வெள்ளி, 19 மார்ச், 2021

செவ்வாயில் தரையிறங்கிய அமெரிக்காவின் விண்கலம்!

இக்குழுவில் தமிழ்ப்பெண் ஸ்வாதி பங்கேற்பு!

---------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------ 

கோள்களை ஆராய மனிதர்கள் அனுப்பும் 

செயற்கைக் கோள்கள் பல வகைப்படும்.

அவற்றுள் பிரதானமானவை மூன்று.

1) ஆர்பிட்டர் (orbiter, தமிழில் கோள்சுற்றி ) 

2) லேண்டர் (lander தமிழில் தரையிறங்கி)

3) ரோவர் (rover, தரை நடத்தி).


ஆர்பிட்டர் என்பது கோளில் இறங்காமல், ஒரு குறிப்பிட்ட 

தூரத்தில் இருந்து கோளைச் சுற்றி வரும்  செயற்கைக்கோள் 

ஆகும்.


லேண்டர் என்பது கோளில் இறங்கும் செயற்கைக்கோள் ஆகும்.  


ரோவர் என்பது கோளில் இறங்குவதோடு மட்டுமின்றி 

கோளில் சிறிது தூரம் நடந்து செல்லும் செயற்கைக்கோள் ஆகும். 


செவ்வாய்க் கோளைச் சுற்றி வர 2013ல் இந்தியா அனுப்பிய 

மங்கள்யான்  ஒரு கோள்சுற்றி (orbiter) ஆகும். பல்வேறு 

நாடுகளும் செவ்வாய்க்கோளை ஆராய ஆர்பிட்டர்,

லேண்டர், ரோவர் ஆகியவற்றை அனுப்பி உள்ளன.   


அண்மையில் செவ்வாயில் தரையிறங்கி நடக்கும் 

திட்டத்துடன் ஒரு செயற்கைக்கோளை அமெரிக்கா

அனுப்பியது. அதன் பெயர் Perseverance rover. இதைத் தமிழில் 

மொழிபெயர்த்தால், "ஆள்வினையுடைமை தரைநடத்தி" 

என்று எழுத வேண்டியது வரும். 

(perseverance = ஆள்வினையுடைமை)


நாசாவின் இந்த ரோவர் ஜூலை 2020ல் ஏவப்பட்டது.

203 நாள் பயணம் செய்து 47.2 கோடி  கிலோ மீட்டர் 

தூரத்தைக் கடந்து, 2021 பெப்ரவரி 18ல்

வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கியது.


இதில் இந்தியாவுக்கு அதிலும் தமிழ்நாட்டுக்கு ஒரு 

பெருமை உண்டு. இந்த ஆள்வினையுடைமை என்னும் 

ரோவரை செவ்வாய்க்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட 

குழுவில் இந்தியப் பெண் அதாவது ஓர் தமிழ்ப்பெண் 

இடம் பெற்றுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த 

அந்தப் பெண் ஸ்வாதி மோகன் ஆவார். அவர் 

Guidance and controls operations பிரிவின் தலைவராகப் 

பணியாற்றியவர்.


இளம் வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்திய 

ஸ்வாதி மோகனால் தமிழ்நாட்டுக்குப் பெருமை.

நமது குழந்தைகள் இந்தப் பெண்ணைப் பின்பற்றி 

முன்னேற வேண்டும்.


அதற்கு மாறாக, பிக்பாஸ் கூத்தாடிச்சி புழுத்த, 

புழுவினும் இழிந்த, மலமுண்ணி ஓவியா என்னும் 

இழிந்த ஜென்மத்தைப் போற்றிக்கொண்டு 

நமது வாழ்க்கையை இழந்து விடக்கூடாது.

கூத்தாடி மோகத்தில் இருந்து தமிழ்நாட்டு 

இளைஞர்களும் இளம் பெண்களும் விடுபட 

வேண்டும்.


ஸ்வாதி மோகனின் வாழ்க்கை வரலாற்றைப் 

படியுங்கள். உருப்படுங்கள்!

***************************************************  ந்   

Perseverance Rover குறித்து தமிழில் எழுதப்பட்ட 

முதல் கட்டுரை இதுதான். படியுங்கள்.

Perseverance = ஆள்வினையுடைமை.

ஆள்வினையுடைமை என்பது திருக்குறளின் 

ஓர் அதிகாரம். 


     

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக