தமிழ்நாடு 30.8.2017 கவுன்சலிங் நிலவரம்! ம்
நீட்டில் 720க்கு 109 மார்க் மட்டுமே எடுத்த மாணவிக்கு BDS சீட்!
இதுதான் குறைந்தபட்ச மதிப்பெண்! (Rank 26446)
கட்டணத்தைக் கடுமையாகக் குறைத்தால் மட்டுமே
இடங்களை நிரப்பலாம். இல்லையேல் நிரப்ப
இயலாது. நிரம்பிய இடங்களைக் கொண்டு
கல்லூரியை நடத்த வேண்டியதுதான்.
திறந்த மனதுடன் இந்த விஷயத்தை அணுக நீங்கள்
தயாராக இல்லை. ரூ 2 கோடி வாங்கிய கல்வித் தந்தை
இன்று மொத்தம் 5 ஆண்டு படிப்பிற்கு 32 லட்சம்
மட்டுமே வாங்குகிறான். இதில் நடுத்தர வர்க்கம்
கல்விக்கடன் வாங்கிப் படிக்கிறான். இதில் வருத்தம்
அடைபவர்கள் யார்? நிச்சயம் கல்விக் கொள்ளையர்கள்தான்.
நீட்டினாள் கட்டணம் குறையுமா என்று வீராவேசமாக
முழங்கியவர், இன்று கட்டணம் குறைந்து விட்டதை
ஜீரணிக்க இயலாத அதிர்ச்சியில் பேசுகிறார்கள்.
இது ஆகஸ்ட் 30 நிலவரம். இதற்கு அடுத்த நாளில்
RANK இன்னும் குறையும். இப்போது நான் சொன்னதெல்லாம்
முதல் கட்ட கவுன்சலிங் நிலவரத்தையே. இரண்டாம் கட்ட
கவுன்சலிங்கில் இன்னும் மோசமான RANK எடுத்து
இருந்தாலும் MBBS, BDS இடம் கிடைக்கும். பூச்சாண்டி
காட்டியவர்கள் எங்கே போனார்கள்? தனியார் சுயநிதி
திமிங்கலங்கள் கைக்கூலிகள்.
நீட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் டாட்டா பிர்லா
வீட்டுப் பிள்ளைகளா? எவ்வளவு அபத்தம்! 720க்கு
109 மார்க் எடுத்த அருந்ததிய மாணவிக்கு இடம்
கிடைத்துள்ளது. அந்த மாணவி என்ன டி.வி.எஸ்
குடும்பமா? தனியார் முதலாளிகளுக்கு வக்காலத்து
வாங்கும்போது ஏழை எளிய மக்களைப் பற்றிப்
பேசுவது எதற்காக? இன்றைய தேதியில் புரிந்து
கொள்ள முடியாத பலரும் நாளையோ அடுத்த
ஆண்டிலோ புரிந்து கொள்வார்கள். நான் முன்பு கூறிய
அனைத்தும் உண்மை ஆகி விட்டது. My stand vindicated!
மொத்தமே 3000 இடம்தான். ஆனாலும் 26446 ரேங்க் எடுத்த
மாணவிக்கு சீட் கிடைக்கிறது. இருபத்தி ஆறாயிரத்து 446
என்ற ரேங்கில் இருந்தாலும் சீட் கிடைக்கிறது.
சரண்டர் ஆகும் இடங்கள், வேறு படிப்பில் சேர்வதால்
வேண்டாம் என்று கைவிடும் இடங்கள், அகில இந்திய
கோட்டாவில் சரண்டர் ஆகும் இடங்கள் என்று
பல வகையில் மிஞ்சும் இடங்கள். இவையெல்லாம்
2ஆம் கவுன்சலிங்கில் நிரப்பப்படும்.
அநேகமாக நாளைய தினம் எவ்வளவு காலியிடம்
என்பதை அரசு அறிவித்து விடும். நான் சொன்னதை விட
அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஒரு பதிவில் ஆயிரம் பக்கம் உடைய RANK LIST பற்றி
எழுத முடியாது. MINIMUM MARK என்பது EXCEPTION
அல்லவே அல்ல. 109,110 என்று வரிசையாகச் சொல்ல முடியும்.
விவரங்களை (data) மேசையில் வைத்துக் கொண்டு,
அவற்றைப் பரிசீலித்தபின் பேசுவதற்கும், மனதில்
தோன்றியதையெல்லாம் பேசுவதற்கும் பாரதூரமான
வேறுபாடு உள்ளது. ,ஜெயேந்திரர், ஜேப்பியார் குழுமம்,
பச்சமுத்து என்று எல்லோரும் விலாவில் கத்திக் குத்துப்பட்டு
அழுது கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நச்சுப் பல்லை
நீட் பிடுங்கி விட்டது. சுயநிதிக் கொள்ளையர்களை
ஆதரிப்பவர்களும் அரண்டு போய் விட்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக