சனி, 16 செப்டம்பர், 2017

பிறந்த நாளுக்கு எதிராக பெரியார் 
================================-----------------
"வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?
பொதுவாக யாருக்குப் பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது.
நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள் தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கின்றானே ஒழிய, அதில் எந்தப் பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன்னாலேயே எவனும் வாழ்ந்துவிட முடியாது. அதுபோல, வசை கூறுவதால் எவரும் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை.
என்னை வாழ்த்துகிறவர்களைவிட வசை சொல்கிறவர்கள்தான் அதிகம். அதற்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்திருக்க முடியாது. எனவே, வாழ்த்துவதற்கும் வசை கூறுவதற்குமுள்ள பலன் ஒன்றேயாகும்.
வாழ்த்துவது வாய்க்கும், காதுக்கும்
இனிமையாக இருக்குமே தவிர பலனில் ஒன்று மில்லை.
(விடுதலை, 12.12.1968)
"ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக