ஊபா சட்டத்தில் பழங்குடிப் பெண் கைது!
கள்ள மௌனம் காக்கும் போலி கம்யூனிஸ்டுகளும்
போலி முற்போக்குகளும்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
மார்ச் 8ல் சர்வதேச மகளிர் தினம். இந்த நாளில் (08.03.2021)
சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் ஊபா (UAPA) சட்டத்தில்
கைது செய்யப் படுகிறார். ஊபா சட்டம் மட்டுமின்றி,
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட வேறு சில
சட்டங்களும் அவர் மீது பாய்ந்துள்ளன.
ஆதிவாசிகள் பழங்குடியினர் நலனுக்காக உழைக்கும்
இந்தப் பெண் மட்கம் ஹிட்மே (Ms Madkam Hidme) என்பவர்
ஆவார். இவரின் வயது 40க்குள்தான்.
சத்திஷ்கரின் பஸ்தார் (Bastar) போலீசால் கைது செய்யப்பட்ட
மட்கம் ஹிட்மே என்னும் இந்தப்பெண் பஸ்தாரில் உள்ள
ஜகதல்பூர் (Jagdalpur) சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இந்தப்பெண் ஒரு மாவோயிஸ்ட் என்று சொல்கிறது
போலீஸ். இது அப்பட்டமான பொய். அந்தப்பெண்
மாவோயிஸ்டு அல்ல; அவர் வெறும் TRIBAL ACTIVISTதான்.
போலீஸ் நினைத்தால் யாரையும் மாவோயிஸ்ட் என்று
சொல்லலாம்.
சில நாட்களுக்கு முன் (பெப்ரவரி 2021) பண்டே கவாசி
(Pande Kawasi) என்னும் ஒரு மாவோயிஸ்ட் பெண்மணி
சட்டிஸ்கர் போலீசிடம் சரண் அடைந்தார். அவர் தூக்கில்
தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
போலீஸ் மிருகங்கள் அவளைக் கொன்று விட்டன.
இதைக் கண்டித்து நூற்றுக் கணக்கான பழங்குடிப்
பெண்களைத் திரட்டி ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை
நடத்தினார் மட்கம் ஹிட்மே. இதனால் ஆத்திரமுற்ற
போலீஸ் அவரை ஊபா சட்டத்தில் கைது செய்துள்ளது.
மட்கம் ஹிட்மே பழங்குடிப் பிள்ளைகளுக்கான ஒரு
பள்ளி விடுதியில் வார்டானாகப் பணியாற்றுகிறார்.
இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவர் மீதான ஊபா போன்ற கொடிய சட்டங்கள்
விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் இந்தியாவில் இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக
இடதுசாரிகள் முற்போக்காளர்கள் எனப்படுவோரிடம்
இடம் இருந்து ஒரு குரல் கூட எழும்பாது. ஏன் தெரியுமா?
மட்கம் ஹிட்மே என்னும் இந்தப் பெண்ணைக் கைது
செய்து சிறையில் அடைத்திருப்பது சட்டிஸ்கரின்
காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல்
(Bhupesh Bhagel) இபெண்ணின் மீதான கொடிய மனித
உரிமை மீறலை நடத்தி உள்ளார். பாஜகவின் அடக்குமுறை
என்றால் வரிந்து கட்டிக்கொண்டு கண்டிக்க முன்வரும்
போலி இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள், போலி
முற்போக்காளர்கள் காங்கிரஸ் அரசின் மிருகத்தனமான
அடக்குமுறையைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
இந்தப் போலிகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ்
கட் சியானது ஒரு ஜனநாயக சக்தி ஆகும். மேலும்
இது தேர்தல் நேரம் ஆகும். சகல போலி இடதுசாரிகளும்,
சகல போலி முற்போக்குகளும் சகல போலி
நக்சல்பாரிகளும் காங்கிரஸிடம் காசு வாங்கி
விட்டார்கள்.
அவர்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றிக்குத்
தேர்தல் வேலை செய்ய வேண்டும். வாங்கிய காசுக்கு
வஞ்சகமின்றி உழைக்க வேண்டும். உதயநிதியின்
வெற்றிக்காக தோள்கள் காய்ப்பேறும்வரை உழைக்க
வேண்டும். அவர்களின் அஜெண்டாவில் பழங்குடி
மக்களின் பிரதிநிதிக்கு எந்த இடமும் இல்லை.
"இடைவெளி" இணையதளத்தில் புரட்சிகரக் கட்டுரை
எழுதி காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றிக்கு
உழைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளார்
மருதையன். அதே வேகத்தில் உதயநிதியின் பெயரை
வலது கையில் பச்சை குத்திக் கொண்ட மருதையனும்
அவரின் கூட்டாளிகள் கோவன், காளியப்பன் இன்ன
பிறரும் கை சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு வீடு வீடாக
ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம்
போய் சட்டிஸ்கர் காங்கிரஸ் அரசின் மனித உரிமை
மீறலைக் கண்டிக்கச் சொன்னால் கண்டிப்பார்களா?
ஜனசக்தி தீக்கதிரில் இந்தச் செய்தி வெளியாகுமா?
காங்கிரஸ் அரசின் மீதான கண்டனக் கட்டுரைகள்
ஜனசக்தியிலோ தீக்கதிரிலோ வெளியாகுமா?
காங்கிரஸ் பாஜக இரண்டுமே இந்திய ஆளும் வர்க்கக்
கட்சிகள்தான். தேவையை ஒட்டி இரண்டுமே பாசிசத்
தன்மை அடையும்தான். சத்தீஸ்கரில் யார் ஆண்டாலும்
பழங்குடிகள் ஒடுக்கப் படுவது தொடரும்.
காங்கிரசானது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்தி என்றும்
பாஜக மட்டும்தான் பாசிச சக்தி என்றும் வரையறுப்பது
இமாலயத் தவறாகும். காங்கிரஸிடம் இருந்து காசு
வாங்கிய பிழைப்புவாதக் கும்பல், தான் காசு வாங்கியதை
மறைக்க, காங்கிரஸானது ஒரு ஜனநாயக சக்தி என்ற
பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. இதை
கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் முறியடிப்பார்கள்.
அவர்கள் மருதையன் போன்ற போலிகளின் முகத்தில்
காரி உமிழ்வார்கள்.
********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக