1) எல்லா வகையான சமூகத் தீமைகளுக்கும்
எதிர்வினை ஆற்றுவது என்பது எம்மால்
இயலாதது. காரணம் என்னவெனில் அந்த அளவு
நேரம் முகநூலில் செலவழிக்க இயலாது.
**
2) எமது பதிவுகளில் பாதி அறிவியல்; பாதி அரசியல்.
பாதி அளவு பதிவுகள் நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
பதிவுகளாக இருப்பதை எவரும் அறியலாம்.
**
3) பெட்ரோல் விலையேற்றம், பணமதிப்பு நீக்கம்,
GST வரி ஆகிய தலைப்புகளில் கடந்த ஓராண்டில்
மொத்தமே இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதி உள்ளேன்.
காரணம்: இவை பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள்.
இதில் எமக்கு அக்கறை இல்லை. தினமும் ECONOMIC TIMES
படித்தால், பொருளாதாரம் பற்றி எழுதலாம். நான்
ECONOMIC TIMES படிப்பதே இல்லை. எனவே எழுதுவதும்
இல்லை.
**
4) எமது முகநூல் பக்கம் பிரதானமாக, அறிவியல்,
கல்வியியல் (academic), தத்துவம், மார்க்சியம் ஆகியவற்றுக்கு
மட்டுமே முன்னுரிமை தருவது.
**
5) கூத்தாடிகள் மேனன், சிவாஜி கணேசன், குடிகார
விஜயகாந்த், ரஜனி, கமல், சீமான்,விஜய் ஆகியோர் மிகச்
சிறந்த நடிகர்களாக இருக்கலாம். ஆஸ்கார் உள்ளிட்ட
விருதுகளை அவர்கள் பெறட்டும். எனக்கு ஆட்சேபணை
இல்லை. ஆனால் அவர்களின் அரசியல் எனக்கு
ஏற்புடையது அல்ல. அவர்களை நான் அங்கீகரிக்கவே
இல்லை. எனவே அவர்களைப் பற்றி பதிவு எழுத இயலாது.
பிக் பாஸ் பற்றி என்னால் எழுத இயலாது. அதை
இங்கு எதிர்பார்க்க வேண்டாம்.
**
6) சங்கராச்சாரி ஜெயேந்திரர் பற்றி ஏராளமான
பதிவுகள் எழுதப் பட்டுள்ளன. அவற்றைத் தேடி
எடுத்துப் படிக்கவும்.
**
7) எனக்கு அக்கறையும் ஆழ்ந்த புலமையும் உள்ள
விஷயங்களில் மட்டுமே கட்டுரைகள் (பதிவுகள்)
எழுதப்படும். ஆழ்ந்த புலமை இல்லாத விஷயங்களில்
பதிவு எழுதுவது இல்லை. பொருளாதாரம், வணிகம்,
சந்தை, வரியியல் ஆகியவை குறித்து எழுதுவது இல்லை.
பல குட்டி முதலாளித்துவ ஆசாமிகள் தங்களுக்கு
ஆனா ஆவன்னா தெரியாத விஷயங்களில் கூட
பதிவுகளை எழுதி தங்களின் அரிப்பைத் தீர்த்துக்
கொள்வார்கள். அந்த நடைமுறை (practice) எம்மிடம் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக