சனி, 30 செப்டம்பர், 2017

ஐன்ஸ்டின் கூறிய புலச் சமன்பாடுகளும்
(Einstein's Field Equations)
முகப்பருக்கள் நிறைந்த இளம்பெண்ணின் முகமும்!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
1) வெளி (space) அதாவது அண்ட வெளியானது வளைந்து
இருக்கிறது என்றார் ஐன்ஸ்டின். மிகுந்த நிறையுள்ள
பொருட்கள் தாங்கள் இருக்கும்  இடத்தில் வெளியை
வளைத்து விடுகின்றன என்று மேலும் கூறினார்
ஐன்ஸ்டின்.

2) வெளி என்பது தனித்த ஒன்றாக இல்லை என்றும்
அது காலத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கிறது
என்றும் கூறிய ஐன்ஸ்டின் "வெளி-கால வளைவு"
(space time curvature) என்றே வெளியைக்  குறிப்பிட்டார்.

3) வெளி என்பது நாம் நினைப்பது போல, ஒரு சமதளப்
பரப்பாக இல்லை. குண்டும் குழியுமாக, மேடும்
பள்ளமுமாக, ஏகப்பட்ட முடிச்சுகளுடனும்
திருகல்களுடனும் இருக்கிறது.

4) முகப்பருக்கள் நிறைந்த  அழகிய பெண்ணின்
முகம் போல வெளி இருக்கிறது.

5) ஈர்ப்புப் புலம் (gravitational field) என்பது ஓர்
வெக்டர் புலம் (vector field) என்று கருதினார் நியூட்டன்.

6) ஆனால், ஈர்ப்புப் புலம் என்பது ஒரு டென்சார் புலம்
(tensor field) என்று கருதினார் ஐன்ஸ்டின்.

7) ஐன்ஸ்டினின் கொள்கைகளை அறிய அவரின்
புலச் சமன்பாடுகளைக் கற்க வேண்டும்.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும்
ஐன்ஸ்டினின் புலச் சமன்பாடுகளைக் கற்றவர்களும்
குறைவு; புரிந்து கொண்டவர்களோ மிகவும் குறைவு.

8) வெளி வளைந்து இருக்கிறது என்பதன் பொருள்
என்ன என்று புரிந்து கொள்ளாமல் ஐன்ஸ்டினின்
புலச் சமன்பாடுகளைப் புரிந்து கொள்ள இயலாது.

9) இவற்றை  புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
டென்சார் பற்றிய புரிதல் தேவை. டென்சார் அல்ஜீப்ரா
பற்றிய அறிவு தேவை.

10) எமது பரிசீலனையில் அறிவியல் படித்தவர்களிலேயே
டென்சார் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு.
மொத்த சமூகத்தின் புரிதல் மட்டத்தை
(level of understanding) இந்த லட்சணத்தில் வைத்துக் கொண்டு
ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல் கோட்பாட்டை
யாருக்கும் புரிய வைக்க இயலாது. பொதுச் சார்பியல்
கோட்பாட்டின் நூற்றாண்டும் வந்து போய் விட்டது.

11) எனவே டென்சார் பற்றி அறிய விரும்புவோருக்காக
வகுப்புகள் நடத்த நியூட்டன் அறிவியல் மன்றம்
உத்தேசித்துள்ளது. பண்டிகைக் கால விடுமுறைகள்
முடிந்தபின், வகுப்புகள் நடத்த இருக்கிறோம்.

12) குறைந்தது 10 பேர் முன்வந்தால் டென்சார்
பற்றிய அறிமுக வகுப்புகள் நடத்தப்படும்.

13) விரும்பத்தக்க தகுதி (eligibility: desirable):
டென்சார் வகுப்புக்கு வருவோர் குறைந்த பட்சமாக
B.Sc Physics B.E, B.Tech படித்தவர்களாக இருப்பது நல்லது.

14) கணிதத்தில் Matrix பகுதியில் eigen value கண்டுபிடிக்கத்
தெரிந்திருக்க வேண்டும். வலுவான physics அடிப்படை
இருத்தல் வேண்டும்.

15) மெய்யான ஆர்வமும் தகுதியும் உடையவர்கள்
முன்வந்தால், வகுப்புகள் சென்னையில் நடத்தப்படும்.
கட்டணம் எதுவும் கிடையாது.இல்லையேல் கைவிடப்படும்.
******************************************************************      

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக