திங்கள், 11 செப்டம்பர், 2017

சமூகநீதி என்றால் என்ன?
------------------------------------------------
மேற்குறித்த பின்னூட்டம் சமூகநீதி குறித்த
பிறழ் புரிதலை வெளிப்படுத்துகிறது. சமூகம்
என்பது அரசு எந்திரத்தின் வழியாகச் செயல்படுகிறது.
அரசு எந்திரம் (state machinery)  அதாவது அரசு இல்லாமல்
சமூகம் செயல்படுவதில்லை. சமூகநீதி என்பது
ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில், அரசானது
குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை
வழங்குவதாகும். தங்களின் உதாரணத்தில்,
மேற்குறித்த A, B  இருவருக்கும் அரசானது சம வாய்ப்புகளை வழங்குமேயானால், அங்கு சமூகநீதி செயல்படுகிறது
என்று பொருள்.
**
குடிமக்கள் தம் சொந்த முயற்சியில் தங்களை
மேம்படுத்திக் கொள்ளும் செயல்களை, தங்களின்
வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் செயல்களை 
சமூகநீதிக்கு எதிரானவை என்று கருதுவது
பிறழ்புரிதல்  ஆகும்.
**
A, B என்று இரு மாணவர்கள். Aயின் தந்தை பொறியியல்
படித்தவர். Bயின் தந்தை எம்.ஏ தமிழ் இலக்கியம்
படித்தவர். போட்டித்தேர்வு வருகிறபோது, பொறியியல்
படித்த தந்தை தன மகன் Aக்கு பாடங்களைச்
சொல்லிக் கொடுத்து தேர்வுக்கு ஆயத்தம் செய்கிறார்.
எம்.ஏ.இலக்கியம் படித்த தந்தையால் தன் மகன் B க்கு
போட்டித்தேர்வில் உதவி செய்ய இயலாது. இந்நிலையில்
பொறியியல் படித்த தந்தையின் மகன் போட்டித்தேர்வில்
வெற்றி பெற்று பொறியியல் இடம் பெறுகிறான்.
இங்கு சமூகநீதி மீறப்பட்டுள்ளது என்று கருத இயலாது.
அப்படிக் கருதுவது பிறழ் புரிதல் ஆகும்.

     

1) திருநெல்வேலியில் நான் படித்த அரசுப்பள்ளியில்
என்னுடன் படித்த சில மாணவர்கள் மதிய உணவு
கொண்டு வர மாட்டார்கள். காரணம் வறுமை.
பின்னர் வந்த எம்ஜியார் அரசு சத்துணவு போட்டது.
2) இன்று இலவசமாக பாடப்புத்தகங்கள், லாப்டாப்,
சைக்கிள்,சீருடை என படிப்பதற்கான materials
அரசால் இலவசமாக வழங்கப் படுகின்றன.
3) அரசுப் பள்ளிகளில் கட்டணம் (fees) கிடையாது.
4) மேற்கூறிய அனைத்தும் AFFIRMATIVE ACTIONS எனப்படும்.
**
5) இவற்றின் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்
படுகிறது.
6) ஏழை பணக்காரன் என்னும் இரு பிரிவினருக்கு
இடையிலான வேற்றுமைகள் (DISPARITIES) அரசால் அகற்றப்
படுகின்றன.
7) அரசு மேற்கொண்ட இச்செயல்களையே எவரேனும்
ஒரு உள்ளூர் வள்ளல் (LOCAL PHILONTHROPHIST செய்யலாம்.
அவரால் மொத்த சமூகத்திற்கும் செய்ய இயலாது.
வள்ளல் செய்யும் உதவிகள் welfare activities என்ற வகையில்
வரும். அரசு தன் அதிகாரத்தைக் கொண்டு செய்வன
மட்டுமே affirmative actions எனப்படும்.  affirmative actions என்பவை
சமூகநீதியை நிலைநாட்டுபவை.  

நீங்கள் விவாதம் செய்யுங்கள்! அதில் நான் பங்கேற்று
ஆட்டத்தின் சமநிலையை பாதித்து விடக் கூடாது.
தாமிரபரணி மணலில் நீங்களெல்லாம் சடுகுடு
விளையாடும்போது, நான் அதில் பங்கேற்கக்
கூடாதுதான். இங்கு social justice, affirmative action ஆகியன
குறித்து ஒரு புரிதலை உருவாக்கவே நான் தலையிட்டேன்.
நீங்கள் தொடர்ந்து விவாதியுங்கள்.நன்றி. 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக