திங்கள், 4 செப்டம்பர், 2017

மேனன் (MGR) ஆட்சிக் காலத்தில் மோகன்தாஸ்
உள்ளிட்ட சில மலையாள அதிகாரிகளைக் கொண்ட
ஒரு சிண்டிகேட் அமைத்துக் கொண்டு நக்சல்பாரிகள்  
வேட்டையாடப் பட்டனர். அப்போது மேனன் என்று
நக்சல்பாரி இயக்கத் தோழர்களால் MGR குறிப்பிடப்
பட்டார். மூத்த நக்சல்பாரித் தோழர்கள் இந்த வரலாற்றை
அறிவார்கள். இதுவே MGR என்பவர் மேனன் என்று
சுட்டப்பட்டதன் பின்னணி. இன்றைய இளைய
தலைமுறை இதை அறியாமல் இருப்பதில் வியப்பில்லை.
**
அடுத்து Y2K என்பது கணினியில் ஆண்டுகளைக்
 குறிப்பிடும் முறையில் எழுந்த ஒரு தொழில்நுட்பச்
சிக்கல். 2000 ஆண்டின் பின் வருகிற ஆண்டுகளை
குழப்பமின்றி தெளிவுபட எழுதுவதற்கான தீர்வே
Y2Kயின் தீர்வு. ddmmyy என்பது ddmmyyyy என்று ஆனதுதான்
Y2Kயின் தீர்வு. இது அறிவியல் உலகம் சந்தித்த ஒரு எளிய பிரச்சினை. அதற்குத் தீர்வும் காணப்பட்டது. இது எப்படி
அரசியல் சிக்கலாகும்?
    

இப்படிச் சொல்லித்தான் காலம் காலமாக ஏமாற்றிக்
கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு
சாதி உணர்வு கிடையாது என்று அவர்களுக்கு
நாம் விடுதலை கொடுத்து விட முடியாது. வாய்ப்பு
கிடைக்கிற போதெல்லாம் சாதியை அனுசரித்து
லாபம் பார்ப்பவர்கள்தான் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக