திங்கள், 15 மார்ச், 2021

கண்டிப்பான தலைமையாசிரியராக ஏ எம் கே!

(எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள்)

-------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி

--------------------------------------------------------------------    

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 

இருந்ததும் இந்நாடே- அதன் 

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 

முடிந்ததும் இந்நாடே.

...........................-இதை 

வந்தனை கூறி மனதினில் இருத்தி  

வாயுற வாழ்த்தேனோ இதை 

வந்தே மாதரம் வந்தே மாதரம் 

என்று வணங்கேனோ. 


பாரதியின் பிரசித்தி பெற்ற இந்தப்பாடல் நூறு ஆண்டுகளுக்கு 

முந்தியது, இதில் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி என்று

பாரதி எழுதியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

அது எப்படி, தாயும் தந்தையும் கூடிக் குலாவி இருந்ததை 

ஒரு மகன் எழுதலாம்? இது கண்ணியக்குறைவான

செய்கை ஆயிற்றே  என்று கண்டனங்கள் எழுந்தன.


நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பாரதி எழுதியதில் 

தவறில்லை என்று நம் சமூகம் புரிந்து கொண்டு விட்டது.

இந்தப் புரிதல் வந்து  சேர்வதற்கு தமிழ்ச் சமூகத்துக்கு 

ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டு இருக்கிறது.        

 

பாரதி இதை மட்டும் எழுதவில்லை. தெய்வங்கள் மீது காதல் 

என்றும் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அது எப்படி? 

வணங்க வேண்டிய தெய்வங்களைக் காதலிப்பதா என்று 

சிந்தனைக் குள்ளர்கள் ஆட்சேபம் தெரிவிக்கலாம்.


"பின்னோர் ராவினிலே பெண்மை அழக்கொன்று 

வந்தது கண்முன்பு 

கன்னி வடிவமென்றே களிகொண்டு

சற்றே அருகில் சென்று பார்க்கையிலே"


இரவு நேரம்; நல்ல இருட்டு. தூரத்தில் ஒரு உருவம் 

வருகிறது. அது ஒரு கன்னிப்பெண்ணைப் போலத் 

தெரிகிறது. பெண் என்றதுமே மனம் களிப்படைகிறது.

இன்னும் சற்று நெருக்கமாகச் சென்று பார்க்கையிலே.....

என்ன நடக்கிறது?


வந்தது பெண்தான். ஆனால் காதலி அல்ல.

வந்தவள் தாய். வந்தவள் ஆதி பராசக்தி. அன்னையைக் 

கண்டதும் பாரதி ஆவேசம் அடைகிறார்.


"அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா 

இவள் இன்னருள் வேண்டுமடா பின்பு 

யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா."


காலத்தை மீறிச் சிந்திக்கும் யார் எவரும் பாரதியைப் 

போன்றே சமூகத்தின் புரிதலின்மையை எதிர்கொள்ள 

நேரும். புரிதலின்மை என்ன செய்யும்? அது 

பிறழ்புரிதலுக்கு இட்டுச் செல்லும். 


இந்திய சமூகம் பெருத்த ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட 

ஒரு சமூகம் (highly heterogeneous).எனவே இங்கு புரிதலின்மையும் 

பிறழ்புரிதலும் இயல்பாகவே மிகவும் அதிகம். மாறாக 

ஐரோப்பிய சமூகம் பெருவாரியாக ஒருமித்த சமூகம் 

(homogeneous) . எனவே அங்கு புரிதலின்மையும் 

பிறழ்புரிதலும் வெகுவாகக் குறைவு. இங்கு எழுதுபவனுக்கும் 

அதை வாசிப்பவனுக்கும் இடையில் பாரதூரமான 

வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே பிறழ்புரிதலே 

நமது சமூகத்தில் இன்றைய காலத்தின் ஒழுங்காக 

இருக்கிறது (misunderstanding has become the order of the day).    


ஏ எம் கே அவர்களுடனான  ஒரு சந்திப்பின்போது,

நெடுங்காலமாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு தத்துவப் 

பிரச்சினையை எழுப்ப விரும்பி அவரிடம் அனுமதி 

கோரினேன். அவர் அனுமதித்ததும் இயங்கியல் 

(DIALECTICS) குறித்த எனது அறிவியல் வழிப்பட்ட 

புதிய கருத்துக்களை அவரின் பரிசீலனைக்கு 

முன்வைத்தேன். (இயங்கியல் குறித்து இங்கு ஒரு வரி 

கூடச் சொல்ல இயலாது. அது புரிதலின்மையை 

பிறழ்புரிதலை ஏற்படுத்தும். எனவே தனியாக ஒரு கட்டுரை பின்னர் எழுதப்படும்).


இடையிடையே நிறையக் குறுக்குக் கேள்விகளைக் 

கேட்டு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைத் 

துல்லியமாகப் புரிந்து கொண்டார் ஏ எம் கே. நான் 

சொன்னது சரி என்று அவர் கூறவில்லை. அதே 

நேரத்தில் தவறு என்றும் கூறவில்லை. பரிசீலிப்போம் 

என்றார். என் தோளில் தட்டி, "you are thinking ahead of times" 

என்றார்.("நீ காலத்தை மீறிச் சிந்திக்கிறாய்" என்று 

அதற்குப் பொருள்).


His remarks had brought goose bumps on my entire body. 

காலத்தை மீறிச் சிந்திப்பதாக ஏ எம் கே அவர்கள் 

கூறியதைக்  கேட்டதும் உடல் முழுவதும் goose bumps 

விளையக்  கண்டேன்.மயிர்க் கூச்செறிந்தது.


மகத்தான மார்க்சிய லெனினிய சிந்தனையாளரும் 

இந்தியாவின் லெனின் என்று போல்ஷ்விக் தோழர்களால் 

போற்றப் படுபவருமான தோழர் ஏ எம் கே அவர்கள் 

காலத்தை மீறிச் சிந்திக்கிறாய் என்று எனக்கு வழங்கிய 

சான்றிதழ், நான் இயற்பியலில் பட்டம் பெற்றது போன்ற 

உணர்வை ஏற்படுத்தியது. என்னிடம் ஏ எம் கே அவர்கள் 

கேட்ட பல கேள்விகள் வைவாவின்போது External Examiner 

கேட்ட கேள்விகளை நினைவூட்டின.  


அறிவாற்றலும் ஆளுமையும் நிரம்பிய ஏ எம் கே பழகுவதற்கு 

இனியவர்; யாரையும் சுலபத்தில் வசீகரித்து விடுபவர்.

என்றாலும் ஒரு கண்டிப்பான தலைமையாசிரியர் போன்றே 

அவர் கருதப்பட்டார்; மதிக்கப் பட்டார். He was a strict disciplinarian. 


18ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் ஆலிவர் 

கோல்டுஸ்மித்தின் The village school master கவிதையைப் 

படித்து இருக்கிறீர்களா? அதில் கோல்ட்ஸ்மித் உருவாக்கிய  

பள்ளித் தலைமையாசிரியர்  பாத்திரம் ஏ எம் கேவுக்கு 

கனகச்சிதமாகப் பொருந்தும்.


There, in his noisy mansion, skill'd to rule,
The village master taught his little school;
A man severe he was, and stern to view,

..............................................

'Twas certain he could write, and cipher too:
Lands he could measure, terms and tides presage,
And e'en the story ran that he could gauge.

In arguing too, the parson own'd his skill.

-------------------------------------------------------------

பின்குறிப்பு:

இக்கட்டுரை மார்க்சிய வாசகர்களுக்கு மட்டுமானது. 

பிறழ்புரிதலைத் தவிர்க்க மற்றவர்கள் இக்கட்டுரையைப் 

படிக்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

*********************************************************** 

   

 

        





railway strike black leg george fernandez speech in parliament 

those who were loyal employees now teach das capital classes

non veg food chollamuthu pillai oliver goldsmith village school master

amk appreciated he is a strict disciplinerian 


cultural compromise advice by whole timer Suganthan 


charu always say நம் அன்புக்குரிய இந்தியா 


SMULE SINGER AMEATURE 


GOOSE BUMPS  மயிர்க்கூச்செரியும் 


காபுலிவாலா TAGORE   ///////////// மருதையன் அத்திம்பேர் 


AASEERVATHIKKAP PATTAVARKALUM SAPIKKAP PATTAVARKALUM 

====================================

      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக