வெள்ளி, 5 மார்ச், 2021

பிடித்து வைத்தால் பிள்ளையார்!

வழித்து எறிந்தால் சாணி!

RDX கட்டுரை!

-------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------

காங்கிரஸ் என்பது மு க ஸ்டாலின் கையிலுள்ள சாணி.

ஸ்டாலின் விரும்பினால் அந்தச் சாணியைப் பிள்ளையாராக 

ஆக்க முடியும்; இல்லையேல் வழித்து எறிந்து விடுவார்.


2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்து 

காங்கிரஸைக் கழற்றி விட்டார் கருணாநிதி. தனித்துப் 

போட்டியிட்ட காங்கிரஸ் வழித்தெறிந்த சாணி ஆனது.

39 தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்தது.


காங்கிரஸ் மட்டுமல்ல, தகுதிக்கு மீறி அதிக சீட்டு கேட்டு 

நெருக்கடி கொடுக்கும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் 

அனைத்துமே ஸ்டாலின் கையில் உள்ள சாணிதான்.

காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், போலிக் 

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய அனைத்துமே தங்கள் 

தகுதிக்கு மீறிய இடங்களைக் கேட்பவை.    


கருணாநிதி உயிரோடு இருந்தபோது, இடப் பங்கீட்டின்போது 

இதே கட்சிகள் கருணாநிதியை ஏறி மேயும். எப்போதுமே 

safe gameஐ மட்டுமே ஆட விரும்பும் கருணாநிதி, risky game

ஆடத் துணிச்சல் இல்லாத கருணாநிதி கூட்டணிக்

கட்சிகளின் மிரட்டலுக்குப் பணிந்து போயே அரசியல் 

நடத்தினார்.


இதன் விளைவாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று 

கருணாநிதியை மிரட்டும் அளவுக்கு இந்தக் கட்சிகள் 

சென்றன. இதே கட்சிகள் ஜெயலலிதாவின் அதிமுகவுடன் 

கூட்டணி வைக்கும்போது, வாலைச் சுருட்டிக்கொண்டும், 

நவத் துவாரங்களையும் பொத்திக் கொண்டும் ஜெயலலிதா 

போட்ட அற்பப் பிச்சையை மடியில் ஏந்திக் கொண்டு 

கும்பிட்டுக் கொண்டே சென்றதும் இந்த நாட்டின் 

வரலாறு ஆகும். ஆளுமை நிறைந்த ஜெயலலிதாவிடம் 

மண்டியிட்ட சிறிய கட்சிகள் ஆளுமை குறைந்த 

கருணாநிதியிடம் ஆட்டம் காட்டின.                 


முன்பு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவு 

படுத்துகிறேன். திமுகவுடனான மார்க்சிஸ்ட் கட்சியின் 

இடப்பங்கீட்டுப்  பேச்சுவார்த்தை நீட்டித்துக் கொண்டே 

போன நேரம் அது. மார்க்சிஸ்ட் கட்சியின் அ சவுந்தரராஜன் 

திடீரென்று வடசென்னையில் பஸ்களை மறிக்கத்

தொடங்கினார். கருணாநிதி இவருக்கு சீட் தர வேண்டும் 

என்பதற்காக, பஸ்களை மறித்த கயமைத்தனத்தை 

அ சவுந்திரராஜன் செய்தார். இதனால் பயந்து போன 

கருணாநிதி உடனே மார்க்சிஸ்டுகளுக்கான இடங்களை 

ஒதுக்கி ஒப்பந்தம் போட்டார்.


இன்னொரு சம்பவமும் உங்களுக்குப் பசுமையாக 

நினைவு இருக்கும். ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் 

இரண்டு இடங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்துக் 

கொண்டிருந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

ஆனால் கருணாநிதி ஒரு இடத்தை மட்டுமே ஒதுக்கி

இருந்தார். இதை ஏற்க மறுத்த விடுதலைச் சிறுத்தைகள் 

கட்சியின் லும்பன்கள் கருணாநிதியின் கொடும்பாவியைக் 

கொளுத்தி தங்களின் வெறித்தனத்தை வெளிச்சம் 

போட்டுக் காட்டினர். இதனால் பயந்து போன கருணாநிதி 

விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் கேட்ட படியே 

இரண்டு சீட்டுகளை ஒதுக்கிப் பணிந்தார்.


நல்ல வேளையாக கருணாநிதி மண்டையைப் போட்டு 

விட்டார். இந்தத் தேர்தல் முற்றிலுமாக ஸ்டாலினின்

பொறுப்பில் நடக்கிறது. ஸ்டாலின் சார்பாக அந்தப் 

பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர் அவரின் 

மருமகனாகிய சபரீசன். நல்ல படிப்பு, கல்வி, ஆற்றல்,

நவீன சிந்தனை, இளமைத் துடிப்பு, கூடுதலான IQ 

இவை அனைத்தும் ஒருங்கே உடைய சபரீசன்

கருணாநிதியை விடவும் ஸ்டாலினை விடவும்

ஆயிரம் மடங்கு மேலானவர். சிறிய கட்சிகளின் மிரட்டலுக்கு 

அஞ்சாதவர்.


இரண்டு எம்பி சீட்டு தரவில்லை என்று கருணாநிதியின் 

கொடும்பாவியை எரித்தார்கள். இன்றைக்கு 2021 சட்டமன்றத் 

தேர்தலில், ஆறு சீட்டு மட்டுமே தருகிறார்கள் என்று 

ஸ்டாலினின் கொடும்பாவியை எரிக்க முடியுமா?

அதற்கு எந்த லும்பனுக்காவது தைரியம் இருக்கிறதா?

எரித்துப் பார்! உன்னால் உருவ பொம்மையைத்தான் 

எரிக்க முடியும். சபரீசன் நினைத்தால் உன்னையே 

உயிரோடு எரிக்க முடியும்.       


கருணாநிதி படிக்காதவர்; ஆங்கிலம் தெரியாது.

தாழ்வு மனப்பான்மை நிறைந்தவர். பயப்படுவது 

அவருடைய பிறவிக்குணம். கருணாநிதியின் தாயை 

விபச்சாரி என்று திட்டிய வை கோபால்சாமியை 

கோழையான கருணாநிதியால் என்ன செய்ய முடிந்தது? 


ஆனால் சபரீசன் அப்படி அல்ல. அவர் zero toleranceஐ 

கடைப்பிடிப்பவர். இதனால்தான் அன்று மக்கள் 

நலக் கூட்டணி என்று  திமிர் காட்டியவர்கள் எல்லாம் 

இன்று சபரீசனிடம் மண்டியிட்டு நிற்கிறார்கள். 

வரிசையாக வந்து தோப்புக் கரணம் போட்டுச் 

செல்கிறார்கள்.


"உங்கள் எல்லோருக்கும் சிங்கிள் டிஜிட்டில்தான் சீட்டு.

ஒத்துக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இடுங்கள்.

இல்லாவிட்டால் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி 

அமையுங்கள்" என்று எகத்தாளமாக சபரீசன் பேசிய 

போது, மக்கள் நலக் கூட்டணியின் பங்குதாரர்களால்

மறுமொழி பேச முடியவில்லை. தலைகவிழ்ந்து 

நின்றார்கள்.


தேர்தலில் இடப்பங்கீடு என்பது சிறிய கட்சிகள் பெரிய 

கட்சிகளை பிளாக் மெயில் செய்வதற்கான வாய்ப்பு 

என்பதே போலிக் கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக 

ஆகிய கட்சிகளின் செயல் தந்திரம். ஜெயலலிதா 

இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, இவர்களின் 

பிளாக் மெயிலால் அதிமுக பாதிப்புக்கு உள்ளான 

சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால் கருணாநிதியின்  

கோழைத் தனத்தால் திமுக பெரிதும் நஷ்டம் அடைந்தது.


மதிமுக என்ற கட்சி இன்று தேவையா? அப்படி ஒரு 

கட்சியை நடத்த வேண்டிய தேவை என்ன? பேசாமல் 

திமுகவோடு அதை இணைத்தால் என்ன? வறட்டு 

கெளரவத்திற்கு ஒரு கட்சி தேவையா?


IJK என்று கட்சி. ஏரித்திருடன், சுயநிதிக் கல்விக் 

கொள்ளையன் பச்சமுத்து தன் சொத்துக்களைப் 

பாதுகாக்க நடத்தும் IJK என்னும் இந்தக் கட்சி

தமிழர்களுக்குத் தேவையா?


தேமுதிக என்று ஒரு கட்சி. இந்தக் கட்சியின் இருப்புக்கு

அவசியம் என்ன? 


இவர்களைப் போன்ற சிறிய கட்சிகள் சேர்ந்து கொண்டு 

பெரிய கட்சிகளை பிளாக் மெயில் செய்வார்கள்.

அதற்கு பெரிய கட்சிகள் பணிந்து போக வேண்டுமா?

அப்படிப் பணிந்து போகவில்லையென்றால் அதற்குப் 

பெயர் மூத்த அண்ணாச்சி மனப்பான்மையா 

(Big brother attitude)?


இன்றைக்கு சீட்டு அதிகம் கேட்கும் எந்த ஒரு 

கட்சியாலும் தன் சொந்த பலத்தில் தமிழ்நாட்டில் 

உள்ள 234 தொகுதிகளில்  ஒரு தொகுதியிலாவது 

ஜெயிக்க முடியுமா? முடியாது என்பதுதானே உண்மை!

அப்படியிருக்க சீட்டு அதிகம் கேட்பதில் என்ன 

நியாயம் இருக்கிறது?


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாலோ, மதிமுகவாலோ 

இன்று ஏதேனும் ஒரு தொகுதியிலாவது சொந்த பலத்தில்

ஜெயிக்க முடியுமா? முடியாதபோது சபரீசன் தரும் 

சீட்டுகளை கும்பிட்டு வாங்கிக் கொண்டு போக 

வேண்டாமா? மக்கள் செல்வாக்கு இல்லாதபோது, பணிந்தும் 

வணங்கியும்தானே போக வேண்டும்!


கட்சிக்காக கடுமையாக உழைத்து கட்சிக்கு மக்கள் 

செல்வாக்கைப் பெறுவதற்குத் துப்பில்லாதவர்கள்

அடுத்தவன் உழைப்பில் சுகம் காண நினைக்கலாமா?

திமுக தொண்டர்களின் உழைப்பில், திமுகவுக்கான 

மக்கள் ஆதரவில் உனக்கு எல்லா சீட்டையும் தூக்கிக் 

கொடுத்து விட்டுப் போக சபரீசன் என்ன இளிச்சவாயனா?


வெளிமாநிலங்களில் என்ன நிலைமை? அங்கெல்லாம்

கூட்டணி வைக்கும் கட்சிகள் தங்களின் சொந்த பலத்தில் 

இடங்களை ஜெயிக்கக் கூடிய கட்சிகளே. பீகாரில் 

லாலு பிரசாத் கட்சியும் நித்திஷ் குமார் கட்சியும் கூட்டணி

வைத்தன என்றால், அவ்விரு கட்சிகளுமே தங்களின் சொந்த 

பலத்தில் 50 அல்லது 100 இடங்களை ஜெயிக்கக் கூடியவை.


தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு இடத்தில் கூட தங்களின் 

சொந்த பலத்தில் ஜெயிக்க வக்கற்ற மானங்கெட்ட கட்சிகள்

அதிக சீட்டு கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். 


கடந்த 2016 தேர்தலில் இதே கட்சிகள் பாஜக உருவாக்கிய 

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவை  

எதிர்த்தார்கள். ஆனால் மக்கள் இவர்களை டெபாசிட் 

இழக்க வைத்தார்கள். இந்த மானங்கெட்டவர்களுக்கு 

இப்போது அதிக சீட்டு வேண்டுமாம்.


பேராசையும் அடுத்தவனின் உழைப்பில் சுகம் காண 

நினைக்கும் ஈனத்தனமும் கொண்ட சிறிய கட்சிகளை

மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: இக்கட்டுரை சபரீசனுக்கு ஆதரவானது என்றோ 

திமுகவுக்கு ஆதரவானது என்றோ உங்களுக்குத் 

தோன்றினால், அருள்கூர்ந்து அருகில் உள்ள ரயில்வே 

நிலையத்துக்குச் சென்று, ரயில் வரும் நேரத்தில் 

உங்கள் தலையைக் கொடுக்கவும்.  

*********************************************************     

  


          

  

  


 


         

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக