குட்டி முதலாளித்துவ நீட் எதிர்ப்பாளரின்
உலகமே வியந்து நோக்கும் அறிவுத்திறன்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

1) அந்த வீட்டுக்குள் நுழைந்த நீட் எதிர்ப்பாளர்
கவிமுரசு இசக்கி வேந்தன் "தம்பி, அப்பா இருக்காரா?"
என்றார். படித்துக் கொண்டிருந்த பையன் அவரை
வரவேற்று அமரச் சொன்னான்.
2) பையன் +2 மாணவன். Physics பாடத்தைப் படித்துக்
கொண்டிருந்தான். "B B ROY Great Briton Very Good Wife" என்று
திரும்பத் திரும்பச் சொல்லி எழுதிப் பார்த்துக்
கொண்டிருந்தான் பையன். இசக்கி வேந்தன் அதிர்ச்சி
அடைந்தார். பையனுக்கு இப்போதே WIFE வேண்டுமா
என்று ஆத்திரம் கொண்டார் கவிமுரசு.
3) அடுத்து Trigonometryயைப் படிக்கத் தொடங்கிய
பையன், அடிக்கடி "ALL SILVER TEA CUPS" என்று சொல்லிக்
கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தான்.
கல்யாண சீர்வரிசைப் பாத்திரங்கள் எல்லாம்
வெள்ளியில் இருக்க வேண்டும் என்று பையன்
கண்டிஷன் போடுகிறான் என்று புரிந்து கொண்ட
நீட் எதிர்ப்பாளர் இசக்கி வேந்தன் பையன் மீது
ஒரு வன்மத்தை வளர்த்துக் கொண்டார். .
4) "ALL SILVER TEA CUPS" என்பது Trigonometryயில்
ஒவ்வொரு கால்வட்டத்திலும் T ratios என்ன signஉடன்
இருக்கும் என்பதை நினைவில் இருத்தும் ஒரு
வாசகம்.
5) "B B ROY Great Briton Very Good Wife" என்பது RESISTORகளின்
COLOUR CODEஐ நினைவில் இருத்தும் ஒரு வாசகம்.
6) நமது நீட் எதிர்ப்பாளர் கவிமுரசு SSLCயில் பெயில்
ஆனவர். கணக்கும் சயன்சும் வராததால் செப்டம்பர்
எழுதியும் தேறாமல் படிப்புக்கு கொள்ளி வைத்தவர்.
தற்போது ஒரு பிரபல அரசியல் கட்சியில் மாவட்ட
அளவில் பொறுப்பில் இருப்பவர். Trigonometry, Physics
என்பதையெல்லாம் அவரால் மேற்கூறியவாறுதான்
புரிந்து கொள்ள முடியும்.
7) முன்னர்க்கூறிய எதுவுமே நகைச்சுவை அல்ல.
இதுதான் யதார்த்தம். நீட் எதிர்ப்பாளர்களின் அறிவு
வளர்ச்சி என்பது இப்படித்தான் இருக்கிறது.
இதனால்தான் எந்தப் பொய்யையும் இவர்களால்
சமூகத்தில் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி
பரப்ப முடிகிறது. இந்த வரிசையில் தற்போது
இவர்கள் கூறி வருவது இன்னொரு பொய்.
அது இதுதான்.
8) நீட் தேர்வு ஒரு உலகளாவிய GLOBAL தேர்வு என்ற
ஒரு குட்டி முதலாளித்துவ நீட் எதிர்ப்பாளரின் இழிந்த
பொய்யை தற்போது இவர்கள் பரப்பி வருகின்றனர்.
9) உண்மை என்ன? நீட் தேர்வு ஒரு குளோபல்
தேர்வு அல்ல. அது முற்ற முழுக்க ஒரு இந்தியத் தேர்வு
மட்டுமே.
10) நீட் தேர்வை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
அது தேவையும் இல்லை. நீட்டில் தேறி விட்டேன் என்று
கூறிக் கொண்டு அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ
மருத்துவப் படிப்பில் இடம் பெற முடியாது.
11) வெளிநாட்டினர் (FOREIGNERS), NRI ஆகியோர்
மாநில அரசுகளின் மருத்துவ இடங்களுக்கு
விண்ணப்பிக்கவே முடியாது. அரசு MBBS இடங்கள்,
தனியார் சுயநிதிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு
இடங்கள் ஆகியவற்றில் இவர்களுக்கு இடம் கிடையாது,
12) நிகர்நிலை பல்கலைகளின் நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக
ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு
இடங்கள் ஆகியவற்றில் மட்டுமே FOREIGNERS, NRI
ஆகியோர் விண்ணப்பிக்க முடியும்.
13) இது தெரியாமல் அரசு இடங்களை வெளிநாட்டினர்
கைப்பற்றுவதாக, தனியார்மயத்தின் கைக்கூலிகளான
இந்த நீட் எதிர்ப்பாளர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர்.
14) அடுத்து, அமெரிக்காவின் புரோமெட்ரிக்
நிறுவனம்தான் கேள்வித்தாள்களைத் தயாரிக்கிறது
என்ற பொய்யைத் தோலுரிக்கலாம். (தொடரும்).
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக