சனி, 13 மார்ச், 2021

எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள்!

தமிழ்நாட்டின் நக்சல்பாரிச் செயல்பாடு

ஆவணப் படுத்தப்படவில்லை.

-------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி

--------------------------------------------------------------   

ஒருமுறை ஏ எம் கே அவர்களுடனான சந்திப்பின்போது,

அந்த நாளின் பிரதான அஜெண்டா நிறைவடைந்த பிறகு,

எல்லோரும் சற்றுத் தளர்வாக (relaxed) இருந்தபோது, 

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாற்றை எழுத வேண்டும் 

என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன். வரலாறு 

எழுதப்படாமல் இருப்பதால் நேர்ந்துவிட்ட, இனியும் 

நேரக்கூடிய சில இடர்களையும் குறிப்பிட்டேன்.

ஏ எம் கே அவர்கள் நான் கூறிய அனைத்தையும் 

நன்கு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். ஆனால் 

எந்த மறுமொழியும் கூறவில்லை. 


லிபரேஷன் குழுவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. மக்கள் 

யுத்தக் குழுவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. மாவோயிஸ்ட் 

குழுவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இம்மூன்றும் 

நக்சல்பாரிப் பாரம்பரியமும் அழித்தொழிப்புப் 

பாரம்பரியமும் கொண்ட குழுக்கள்.


மாநில அமைப்புக் கமிட்டி எனப்படும் SOC, CPI ML Tamilnadu, 

மற்றும் TNOC என்ற பெயரை விடுத்து, TNML என்று புதிய 

பெயர் சூடிக் கொண்ட குழு ஆகியவை நக்சல்பாரிக் கட்சிகள் 

அல்ல. அவை தங்களின் பிறப்பு முதலே அழித்தொழிப்பை 

ஏற்றுக் கொண்டவை அல்ல. நக்சல்பாரிப் 

பாரம்பரியத்துக்கு எவ்விதத்திலும் சொந்தம் கொண்டாடும் 

அருகதை அவர்களுக்குக் கிடையாது.


இது உங்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கடினமாக உள்ளதா?

பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். 

மருதையன் மீது எத்தனை அழித்தொழிப்பு வழக்குகள் 

இருக்கின்றன? வீராச்சாமி மீது எத்தனை அழித்தொழிப்பு 

வழக்குகள் இருக்கின்றன அல்லது இருந்தன?


பூஜ்யம்! மிகப்பெரும் பூஜ்யம்! மருதையனாவது 

அனிஹிலேஷனை ஏற்றுக் கொள்வதாவது! 

பொண்டாட்டிக்கு மென்சஸ் வந்தாலே (அந்த 

சிவப்பு நிற ரத்தத்தைக் கண்டு) பயப்படுவானே 

பாப்பான், அந்தப் பாப்பானா அனிஹிலேஷனை  

ஏற்றுக் கொள்ளப் போகிறான்? பார்ப்பன மருதையனும் 

பார்ப்பன வீராச்சாமியும் எப்படி அழித்தொழிப்புப் 

பாரம்பரியத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியும்?


பிரான்டியர் (Frontier) என்று ஒரு ஆங்கில ஏடு. 1970களில்,

1980களில் பெரும் செல்வாக்குடன் இருந்த பத்திரிக்கை 

அது. அதில் இந்தியா முழுவதும் இருந்து வருகின்ற 

நக்சல்பாரி இயக்கச் செய்திகள் பிரசுரமாகும். இப்படிப் 

பிரசுரமான செய்திகள் அனைத்தையும் தொகுத்து

இரண்டு வால்யூம்களாக வெளியிட்டு இருந்தது 

பிரான்டியர் ஏடு.Frontier Anthology என்று அத்தொகுப்புக்குப் 

பெயர். ஒவ்வொன்றும் 50 பக்கங்களுக்கு மேல் இருக்கும்.


கேரளத்தில் அஜிதா புன்புன் போலீஸ் நிலையத்தைத்

தகர்த்த செய்தி முதல் உபி போஜ்பூரில் நடந்த ஒரு 

அழித்தொழிப்பு பற்றியும் பிரான்டியர் ஏட்டில் 

செய்தி வெளியாகி இருக்கும்.


நானும் தோழர் ரவிச்சந்திரனும் மேற்குறித்த பிரான்டியர்

தொகுப்பு (Frontier Anthology) நூல்கள் இரண்டு வால்யூமையும் 

வாங்கி இருந்தோம். அதைப் படித்து முடித்தோம். அதிர்ச்சி 

அடைந்தோம். இரண்டு வால்யூம்களிலும் தமிழ்நாட்டில் 

நிகழ்ந்த நக்சல்பாரிச் செயல்பாடுகள் குறித்து எந்த

ஒரு செய்தியும் இல்லை. ஆயிரம் பக்கங்களை மீண்டும் 

மீண்டும் படித்துப் பார்த்தோம். தமிழ்நாட்டுச் செய்தி 

எதுவும் ஒரு வரி கூட இல்லை.


இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எங்களோடு 

தொடர்பில் இருந்த ஒரு சில முழுநேர புரட்சியாளர்களைக்

கேட்டோம். அவர்களுக்கும் தெரியவில்லை.


எனவே பிரான்டியர் ஆசிரியர் குழுவுக்கே எழுதிக் 

கேட்டு விடுவோம் என்று நான் தோழர் ரவியிடம் 

கூறினேன். அதன்படி நான் கடிதம் எழுதி அஞ்சலில் 

சேர்த்தேன். இரண்டாவது வாரத்தில் பதில் வந்தது.


(இங்கு குறிப்பிடப்படும் ரவிச்சந்திரன் ஒரு நக்சல்பாரிப் 

புரட்சியாளர். என்னுடன் பணியாற்றியவர். அவர்  

தொலைதொடர்பு சிவில் பிரிவில் இளநிலைப் 

பொறியாளராக இருந்தார்.பின்னர் வேலையைத் துறந்து 

முழுநேர ஊழியர் ஆனார். கருணாநிதியின் காவல் 

துறை ஒரு போலி மோதலில் (fake encounter) இவரை 

சுட்டுக் கொன்றது).  


தங்களின் பதிலில் பிரான்டியர் ஆசிரியர் குழு பின்வருமாறு 

குறிப்பிட்டு இருந்தது."ஒவ்வொரு இடத்திற்கும் சென்று 

நாங்கள் செய்தி சேகரிப்பதில்லை. எங்களுக்கு 

அனுப்பப் படுகிற செய்திகளை நாங்கள்  பிரசுரித்து 

வருகிறோம். தமிழ்நாட்டில் இருந்து ஒரு செய்தி கூட

எங்களுக்கு  வரவில்லை.எனவே தமிழ்நாடு பற்றிய 

செய்தி எதுவும் இடம்பெறவில்லை".


பிரான்டியரின் பதில் எங்களுக்கு அதிர்ச்சியாக

இருந்தது. ஏன் தமிழ்நாட்டில் இருந்து ஒரு செய்தி கூட 

அனுப்பப் படவில்லை? இதற்கு அப்போது எங்களுக்குப் 

பதில் தெரியவில்லை.


ஏ எம் கே அவர்களுடனான அடுத்த சந்திப்பின்போது

இதற்கு அவரிடம் பதில் கேட்க வேண்டும் என்று 

முடிவு செய்தேன். அடுத்த சந்திப்பும் வந்தது. இந்தச் 

சந்திப்பு என் வீட்டில் நிகழவில்லை. ஏ எம் கே அவர்கள் 

என்னை வரச்சொல்லி, அவரது கட்டளையை ஏற்று, 

நான் சென்று அவரைச் சந்தித்த நிகழ்வு இது. நடந்தது 

1992ல்.


பிரான்டியரிடம் இருந்து வந்த கடிதத்தை மறக்காமல் 

எடுத்துக் கொண்டு சென்றேன். சந்திப்பு முடியும் 

 தருணத்தில்,ஏ எம் கே அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி 

பிரான்டியரிடம் இருந்து வந்த கடிதத்தையும் அவரிடம் 

கொடுத்தேன். அதை அவர் படித்துப் பார்த்தார். தொடர்ந்து 

நாங்கள் .உரையாடினோம். இங்கு ஒன்றை மீண்டும் 

வலியுறுத்த விரும்புகிறேன். எங்களின் உரையாடல் என்பது 

ஆசான்-சீடன் என்ற தகுதிநிலையிலேயே நடைபெற்றது.

ஏ எம் கே அவர்கள்  கூறிய விளக்கத்தை நான் இங்கு 

வெளியிட விரும்பவில்லை. நான் ஏற்கனவே கூறியபடி 

இந்தச் சமூகம் அனுமதிக்கிற அரை உண்மைகளை மட்டுமே 

சொல்வேன்.


இறுதியில் நக்சல்பாரி வரலாற்றை எப்படியும் எழுத வேண்டும் 

என்று நான் ஏ எம் கே அவர்களிடம் கூறினேன். அதற்கு 

ஏ எம் கே கூறிய பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

" நீதான் எழுத வேண்டும்" என்றார் ஏ எம் கே. 

"எனக்கு அதை எழுதுவதற்கான அருகதை இல்லை என்று 

நினைக்கிறேன்" என்று ஏ எம் கேவுக்கு மறுமொழி கூறினேன். 

"Don't be pessimistic" என்றார் ஏ எம் கே.

 அத்துடன் அன்றைய சந்திப்பு முடிந்தது. நானும் அதுகாறும் 

என்னுடன் இருந்த தோழர் டி எஸ் குமாரும் விடைபெற்றுக் 

கொண்டு புறப்பட்டோம்.   

************************************************************** 

   

 


  

.           

 




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக