பவில்லை. எனவே கட்டணம் இன்னும்
குறைய வாய்ப்பு. தகவல் ஆதாரம்: The Hindu 31.08.2017
முதல் பக்கம்.

ரூ 41.98 லட்சம் எங்கே? ரூ 6.32 லட்சம் எங்கே?
கிட்டத்தட்ட ஏழு மடங்கு குறைவு.

எடப்பாடி கவிழ்ந்தால், அடுத்து ஆட்சி அமைக்க
தளபதியைத்தான் ஆளுநர் அழைக்க வேண்டும்.
இதுதான் அரசமைப்புச் சட்டம். அழைப்பை ஏற்று
ஆட்சி அமைப்பது தளபதியின் கடமை.

5 ஆண்டுக்கும் சேர்த்து மொத்தக்  கட்டணம்
(ரூ 6.32 x 5= 31.60 ) ரூ 32 லட்சம். இது இன்று 2017ல்.
ஆனால் கடந்த ஆண்டுகளில் முதல் ஆண்டுக்கே
ரூ 41.98 லட்சம். ஐந்து ஆண்டுக்கும் சேர்த்து ரூ 2 கோடி.
(5 x 41.98= 209.90 லட்சம் = 2 கோடி) , நீட் தேர்வு காரணமாக
ரூ 2கோடி கட்டணம் வெறும் ரூ 32 லட்சமாக
ஆகி விட்டது. இதன் காரணமாக கல்வித் தந்தைகளின்
கொள்ளை லாபம் வெகுவாகக் குறைந்துள்ளது.

இது முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்பதால்
ஆங்கில இந்து ஏடு (The Hindu) முதல் பக்கத்திலேயே
வெளியிட்டுள்ளது.
 
இந்தியா முழுவதும் கவுன்சலிங் கடைசி தேதி 31 ஆகஸ்ட்.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 4 வரை கடைசி தேதி என்று
உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. எனவே இறுதி நிலவரம்
இன்னும் வரவில்லை. வந்தவுடன் எழுதப்படும்.
மற்றப்படி, இன்றைய தமிழக நிலவரம் பற்றி
(இது இறுதி நிலவரம் அல்ல) அடுத்த பதிவுகளில்
காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக