புதன், 27 செப்டம்பர், 2017

ராஜபக்சே செய்தது இனப்படுகொலை அல்ல!
ஈழத்தமிழனை இனப்படுகொலை செய்ததில்
இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை!
இதுதான் ராஜபக்சே கையாள் திருமுருகனின் நிலை!
-----------------------------------------------------------------------------------------------
2009இல் ஈழத்தில் சிங்கள ராஜபக்சே அரசுதமிழர்களை
இனப்படுகொலை செய்தது. சர்வதேச சமூகத்திற்கு
இந்த உண்மையை அறியச் செய்வதும், இனப்படுகொலை
செய்த குற்றவாளிகளை நீதியின் முன்னிறுத்தி
தண்டனை பெற்றுத் தருவதும் ஈழ ஆதரவாளர்கள்
மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமை ஆகியது.

இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க சர்வதேச
அளவில் மக்கள் தீர்ப்பாயங்கள் (Peoples'Tribunals)
ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று 2010இல் உருவான
டப்ளின் தீர்ப்பாயம்.

பின்னர் 2013இல் ஜெர்மனியில் உள்ள பிரேமன் (Breman)
என்ற ஊரில் ஏற்படுத்தப்பட்ட தீர்ப்பாயம். இந்த
பிரேமன் தீர்ப்பாயத்தில் பங்கேற்று இனப்படுகொலை
குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு மே 17
இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான
திரு உமர் என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு
இருந்தது.

நன்கு கவனிக்கவும். மே 17இன் தலைவரான திருமுருகன்
காந்தி அழைக்கப்படவில்லை. இனப்படுகொலை
குறித்து சாட்சியம் அளிக்க அருகதை உள்ளவர் என
திருமுருகன் காந்தி சர்வதேச சமூகத்தால் மதிக்கப்
படவில்லை. மாறாக, மே 17இன் இரண்டாம் இடத்தில்
இருந்த தலைவரான திரு உமர் மட்டுமே, அவரின்
சிறப்புத் தகுதி காரணமாக, அழைக்கப்
பட்டிருந்தார்.

உமருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருடன்
திருமுருகனும் பிரேமன் தீர்ப்பாயத்திற்குச் சென்றார்.
அங்கு சென்றதும்தான் திருமுருகனின் உண்மையான
கோரமுகம் வெளிப்பட்டது. அவர் இந்திய
உளவுத்துறையின் கையாள் என்பது நிரூபணம் ஆனது.

இனப்படுகொலையில் அமெரிக்கா, பிரிட்டன்
மட்டுமல்ல, இந்தியாவும் குற்றவாளியே என்ற
உண்மையை பிரேமன் தீர்ப்பாயத்தில் முன்வைக்க
வேண்டும். ஆனால் இந்த நோக்கத்திற்குப் பெரிதும்
தடையாக இருந்தவர் திருமுருகன். சர்வதேச
சமூகத்திற்கு ஈழத்தமிழர்களின் வேண்டுகோளை
 எடுத்துச் சொல்லும் "தமிழர் தீர்மானம்" என்ற
ஆவணம் வெளிப்பட்டு விடாமல் தன்னால்
இயன்ற அளவு தடுத்தார் திருமுருகன்.

மேலும் ஐ.நா சபையில் பேசும் வாய்ப்பை
ஈழ ஆதரவாளர்கள் இவருக்குப் பெற்றுத் தந்தனர்.
கிடைத்த வாய்ப்பில் இனப்படுகொலையில்
இந்தியாவின் பங்கு என்று பேசவேண்டிய
நேரத்தில், அதைப்பற்றியே பேசாமல் தவிர்த்து
இந்திய உளவுத்துறையின் கையாள் என்பதை
நிரூபித்தார் திருமுருகன். இதன் மூலம்
இனப்படுகொலைக்கு ஆளான ஒரு லட்சம் ஈழத்து
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தார்.

திருமுருகன் என்பவர் ஈழ ஆதரவாளர் அல்ல.
மாறாக இந்திய உளவுத்துறையின் கையாள்.
இவரை இயக்கியவர் அன்றைய மத்திய அமைச்சர்
ப சிதம்பரம்.

திரு உமர் தமது 400+ பக்க ஆவணத்தில் திருமுருகனை
தோலுரித்துள்ளார். அந்த ஆவணத்தை வாசகர்கள்
படிக்க வேண்டும். அது ஒரு ஆதாரம் ஆகும்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
சொந்த நாட்டிலே!
*************************************************************   
 
 

      
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக