புதன், 27 செப்டம்பர், 2017

எல்லாம் இரட்டை இரட்டையாக இருப்பதில்லை!
Everything is not BINARY!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
1) இயற்கையிலும் சமூகத்திலும் இருமைகள் (binaries)
உண்டு. 

2) பகல்-இரவு, வெளிச்சம்-இருட்டு ஆகியன இருமைகள்.
நன்மை-தீமை, இன்பம்-துன்பம், உண்மை-பொய்
ஆகியன சமூகத்தில் காணும் இருமைகள்.

3) உலகில் இருமைகள் உண்டு. ஆனால், உலகில்
இருமைகள் மட்டுமே உண்டு என்று கருதுவது பேதைமை.

4) இயற்கையிலும் சமூகத்திலும் ஒருமையும் உண்டு,
இருமையும் உண்டு, மும்மையும் உண்டு, பன்மையும்
உண்டு. ஆதிசங்கரரின் அத்வைதம் ஒருமையைச் சுட்டுகிறது.
ஒருமை மட்டுமே என்கிறது. மத்வாச்சாரியாரின் துவைதம்
இருமையைச் சுட்டுகிறது. சீனத்தில் உள்ள யிங்-யாங்
கோட்பாடு ஓர் இருமைக் கோட்பாடு ஆகும்.

5) ஆனால் நுனிப்புல்லர்கள், எதையும் மேம்போக்காக
மட்டுமே அறிய முடிந்தவர்கள், எந்த ஒன்றின்
அடியாழம் வரையிலும் சென்று பார்த்து அறிய
இயலாதவர்கள் ஆகியோர் சமூகத்தில் 98 சதம்
உள்ளனர். இவர்களுக்கு இருமை மட்டுமே புரியும்.
இருமைக்கு மேற்பட்ட எதையும் இவர்களின் மூளை
விளங்கிக் கொள்ளாது.

6) கணிதமானது ஒருமை இருமையுடன் நின்று
விடுவதில்லை. எந்த ஒன்றிலும் n வரை (n = any number)
அல்லது infinity வரை கண்டறிய வேண்டியது
கணிதத்தின் பொறுப்பு.

7) ஆக, அறிவியலானது இருமையே விஷயங்களின்
எல்லை என்ற மூடத்தனத்தை ஏற்பதில்லை. மாறாக
அறிவியலானது பன்மைத்துவத்தை ஏற்கிறது.

8) இதுதான் தத்துவம். அதாவது ஒரு தத்துவக்
கோட்பாட்டை இங்கு எளிய முறையில் விளக்கி
இருக்கிறேன். இதை அன்றாட வாழ்க்கையில்
வாசகர்கள் பொருத்திப் பார்க்க வேண்டும்.

9) ஜெயலலிதா மரணம், மோடியின் புல்லட் ரயில்,
நடிகர் கமலஹாசனின் இன்றைய (26.09.2017) பேட்டி,
நீட் தேர்வு இப்படி எந்த ஒன்றுடனும் நீங்கள் மேற்கூறிய
தத்துவத்தைப் பொருத்திப் பார்க்கலாம். அப்படிப்
பார்க்கிற போது, மேற்கூறிய எந்த ஒன்றும்
எந்த இருமைக்குள்ளும் ( சரி-தவறு, நன்மை-தீமை
முதலியன) அடங்கி விடுவதில்லை என்பதை
உணர்வீர்கள்.
******************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக