திங்கள், 25 செப்டம்பர், 2017

பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமியை
அடித்து உதைத்த மே 17 ஒருங்கிணைப்பாளர்!
இந்த ஆணாதிக்க வெறி பிடித்த கயவனுக்கு
வக்காலத்து வாங்கிய திருமுருகன் காந்தி!
-----------------------------------------------------------------------------
1) மீனா கந்தசாமி என்னும் பெண் எழுத்தாளரை
வாசகர்களில் சிலரேனும் அறிவார்கள். IITயில்
பேராசிரியராகப் பணிபுரிந்த வசந்தா கந்தசாமியின்
மகள் இவர். மீனா கந்தசாமி ஆங்கிலத்தில்
எழுதும் எழுத்தாளர் என்பதால் தமிழ் வாசகர்கள்
மத்தியில் இவருக்கு அறிமுகம் குறைவு.

2) 2011 அக்டோபரில் மீனா கந்தசாமிக்கும் சார்லஸ்
அந்தோணி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கணவருடன் குடித்தனம் நடத்த கர்நாடக மாநிலம்
மங்களூருக்கு கணவரின் வீட்டுக்குச் சென்றார் மீனா.

3) ஆனால் மீனா-சார்லஸ் அந்தோணியின் இல்லறம்
மிக விரைவிலேயே முடிவுக்கு வந்தது. சந்தேகப்
பேர்வழியாகவும் தொட்டதற்கெல்லாம்  மனைவியை
அடித்து உதைக்கும் ஆணாதிக்க கொடூரனாகவும்
இருந்தார் சார்லஸ். அடி உதை காயங்களால்
உடம்பு புண்ணாகிப்போன மீனா உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள, வீட்டை விட்டு வெளியே வந்து, பின்னர்
கணவரை விவாகரத்து செய்தார் மீனா.       

4) யார் இந்த சார்லஸ் அந்தோணி? இவர்தான் மே 17
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். 2011இல் மே 17இன்
ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். மார்க்சியம்,
பெரியாரியம் எல்லாம் படித்த அறிவுஜீவியாம். இந்த
வெளிப்பூச்சில் ஏமாந்து போய் மீனா கந்தசாமி
தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டார்.

5) நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் என்று ஒன்று
இருக்கிறது தெரியுமா? (Govt in exile). இதன் பிரதமர்
திரு உத்திரகுமாரன் அவர்கள். மே 17இயக்கத்தின்
பிரதிநிதியாக, ஆணாதிக்கக் கயவன் சார்லஸ்
அந்தோணியை, நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தில்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக (MP) நியமித்தனர்
யார் தெரியுமா? வேறு யாருமல்ல, திருமுருகன்தான்.

6) மீனா கந்தசாமி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை
ஆங்கில ஏடு அவுட்லுக்கில் (Outlook) ஒரு கட்டுரையாக
எழுதி இருந்தார். அதற்கான லின்க் இக்கட்டுரையுடன்
(அல்லது கமென்ட் பகுதிலயில்) கொடுத்துள்ளேன்.
ஆங்கிலப் புலமையுள்ள வாசகர்கள் அதைப் படிக்கலாம்.

7) 19 மார்ச் 2012 Outlook ஆங்கில ஏட்டின் கட்டுரையில்
மீனா கந்தசாமி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"Married to a violent man who treats me with nothing but distrust;
my skin has enough hurt to tell its own story."

8) அவுட்லுக் கட்டுரையைத் தொடர்ந்து. கயவன்
சார்லஸ் அந்தோணிக்கு எதிராக கடுமையான
கண்டனங்கள் எழுந்தன. மே 17 இயக்கத்திலும்,
சார்லஸ் அந்தோணிக்கு எதிரான இப்போக்கு
தீவிரமாக எதிரொலித்தது. சார்லஸ் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி திருமுருகன் மீது நிர்ப்பந்தங்கள்
ஏற்பட்டன. ஆனால் திருமுருகன் சார்லசுக்கு எதிராக
ஒரு துரும்பைக் கூடத் தூக்கவில்லை. சார்லஸின்
தனிப்பட்ட வாழ்க்கையில் (personal life) தலையிட
முடியாது என்று ஆணாதிக்கத்துக்கு வக்காலத்து
வாங்கினார் திருமுருகன்.

9) வெளிநாட்டு கிறிஸ்துவ மத நிறுவங்களிடம் இருந்து
பெரும்பணம் பெறும் பொன்முட்டையிடும்
வாத்தான சார்லஸ் அந்தோணியை திருமுருகன்
எப்படி பகைத்துக் கொள்வார்?

10) எமது குற்றச்சாட்டுகளை திருமுருகனின் பழைய கூட்டாளி
திரு உமர் அவர்களும் உறுதி செய்கிறார். பார்க்க:
திரு உமரின் 400+ பக்க ஆவணம், பக்கம்-247,
பத்தி-556,557).
******************************************************************
பின்குறிப்பு: மீனா கந்தசாமியின் போராட்டத்தால்,
வெள்ளமென எழுந்த கண்டனங்களால், வேறு வழியின்றி
மே 17 இயக்கத்தை விட்டு வெளியேறினான் சார்லஸ்.
கயவன் சார்லஸ் அந்தோணி தன்னை ஒரு மார்க்சிஸ்ட்
என்று கூறிக் கொண்டு, படித்த அறிவுள்ள எழுத்தாளராக
இருக்கிற பெண்ணான மீனா கந்தசாமியை எப்படி
ஏமாற்றி இருக்கிறான் பாருங்கள். இந்த ஆணாதிக்க
வெறி நாய்க்கு திருமுருகன் வக்காலத்து.
---------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக