புதன், 27 செப்டம்பர், 2017

1) இது நேற்றைய கதை. நல்வாய்ப்பாக வதந்தி
முடிவுக்கு வந்து விட்டது. என்னுடைய அனுபவத்தில்
கலைஞர் பற்றிய வதந்தியைக் காண்பது இது
முதல் முறையன்று.
2) 200 ரூபாய் இருந்தால் போதும்; இந்தியாவில் எவர்
வேண்டுமானாலும் மதக்கலவரத்தை உண்டு பண்ணி
விடலாம் என்னு ஒரு முறை கூறினார் திரு மார்க்கண்டேய
கட்ஜு. கலவரங்களின் மூலத்தை ஆராய்ந்தால், அவை
எல்லாமே வதந்தியால் உருவானவை என்று தெரியவரும்.
3) வதந்திகளால் சட்டம் ஒழுங்கு குலைகிறது. பொது அமைதி
கெடுகிறது. பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரி,
அலுவலகம் அனுப்பிஇருக்கும் பெற்றோர்கள் வயிற்றில்
நெருப்பைக் கட்டிக் கொண்டு பதைபதைப்புடன்
இருக்க நேர்கிறது.
4) எந்தச் சூழ்நிலையிலும் வதந்திகளால்
நற்பயன் எதுவும் விளையப் போவதில்லை.எனவே
வதந்திகளை மூர்க்கத்தனமாகவும் முரட்டுத் தனமாகவும்
அணுக வேண்டியதும் நம் கடமையாக உள்ளது.
5) கலைஞர் சாகாவரம் பெற்றவர் அல்லர். தம் அந்திம
காலத்தில் உள்ளார் என்பது உண்மையே. அதற்காக
சமூக விரோதிகள் வதந்தியைக் கிளப்ப அனுமதிக்க
முடியாது. வதந்திகள் முளையிலேயே கிள்ளப்பட
வேண்டும். So ZeroTolerance towards roumours is a must.
6) அறிவியல் பாடத்திலோ கணக்கிலோ ஒரு மாணவன்
எழுப்பும் சந்தேகத்தை அணுகுவது போல,
மென்மையாக வதந்திகளை அணுக முடியாது.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக