வெள்ளி, 15 செப்டம்பர், 2017

1) ஜேப்பியார், ஜெயேந்திரர். பச்சமுத்து, ஜகத் ரட்சகன்
ஆகிய சுயநிதிக் கல்வித் தந்தைகளின் குரலையே
இந்த அம்மையார் ஒலிக்கிறார். ஒரு MBBS சீட்டுக்கு
ரூ 1 கோடி முதல் 5 கோடி வரை கொள்ளையடித்துச்
சுரண்டிய சுயநிதி முதலைகளின் குரல்.
2) நீட் தேர்வு ஒரு உலகத் தேர்வு (GLOBAL TEST) என்று இவர்
கூறுவது அசட்டு முட்டாள்தனத்தின் உச்சம். நீட் தேர்வு
இந்தியத் தேர்வு மட்டுமே; அது இந்தியாவில் மட்டுமே
செல்லும். நீட் தேறிவிட்டேன் என்று கூறிக்கொண்டு
உலகின் எந்த நாட்டு மருத்துவக் கல்லூரியிலும்
சேர முடியாது.
3) அரசு இடங்கள் இந்திய மாணவர்களுக்கு மட்டுமே.
NRI, OCI, PIO மாணவர்கள் எவரும் இந்தியாவின்
மொத்தமுள்ள 29 மாநிலங்களிலும் இருக்கின்ற
மாநில அரசுகளின் அரசுக் கல்லூரி இடங்களிலோ
அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ  சேர முடியாது.
அந்த இடங்களில் இந்திய மாணவர்கள் மட்டுமே
சேர முடியும். இது தெரியாமல் இவர் உளறுகிறார்.
4) தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்
பல்கலைகளின் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமே NRI, OCI,PIO மற்றும்
Foreign nationals சேர முடியும். 
5) இந்தக் குட்டி முதலாளித்துவ அம்மையார்
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொய் என்பதை
தரவுகள் நிரூபிக்கின்றன.
6) NEET UG தேர்வை CBSEதான் நடத்துகிறது. CBSE தவிர
வேறு யாரும் நடத்தவில்லை. கேள்வித்தாள் தயாரிப்பு,
விடைகள் தயாரிப்பு உள்ளிட்டவற்றை CBSE மட்டுமே
நடத்துகிறது.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக