செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வேந்தர் மூவிஸ் மதனும் பச்சமுத்துவும்
கடந்த ஆண்டு ஏன் கைது செய்யப் பட்டார்கள்?
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கோரியதாலா?
MBBS சீட்டை ஒரு கோடிக்கு விற்ற குற்றமா? தால்தானே!
பதில் சொல்லுங்கள் பச்சமுத்து எடுபிடிகளே!

கடந்த ஆண்டு ரூ 1 கோடி  பச்சமுத்து, சீட் தராமல்
ஏமாற்றியதாகச் சொல்லி பெற்றோர்கள் கொடுத்த
புகாரில் பச்சமுத்து கம்பி எண்ணினான். வேந்தர் மூவிஸ்
மதன் வட இந்தியாவுக்கு ஓடிப் போனான்?  நீட்டை
 எடுத்த கயவன் இவன்தானே!

கடந்த ஆண்டு MBBS சீட் = 80 லட்சம் முதல் 1 கோடி.
இந்த ஆண்டு 12 லட்சம் என்று அறிவித்தும் 80 சதம்
இடம் காலி! எனவே யார் பிழைப்பில் மண் விழுந்தது
என்று மூளை உள்ளவன் சிந்திப்பான்.நிரம்பவில்லை.

இடப்படியே,

எடப்பாடியே,
பெற்றோர்களுக்கு இன்னும் ரூ 65 கோடி
பணத்தை திருப்பிக் கொடுக்காத
சுயநிதிக் கயவன் பச்சமுத்துவின்
ஜாமீனை ரத்து செய்! ஜாமீனை ரத்து செய்
டிவியை அரசே கைப்பற்று!

என்ன செய்ய வேண்டும் என்ற
லெனினின் நூலைப் படித்துப் புரிந்து
உட்கிரகித்துக் கொள்ளாதவன்
ஒரு மார்க்சியவாதியாக
தொழிற்சங்கத்தில் செயல்படவே முடியாது.

"குறட்கு நீரருத்தி வையைக் குடிஞையாய்
ஒழுகும் கங்கை" என்ற தொடரில் அருத்தி என்பது
"நீரை அருந்த வைத்து"என்ற பொருளில் வருகிறது.
தாய் குழந்தைக்கு உணவு ஊட்டினாள் என்பதை
தாய் உண்பித்தாள் என்று கூறுகிறோம். அதே
போன்றதுதான் அருத்தி என்பதும். உண்-உண்பி,
அருந்து-அருத்து என்பனவற்றைக் காண்க.         


லெனின் அவர்கள் எழுதிய ஒரு முழுநூலின் சாரத்தை
ஒரு முகநூல் பதிவில் யாராலும் எழுதி விட முடியாது.
இந்த நூல் ஒரு POLEMICAL DEBATES என்னும் கருத்தியல்
விவாதங்களின் தொகுப்பு. லெனின் தம் சம காலத்திய
திருத்தல்வாதிகளான மார்ட்டினோவ் போன்றோருக்கு
அளித்த பதில்கள் இந்நூலின் பெரும் பகுதியாக
அமைந்துள்ளன. ரபோச்சிய தேலா, ரபோச்சிய  மிஸில்
ஆகிய பத்திரிகைகளில் திருத்தல்வாதிகள் எழுதிய
கருத்துக்களுக்கு முதுகெலும்பை முறிக்கும் பதிலைத்
தருவார் லெனின்.   
**
பொருளாதாரப் போராட்டமே எல்லாம் என்று
கருதிய திருத்தல்வாதிகளுக்கு, அரசியலற்ற
வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான
போராட்டம் ஒருபோதும் தொழிலாளி வர்க்கத்திற்கு
அரசியல் போதனை அளிக்காது என்று நிறுவுவார்
லெனின்.போலீசின் ஒவ்வொரு அடக்குமுறையையும்
எதிர்த்துப் போராடாமல் தொழிலாளி வர்க்கம்
அரசியல் அறிவைப் பெற முடியாது என்று நிரூபிப்பார்
லெனின்.
**
ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்பார் லெனின்.
எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்விக்கு லெனின்
அளித்த பதில் இது.இஸ்க்ரா இப்படித்தான் பிறந்தது.
**
எளிதில் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய
ஒரு நூல் இது. ஒரு மணி நேரச் சொற்பொழிவில்
மட்டுமே முழு நூலின் சாரத்தையும் வெளிக்கொணர
முடியும்.    
 

ஆம், தன் வினை-பிறவினை பற்றி
வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். அருத்தி என்பது
பிறவினை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக