புதன், 6 ஜூலை, 2022

 நம்முடைய தமிழ் பொருளுற்பத்தியில் 

பயன்பட வேண்டும்! பொருளுற்பத்தியில் 

பயன்படும் தமிழ் மட்டுமே நின்று நிலைக்கும்.

------------------------------------------------------------

கணிதத்தில் வருகிற "பை"யின் மதிப்பு 

பொருளுற்பத்தில் முக்கியத்துவம் உடையது.

மாணவர்களுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்க 

வேண்டும்.

பை = 3.1415926535 (10 தசம இடங்களுக்கு)


இதை எளிதில் நினைவுகூர ஒரு ஆங்கில 

வாக்கியத்தை மனனம் செய்வர் மாணவர்கள்.


May I have a large container of coffee? 

என்ற வாக்கியமே அது.


இந்த வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் 

எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ, அந்த 

எண்ணிக்கையே பையின் மதிப்பாக 

அமையும். (3.1415926)


ஆங்கில வாக்கியத்தைப் போலவே தமிழிலும் 

ஒரு வாக்கியம் வேண்டும் அல்லவா? யாராவது 

உருவாக்கி இருக்கிறார்களா? நான் 

உருவாக்கி உள்ளேன். அது இதுதான். 

மாணவர்களுக்கு இத்தமிழ் 

வாக்கியம் பயன்படட்டும்.


"அன்பே வா நண்பனே வா 

அதிரசம் முந்திரிப்பருப்பு

சீடை வாழைப்பழம்  

உண்ணலாம்." (3.14159265).

(அறிவியல் ஒளி ஏட்டில் வெளியான 

என் கட்டுரையில் இருந்து).  


இன்றைக்கு இது போன்ற தமிழ்தான் 

தேவை. தமிழ் மீது மெய்யான பற்றுள்ள 

தமிழர்கள் இந்த வாக்கியத்தை 

ஆதரிக்கிறார்கள். .

----------------------------------------------------------




ப்பா  


ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.


பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூற்களை 

நினைவில் கொள்ள உதவும் வெண்பாக்களை 

இயற்றி உள்ளேன். மாணவர்களுக்குப் பயன்படும் 

இந்த வெண்பாக்களை ஆதரிக்குமாறு 

பணிவுடன் வேண்டுகிறேன்.

---------------------------------------------------------


பத்துப்பாட்டு

------------------------- 

திருமுருகு சீர்பொருநர் நற்சிறுபாண் நற்பெரும்

பாண்எனஆற் றுப்படை மீன்மதுரைக் காஞ்சிமுல்லைப்  

பாட்டுநெடு நல்வாடை பட்டினப்பா லைகுறிஞ்சிப்

பாட்டும லைபடுக டாம்.

------------------------------


எட்டுத்தொகை 

..................................

வளையணிந்த பெண்ணே தொகையெட்டும் கேளாய்

திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்

சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை

சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.

-----------------------------------------------

-----------------------------------------------



பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

  


 நம்முடைய தமிழ் பொருளுற்பத்தியில் 

பயன்பட வேண்டும்! பொருளுற்பத்தியில் 

பயன்படும் தமிழ் மட்டுமே நின்று நிலைக்கும்.

------------------------------------------------------------

கணிதத்தில் வருகிற "பை"யின் மதிப்பு 

பொருளுற்பத்தில் முக்கியத்துவம் உடையது.

மாணவர்களுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்க 

வேண்டும்.

பை = 3.1415926535 (10 தசம இடங்களுக்கு)


இதை எளிதில் நினைவுகூர ஒரு ஆங்கில 

வாக்கியத்தை மனனம் செய்வர் மாணவர்கள்.


May I have a large container of coffee? 

என்ற வாக்கியமே அது.


இந்த வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் 

எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ, அந்த 

எண்ணிக்கையே பையின் மதிப்பாக 

அமையும். (3.1415926)


ஆங்கில வாக்கியத்தைப் போலவே தமிழிலும் 

ஒரு வாக்கியம் வேண்டும் அல்லவா? யாராவது 

உருவாக்கி இருக்கிறார்களா? நான் 

உருவாக்கி உள்ளேன். அது இதுதான். 

மாணவர்களுக்கு இத்தமிழ் 

வாக்கியம் பயன்படட்டும்.


"அன்பே வா நண்பனே வா 

அதிரசம் முந்திரிப்பருப்பு

சீடை வாழைப்பழம்  

உண்ணலாம்." (3.14159265).

(அறிவியல் ஒளி ஏட்டில் வெளியான 

என் கட்டுரையில் இருந்து).  


இன்றைக்கு இது போன்ற தமிழ்தான் 

தேவை. தமிழ் மீது மெய்யான பற்றுள்ள 

தமிழர்கள் இந்த வாக்கியத்தை 

ஆதரிக்கிறார்கள். .

----------------------------------------------------------




  


செவ்வாய், 5 ஜூலை, 2022

கால்பந்தில் ஜெயிக்க ஜோசியம் வேண்டும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்காக 
AIFF உள்ளது. அகில இந்திய கால்பந்துக் 
கழகத்தின் தலைவராக சரத் பவாரின் 
கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் பட்டேல்  இருந்து 
வந்தார். ஊழல் புகார்கள் காரணமாக அவர் 
தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பை கால்பந்து (AFC) காலிறுதிக்கு 
இந்தியா தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்குத்
தகுதி பெறவும் போட்டியில் வெல்லவும் இந்தியா 
முயன்று வருகிறது. இதற்காக இந்தியக் 
கால்பந்துக் கழகம் ஒரு ஜோசிய நிறுவனத்தை 
ரூ 16 லட்சம் கட்டணம் செலுத்தி அமர்த்தி உள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் 
கிரக நிலைகளைத் தமக்குச் சாதமாக்கவும்
இந்த ஜோசிய நிறுவனம் செயலாற்றும் என்று 
சொல்லப் படுகிறது.

விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றால் 
தோற்று விட்டுப் போகலாம். அதில் தப்பில்லை.
ஆனால் ஜோசியனை அமர்த்தி ஜோசியத்தின்
மூலம் ஜெயிக்கலாம் என்ற நினைப்பில் 
செயல்படுவது கடும் மூடநம்பிக்கை ஆகும்.

ஒரு அணி ஜெயிப்பதற்கும்  ஜோசியத்துக்கும் 
அணுவளவும் சம்மந்தம் கிடையாது. 
அவனவனுக்குத் திறமை இருந்தால் ஜெயிப்பான்.
திறமை இல்லாதவன் தோற்றுப் போவான்.
இதில் ஜோசியத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

ஜோசியத்தால் எவனும் ஜெயிக்கப் போவதும்  
இல்லை. எவனும் தோற்கப் போவதும் இல்லை.
இதுதான் உண்மை.

இந்தியாவில் ஜோசியம் இவ்வளவு செல்வாக்குப் 
பெறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
வாஜ்பாய் பிரதமராக இருந்த 1999-2004ல் 
மத்தியில் பாஜக-திமுக கூட்டணி ஆட்சி 
நடைபெற்றது. முரளி மனோகர் ஜோஷி 
கல்வி அமைச்சராக இருந்தார்.

கருணாநிதியின் ஒப்புதலைப் பெற்று முரளி 
மனோகர் ஜோஷி இந்தையாவின் பல்கலைக் 
கழகங்களில் ஜோசியத்தை ஒரு பட்டப் 
படிப்பாகக் கொண்டு  வந்தார்.ஜோசியப் 
பித்தரான கருணாநிதி, ஜோசியன் சொன்னான் 
என்பதற்காக மஞ்சள் துண்டை காலமெல்லாம் 
அணிந்து கொண்டிருந்த ஜோசியப் பைத்தியம் 
கருணாநிதி இந்தியாவில் ஜோசியத்தை 
பட்டப் படிப்பாகக் கொண்டு வருவதற்கு 
உறுதுணையாக இருந்தார்.

இன்றைக்கு கால்பந்துத் கழகம் ஜோசியனை 
அமர்த்துகிறது என்றால், அதற்கு மூல காரணம் 
இழிந்த மூடநம்பிக்கையாளரும் போலிப் 
பகுத்தறிவு பேசும் நேர்மையற்றவருமான 
கருணாநிதியே காரணம்.
********************************************



 
 தாலியறுத்த தமிழ் மொழிபெயர்ப்பு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
அண்மையில் நடந்து முடிந்த TNPSC தேர்வின் 
கேள்வித்தாளில் ஒரு கேள்வியை இங்கு 
கொடுத்துள்ளேன்; பாருங்கள்.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பற்றிய 
ஒரு கேள்வி.

அரசமைப்புச் சட்டத்தின் எந்த ARTICLE 
கல்வி உரிமையை வழங்குகிறது? இதுதான் கேள்வி.

இங்கு ARTICLE என்பது ஷரத்து என்று 
காலங்காலமாக மொழிபெயர்க்கப் பட்டு 
வருகிறது. பொது அறிவுக்காக நான் CONSTITUTION 
பற்றிப் படித்த 1970 முதற்கொண்டு இன்று வரை 
ARTICLE என்றால் ஷரத்து என்று பொருள்.

ஆனால் TNPSCயின் தமிழ் மொழிபெயர்ப்பைப் 
பாருங்கள். ARTICLE என்பதை கட்டுரை என்று 
மொழிபெயர்த்து இருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட 
படத்தைப் பாருங்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு இந்த லட்சணத்தில்தான் 
இருக்கிறது. இதை விடத் தாலி அறுந்த நிலையில்தான் 
தமிழ் மீடியம் இருக்கிறது.

இவ்வளவு ஈனத்தனமான மொழிபெயர்ப்பால் 
தமிழ் மீடியத்தைத் தேர்ந்தெடுக்கும் 
மாணவர்களுக்கே நஷ்டம்.

கணிகைக்குப் பிறந்த பயல்களே,
Article of the constitution என்பதை 
அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து என்று 
மொழிபெயர்க்காமல்,
அரசமைப்புச் சட்டத்தின் கட்டுரை  என்று 
மொழிபெயர்த்த நீங்கள் உயிரோடு 
இருக்கத் தேவையில்லை.

இதனால்தான், 
The English version is final and binding என்று 
TNPSC கூறுகிறதோ!

மாணவர்களுக்கு அறிவுரை!
------------------------------------------
தமிழ் மீடியம் என்று தேர்வு செய்வதை 
முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.
உங்களுக்கு ஓரளவேனும் ஆங்கிலம் 
தெரியுமெனில், OBJECTIVE TYPE தேர்வுக்கு 
அது போதும். நீங்கள் ஆங்கில மீடியத்தை
தேர்ந்தெடுங்கள்.

மாணவர்களே, பெற்றோர்களே,
போலியாகத் தனித்தமிழ் பேசும் கயவர்களின் 
பேச்சைக் கேட்டு மோசம் போய் விடாதீர்கள்.
தமிழ் மீடியத்தைக் கக்கூஸில் எறிந்து விட்டு
ஆங்கில மீடியத்தை தேர்ந்தெடுங்கள்.

தமிழ் மீடியத்தை நம்பி உங்கள் வேலையைக் 
கெடுத்துக் கொள்ளாதீர்கள்.  வாழ்க்கையைத் 
தொலைத்து விடாதீர்கள்.

கடந்த 50 ஆண்டு காலமாக அகாடமிக் சார்ந்து 
இயங்கி வருபவன் நான். இந்தத் துறையில் 
அறிவும் அனுபவமும் பெற்றவன் நான்.
நீங்கள் என் பேச்சைக் கேளுங்கள்.
கண்ட  நாய்களின் பேச்சைக் கேட்டால் 
 உங்களுக்கு வேலை கிடைக்காது.
 ---------------------------------------------------------------
படத்துக்கு நன்றி:
ராஜபூபதி ரேடியன் அவர்கள்
தலைவர், ரேடியன் இன்ஸ்டிடியூட்.
------------------------------------------------------------  
பின்குறிப்பு:
நீங்கள் PHYSICS படித்தவரா?
MOMENT OF THE FORCE என்றால் என்ன என்று 
தெரியும் அல்லவா! இதை எப்படி மொழிபெயர்ப்பது?
"விசையின் தருணங்கள்" என்று 
மொழிபெயர்த்தவர்களை  நான் அறிவேன்.
********************************************
 
  
  

திங்கள், 4 ஜூலை, 2022

நீள்வட்டம் பற்றிய அறிவைப் பெற வேண்டும்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------- 
சராசரி மனிதன் ஒரு வட்டத்தை நன்கு புரிந்து 
கொண்டுள்ளான். ஆனால் அவனுக்கு நீள்வட்டம் 
பற்றிய புரிதல் கிடையாது.
(வட்டம் = circle; நீள்வட்டம் = ellipse)

நீள்வட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் ஒரு மனிதன் 
வாழ முடியாது. நீள்வட்டம் பற்றிய புரிதல் 
அடிப்படைப் புரிதல் ஆகும். எனினும் அறிவியல் 
தற்குறிகளின் தேசமான இந்தியாவில் 
(scientifically illiterate) நீள்வட்டம் பற்றிய புரிதலை 
அரசானது மக்களுக்கு ஏற்படுத்தவில்லை.

நீள்வட்டத்தைப் புரிந்து கொள்வது எளிது. அது 
ஒன்றும் கடினமானதல்ல. 11ஆம் வகுப்பு 
கணிதப் பாடப் புத்தகத்தில் conics பற்றிப் 
பாடம் உள்ளது. conics என்பது பேரபாலா,
எல்லிப்ஸ், ஹைப்பர்போலா பற்றிய படிப்பு.

எனவே ஒவ்வொருவரும் 11ஆம் வகுப்பு கணிதப் 
புத்தகத்தை வாங்க வேண்டும். அதைப்  படிக்க
வேண்டும். புரியாதுதான்! மீண்டும் மீண்டும் 
படிக்க வேண்டும். ஆயிரம் முறை படித்தாலும் 
புரியாதுதான். எனவே ஏதாவது ஒரு டியூஷன் 
ஆசிரியரிடம் சென்று படிக்கவும். யாராவது 
சொல்லிக் கொடுக்காமல் கணிதத்தைக் கற்றுக் 
கொள்ள இயலாது.

படிக்காமல் அறிவைப் பெற இயலாது. வேறு 
குறுக்கு வழி இல்லை. எல்லிப்ஸ் பற்றிய 
அறிவு இல்லாமல் அறிவியலை அறிந்து கொள்ள 
முடியாது. வானியலை அறிந்து கொள்ள முடியாது.
அறிவியல் கட்டுரைகளைப் படிக்காமல்; ஆனால் 
மண்டையில் ஏறாது. நிற்க.

இங்கு ellipse, eccentricity இரண்டையும் பற்றிய அறிவைப் 
பெற வேண்டும். இவ்விரண்டுக்கும் இடையிலான 
தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும்.

சூரியனைச் சுற்றி வரும் பூமியானது, சூரியனில் 
இருந்து அதிகத் தொலைவில் இன்று (ஜூலை 4, 2022)
இருப்பது பற்றி இரண்டு காத்திரமான கட்டுரைகளை 
எழுதி இருந்தேன். எத்தனை பேர் அதைப் 
படித்தீர்கள்? எத்தனை பேருக்கு அது புரிந்தது?

நீள்வட்டம் (ellipse) பற்றிய புரிதல் இல்லாமல் 
அக்கட்டுரைகளைப் புரிந்து கொள்ள இயலாது.
இக்கட்டுரையுடன் கொடுக்கப்பட்ட படங்களைப் 
பாருங்கள். Ellipseக்கும் eccentricityக்கும் உள்ள 
உறவை அறிந்து கொள்ளுங்கள்.
*****************************************    


பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் 
சூரியனுக்கு அருகில் பூமி வருவதும் 
தூர விலகுவதும் இயல்பே! இது அபூர்வ நிகழ்வு அல்ல!
இது ஆண்டுதோறும் நிகழ்வது! (periodical phenomenon)  
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
வாட்சப்பில் வந்தது என்றும் மாலைமலரில் வெளிவந்த 
செய்தி என்றும் ஒரு தவறான செய்தி சமூகத்தின் 
பொதுவெளியில் உலா வருகிறது. இதோ பாருங்கள்
மாலைமலரில் வந்ததாகக் கூறப்படும் அச்செய்தி!

"சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி
கிலோ மீட்டர் ஆகும். ஆனால் அல்பெலியன் நிகழ்வு
காலத்தில் 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிக்கும்.
சுமார் 66 சதவீதம் தூரத்தின் அளவு அதிகரிக்கும்".

"சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை
அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும். அல்பெலியன்
கால கட்டத்தில் உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும்
சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம".
நன்றி மாலைமலர்.

மேற்கண்ட செய்தி மாலைமலரில் வந்ததா என்று 
உறுதி செய்ய இயலவில்லை. ஆனால் வாட்சப்பில் 
வந்ததை அறிய முடிந்தது.

இந்தச் செய்தி உண்மையல்ல. தூரத்தின் அளவு 
66 சதவீதம் அதிகரிக்கும் என்பது  மூடத்தனமான 
பொய். மேலும் இது அபூர்வ நிகழ்வு அல்ல.ஆண்டுதோறும் நிகழும் 
ஒரு periodical phenomenon.

மிகக்குறைந்த eccentricity உடைய ஒரு நீள்வட்டப் 
பாதையில் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. 
இவ்வாறு ஒரு முழுச்சுற்றையும் சுற்றி முடிக்க
பூமிக்கு ஓராண்டு காலம் ஆகிறது. இந்த ஓராண்டில் 
ஒருமுறை சூரியனுக்கு நெருக்கமாகவும், ஒருமுறை 
சூரியனுக்கு அப்பாலும் பூமி சுற்றுகிறது.
சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் நிலை perihelion 
position என்றும் சூரியனுக்கு அப்பால் உள்ள நிலை 
aphelion position என்றும் அழைக்கப் படுகிறது.



சரி, பூமியானது சூரியனை எவ்வளவு அருகில்
நெருங்கும்?? அதுபோல சூரியனுக்கு அப்பால் 
என்னும்போது சூரியனில் இருந்து எவ்வளவு 
தூரம் விலகி இருக்கும்?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 
வானியலில் மிகவும் முக்கியமானது. இதை 
AU என்பார்கள் (AU = Astronomical Unit).
1 AU = 15 கோடி கிமீ. இதன் பொருள் சூரியனுக்கும் 
பூமிக்கும் இடையிலான சராசரி தூரம் 
(Mean distance) 15 கோடி கிமீ என்பதாகும்.

பூமி சூரியனுக்கு அருகில் வரும் perihelion positionல்,
பூமி சூரியனில் இருந்து 14 கோடியே 71 லட்சம் கிமீ
தூரத்தில் இருந்தது. அதாவது சராசரி தூரமான 
15 கோடி கிமீயை விட 29 லட்சம் கிமீ குறைவான 
தூரத்தில், சூரியனுக்கு அருகில் சென்றது.

அதே போல, பூமி சூரியனுக்கு அப்பால் வெகு 
தூரத்தில் சுற்றும்போது (Aphelion position), பூமி 
சூரியனில் இருந்து 15 கோடியே 21 லட்சம் கிமீ 
தூரத்தில் இருந்தது. அதாவது சராசரி தூரமான 
15 கோடி கிமீயை விட 21 லட்சம் கிமீ தூரம் 
அதிகமாக சூரியனுக்கு அப்பால் இருந்தது.

சராசரி தூரம் (Mean distance) =  15 கோடி கிமீ 
சூரிய அண்மை (Perihelion) = 147,105,052 கிமீ.
சூரியச் சேய்மை (Aphelion) = 152,098,455 கிமீ.

15 கோடியை விட 21 லட்சம் கிமீ அதிகம் என்பது
ஒருபோதும் 66% அதிகரிப்பு ஆகாது. எனவே 66%
அதிகரிப்பு என்று ஊடகங்கள் கூறுவது முற்றிலும் தவறு.

66% அதிகரிப்பு என்றால் சராசரி தூரமான 15 கோடி
கிமீயை விட 66% அதிகரித்து, அதாவது 10 கோடி கிமீ
அதிகரித்து, பூமியானது சூரியனில் இருந்து
25 கோடி கிமீ (15+10 = 25கிமீ) தூரத்தில் இருக்க
வேண்டும். அப்படி இருக்க இயலுமா? இயலாது.

ஏனெனில் பூமியை அடுத்து இருக்கும் கோளான
செவ்வாய் சூரியனில் இருந்து 22.8 கோடி கிமீ (1.5 AU)
தூரத்தில் உள்ளது. செவ்வாயையும் தாண்டி 25 கோடி
கிமீ தூரத்தில் பூமி இருக்கும் என்று கூறுவது தவறானது
மட்டுமல்ல அடிமுட்டாள்தனமானதும் ஆகும். எனவே
66% அதிகரிப்பு என்பது இகழ்ச்சியுடன் நிராகரிக்கத்
தக்கது.

இதனால் பூமி குளிர்கிறது என்றும் நோய்கள் வரும்
என்றும் அளவே இல்லாமல் பொய்கள் பரப்பப்
படுகின்றன. மத்தியானம் ஒரு மணிக்கு வெயிலில்
இறங்கி நடந்து பாருங்கள். குளிர் அதிகரிக்கிறது
என்பதெல்லாம் எவ்வளவு பொய் என்று அனுபவத்தின்
மூலம் உணரலாம்.

இதுகுறித்து ஏற்கனவே full fledgedஆக ஒரு கட்டுரை
எழுதினேன். தற்போது வதந்திகள் அதிகரிக்கவே
இந்தக் கட்டுரையை கையை ஒடித்துக் கொண்டு
எழுத நேர்கிறது. பொய்யைச் சொல்லுகிறவனுக்கு
ஒரு நிமிட வேலை. அது பொய் என்று நிரூபித்து
உண்மையை நிலைநாட்டுவதற்குள் தாடைகள்
உடைந்து விடுகின்றன.
-------------------------------------------------------------
பின்குறிப்பு::
மாலைமலரின் மேற்குறிப்பிட்ட தவறான செய்தி
வந்திருக்கிறதா? வந்திருந்தாள் அதன் நகல் அல்லது
clippingஐ இங்கு பதிவிடுமாறு வாசகர்களை
வேண்டுகிறேன்.
**********************************************
       
    
      
  

 சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிலோ மீட்டர் ஆகும். ஆனால் அல்பெலியன் நிகழ்வு காலத்தில் 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிக்கும். சுமார் 66 சதவீதம் தூரத்தின் அளவு அதிகரிக்கும்.

சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும். அல்பெலியன் கால கட்டத்தில் உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம.
எனவே வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி மாலைமலர் ------
Like
Comment
Share