திங்கள், 18 செப்டம்பர், 2017

ஆளுநர் ஒன்றும் செய்ய மாட்டார். செய்ய வேண்டிய
எந்த அவசியமும் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
98 பேரும் ராஜினாமா செய்தாலும் சட்டமன்றம் நடக்கும்.
ஆட்சி நடக்கும். இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம்.
இந்த மாதிரி mass resignation ஏற்கனவே 1970களில் பீகாரில்
நடந்தது. முழுப்புரட்சி (total revolution) என்ற பெயரில்
ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் இந்திரா
காந்தியை எதிர்த்து, எதிர்க்கட்சி MLAகள் ஒட்டு
மொத்தமாக ராஜினாமா செய்தனர். ஆனால் அன்றைய
பீஹார் முதல்வர் அப்துல் கபூர் ராஜினாமா செய்யவில்லை.  

இங்கு பெரும்பான்மை என்பது கம்யூனிஸ்ட் கட்சியில்
உள்ள பெரும்பான்மை. அரசு, ஆட்சி என்பவை  கம்யூனிஸ்ட்
கட்சிக்குக் கட்டுப்பட்டவை. கம்யூனிஸ்ட் கட்சியில்
செயல்படும் கட்சி அமைப்புக் கோட்பாடு லெனின்
வகுத்தளித்த ஜனநாயக மத்தியத்துவம்
(democratic centralism) ஆகும். இதன் பொருள் முடிவு
எடுக்கும் வரை ஜனநாயகமும் முடிவு எடுத்த பின்னர்
மத்தியத்துவமும் செயல்படும் என்பதே ஆகும்.

மார்க்சியம் உலகின் ஆகப்பெரிய சமூகநீதி. அதிலிருந்து
விலகுவதே மாபெரும் சமூக அநீதி. பிறழ்வு என்பது
எங்கும் உண்டு. எங்கும் அதற்குரிய வாய்ப்பு உண்டு.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக