வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

சென்னை வானொலியில் அறிவியல் சிற்றுரை!
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்குகிறது!
---------------------------------------------------------------------------------------

நிலையம்: சென்னை  A  (CHENNAI "A" STATION ) 

நாள் : செப்டம்பர் 1 முதல் 5 வரை; 5 நாட்கள் 
             ( 01.09.2014 முதல் 05.09.2014 வரை)

நேரம்: காலை 7.25 முதல் 7.30 வரையிலான 5 நிமிடங்கள்  

 அறிவியல் தலைப்புக்கள்:
--------------------------------------
1) எதிர்காலத்தின் எரிபொருள் எத்தனால் 
2) வானில் பறக்கும்போது புவிஈர்ப்புவிசையை 
எதிர்கொள்வது எப்படி?
3) நகலாக்கம் (  CLONING) 
4)  ஆறு கோடி ரூபாய் பரிசுக்குரிய கணிதப் புதிர்
5) அணு உலைக் கழிவுகளைக் கையாளுதல் 

சொற்பொழிவு:
----------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
இயக்குனர், நியூட்டன் அறிவியல் மன்றம்

அறிவியல் உரை கேட்க அழைக்கும்,

நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை. 

வீரை பி இளஞ்சேட்சென்னி கவிதைகள் 
----------------------------------------------------------------- 

தொலைந்த வாழ்க்கை
------------------------------- 
அடுத்த பிறவியில்
நீயும் நானும்
கணவன் மனைவி
இது சத்தியம்.

போன பிறவியிலும்
நீயும் நானும்
கணவன் மனைவியாகவே
வாழ்ந்திருக்கிறோம்
இது சரித்திரம்.

இந்தப் பிறவி மட்டும்
திருவிழாவில் தொலைந்து போன
குழந்தை போல
ஏனோ கைநழுவிப் போனது.


*********************************************************************** 

வாழ்க்கைப் பயணம்
----------------------------- 
திட்டமிட்ட ஒரு பயணத்துக்கு
ஆறு மாதம் முன்னதாகவே
புகைவண்டி இருக்கைக்கு
முன்பதிவு செய்வது போல

அடுத்த பிறவியில்
நீயும் நானும்
கணவன் மனைவியாக
வாழ்வதற்கு
இப்போதே
முன்பதிவு செய்வோம், வா.


-------------------------------------------------------------------------
******************************************************************* 

புதன், 20 ஆகஸ்ட், 2014

 ஊருடன் பைக்கின் வேருடன் கெடும்!
சீமானுக்கும், கத்தி-புலிப்பார்வை திரைப்படங்களின்
தயாரிப்பாளர்களுக்கும்  எச்சரிக்கை!
----------------------------------------------------------------------------------
நடிகர் விஜய் நடிக்கும் கத்தி என்ற திரைப்படம் 
ராஜபக்சேயின் உறவினரால் தயாரிக்கப்பட்டது.
இது ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்துகிறது.
இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றங்களில் இருந்து 
ராஜபக்சேவைக் காப்பற்றும் நோக்கத்துடன் எடுக்கப் பட்டது.
இது போன்றதே புலிப்பார்வை என்ற திரைப்படமும்.
ராஜபக்சேவின் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 
சிறுவன் பாலச்சந்திரனை குழந்தைப்  போராளியாகச்
சித்தரித்து அதன் மூலம் அச்சிறுவனின் படுகொலையை 
நியாயப் படுத்துகிற படம் புலிப்பார்வை 

இவ்விரு படங்களுக்கும் தமிழகம் முழுவதும் பெரும்
எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இவ்விரு படங்களையும் ஆதரித்து 
ராஜபக்சேவுக்கு முட்டுக்கொடுக்கும் துரோகி சீமானுக்கும் 
பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று, ஆகஸ்ட் 19, 2014 அன்று, 65 தமிழ் அமைப்புகள் 
ஒன்று கூடி இவ்விரு திரைப்படங்களுக்கும் கடும் 
எதிர்ப்பைத் தெரிவித்தன.செய்தியாளர் சந்திப்பு நடத்தப் பட்டது.
கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் 
தலைமையில் கூடிய 65 அமைப்புகளில் சிலவற்றை இங்கு 
குறிப்பிடுகிறோம்.
1) தனியரசு, சட்டப் பேரவை உறுப்பினர்
2) பேராசிரியர் ஜவஹரில்லா, ம.ம.க
3)விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக வன்னி அரசு
4)தியாகு 
5)கூடங்குளம் உதயகுமார் 
6)பெரியார் தி.க 

எட்டுக்கோடித் தமிழர்களைப் பகைத்துக் கொண்டு 
கத்தி, புலிப்பார்வை  ஆகிய இரண்டு திரைப்படங்களையும் 
யாரும் தமிழ் நாட்டில் திரையிட்டு விட முடியாது.
உலகின் எந்தப் பகுதியிலும் இவ்விரு படங்களையும்
தமிழர்களின் எதிர்ப்பை மீறி யாரும் வெளியிட்டு விட முடியாது.

தமிழ் இன எதிர்ப்பை மையமாகக் கொண்டு 
எடுக்கப்பட்ட இவ்விரு படங்களையும் ஆதரித்து 
நிற்பதன் மூலம் சீமான் ஒரு துரோகி என்பது 
அம்பலப்பட்டு விட்டது.

எட்டுக்கோடித் தமிழர்களையும் பகைத்துக் கொண்டு 
நிற்கும் சீமானே, ஊருடன் பைக்கின் வேருடன் கெடும் 
என்று எச்சரிக்கிறோம்.

************************************************************




  

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

காதலின் பௌதிகம்
--------------------------------------- 

வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------

உன் இளமூங்கில் தோளில் 
துப்பட்டா 
தொங்கும் அழகில் லயித்து 
கச்சிதமான பேரபோலா என்று 
உறுத்து உறுத்துப் பார்த்தேன் 
வசவு உமிழ்ந்து நகர்ந்தாய்.

உன் தங்கையைக் கண்டதும் 
உன் ஐசோடோப் 
உன்னினும் அழகு என்றேன்
கோபத்தில் சிவந்தாய்.

உன் மேனியின் அபாய வளைவுகளில் 
திரும்புவதற்குத் தேவையான 
'டார்க்'கை அளக்க விரும்பினேன் 
அனுமதி மறுத்தாய்.

மின்னி மறையும் உன் இடை 
பல்லாயிரம் மெகாவாட் மின்சாரத்தை 
எவ்வளவு வோல்ட்டேஜில்
தயாரிக்கிறது என்று அறிந்திட 
மல்டிமீட்டரை உன் இடையில் 
பொருத்த முற்பட்டேன்
கண்டிப்புடன் தடுத்தாய்.

நம் காதல் 
அசிம்ப்டோட் ஆகவே நீள்கிறதே 
தொடுபுள்ளியில் சங்கமிக்கும் 
பொன்பொழுது எப்போது என்றேன்.

துருத்திக்கொண்டு 
என்னுடன் கூடவே வரும் 
பௌதிகத்தைக் கைவிட்டால் 
கைத்தலம் பற்றலாம் என்றாய்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து 
அப்பாலுக்கு அப்பாலும் 
உச்சம் தரும் பௌதிகத்தைக் 
கைவிடுதல் எங்கனம்?

நியூட்டனும் கலாமும் 
வெளிச்சம் பாய்ச்ச 
ஒரு நானோ நொடியில் 
நான் தெளிந்தேன்.

**********************************************   
குறிப்பு: டார்க் =torque
------------------------------------------------------------------------------------------------------------------
     
    

புதன், 13 ஆகஸ்ட், 2014

வீழ்ந்தவை விருட்சங்கள் மட்டுமல்ல!
--------------------------------------------------------------- 

வீரை  பி. இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------------------------------------------------   

வாய்க்காங் கரை வீட்டுச் சிறுவர்கள் 
வாசமடக்கி மரத்தடியில் 
முத்துச் செதுக்கி  
விளையாடுகிறார்கள் 
முத்துக்களை இழந்த சிறுவன் 
கொஞ்சம் முத்து கடனாகக் கேட்க 
சேக்காளி தர மறுத்ததால் 
ஆவுடையம்மை அக்காவிடம் போய்
முத்து வாங்கி வந்து விளையாடுகிறான். 

பூவரச மரத்தை ஒட்டி 
சமையாத பிள்ளைகள் 
பாண்டி விளையாடுகிறார்கள் 
கால் இடறாத வண்ணம்
பாவாடையை லேசாக 
உயர்த்திச் சொருகிக்கொண்டு 
கட்டம் கட்டமாகத் தாவுகையில் 
எழும்பும் கொலுசுச் சத்தம் 
மனசை வருடிக் கொடுக்கிறது. 

முடுக்கடி வீட்டு நடையில் 
கொஞ்சம் பெரிய பையன்கள் 
கள்ளன்-போலீசு 
விளையாடுகிறார்கள் 
ஒளிந்து கொள்ளச் சவுகரியமாக 
நடுமுடுக்கு இருப்பதால் 
கள்ளன்களாக இருப்பதற்கே 
எப்போதும் பையன்கள் 
போட்டி போடுவார்கள். 

அதுக்கு அங்கிட்டு 
அழிப்போட்ட வீட்டுத் தாழ்வாரத்தில் 
நாலு பேர் சதுரமாக உட்கார்ந்து 
தாயம் விளையாடுகிறார்கள் 
சொக்கலால் பீடியும்
யானை சிகரெட்டும் 
துணை நிற்க. 

லேசாக இருட்டத் தொடங்கியதும் 
இடுப்பில் குடத்துடன் 
தண்ணீர் எடுக்க வரும் 
சமைந்த பெண்களை 
எதிர்பார்த்து நிற்கும் 
இளவட்டங்களின் காத்திருப்புக்களால் 
கர்வம் கொள்கிறது அந்திமாலை. 

தெரு முழுவதும் 
மனிதத்தின் உயிர்ப்பும் 
அந்த உயிர்ப்பின் வாசத்தைச் 
சுமந்து வரும் தென்றலும் 
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் 
எமக்கு உரியனவாய் இருந்தன. 

இன்று 
மரம் இல்லாமலும் 
யாரும் விளையாடாமலும் 
வெற்று நிலப்பரப்பாய்
கைம்பெண் கோலத்தில் 
நிற்கிறது எங்கள் தெரு 
பாடாண்  திணையில்
கையறுநிலைத் துறையில் அமைந்த 
என் பாடலைப் பெற்றுக் கொண்டு.

***********************************************         

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தோடுடைய செவியன்களின் மெய்த்தேட்டம்
------------------------------------------------------------------------- 
பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------
மார்க்சியம்
லெனினியம்
பெரியாரியம்
தலித்தியம்

பெண்ணியம் 
பின் நவீனத்துவம்
முன் புராதனத்துவம்
யாவும் 

அங்காடிப் பேழைகளில்.

போங்கடா மயிரான்களா
என்று ஆரோகணிக்கின்றான்
நுகர்வியப் புரவி மீது
ஒற்றைக் கடுக்கன் அணிந்த
கான்ட்டம்ப்ரரி டமில் யூத்
தொடர்கின்றன மேலும் புரவிகள்.


************************************************* 

BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத் 

திட்டம் வர இருப்பதாகச் செய்திகள் 
சொல்கின்றன. சில ஆண்டுகளுக்கு
முன்பு, இதுபோன்ற பேச்சுக்கள் வந்தபோது எழுதப்பட்ட கட்டுரையை 
தற்போது மறுபிரசுரம் செய்கிறோம்.
கட்டுரை இன்றைக்கும் பொருந்துகிறது.நாடு முழுதும் உள்ள வாசகர்களுக்காக எழுதப் பட்டதால் இது ஆங்கிலத்தில் உள்ளது. 
------------------------------------------------------ 
BSNL- இல் VRS குறித்த கட்டுரை. 
------------------------------------------------- 

GREET THE EXODUS!

------------------------------------------------------------------- 

P ILANGO SUBRAMANIAN
-----------------------------------------------------------------------
BSNL the Public Sector telecom giant has decided to downsize the company by one lakh. The strategy employed is an offer of VRS (VOLUNTARY RETIREMENT SCHEME), a Golden Handshake to its employees.
THE BACKGROUND:
-----------------------------
The PSU which has a work force of THREE LAKHS spends nearly 50 per cent of its revenue on wage bills annually. It has incurred a loss of (a) Rs 1822 crore and ( b) Rs 6000 crore during the fiscals 2009-10 and 2010-11 respectively. The loss is on the increase and the situation may worsen further.

The successive loss making has prompted the Dept of Public Enterprises to brand BSNL as a marginally loss making company. The future too is not rosy even to the optimists in BSNL and it may well become a solid loss-making company soon.

The ACHILLES’ HEELS of BSNL is its giant size work force of 3 lakhs most of whom is junk. No other private operator in the industry has this much of huge staff strength. Bharti Airtel the market leader in telecom with a subscriber base of 150 million has only 23000 employees in its rolls as against 3 lakhs of BSNL.

In BSNL the ratio between the volume of work and the staff strength is alarmingly disproportionate and skewed indicating the inflated staff strength when compared to international and domestic standards. Nevertheless the “ less work-more staff” condition in BSNL is of no help to the organization which could not even resist the ongoing erosion of its subscriber base thanks to the sluggish work force. Things have moved from bad to worse after the introduction of MNP  (MOBILE NUMBER PORTABILITY) this year and the 100 million subscriber base of BSNL has started eroding.

No bonus was paid to the staff of BSNL for the last two years. The management has resorted to expenditure control and sundry allowances were withdrawn. These measures have created apprehensions in the minds of the workers that BSNL wont survive and would become another AIR INDIA.

Really the count down has begun for BSNL. Sensing this the management of BSNL in consultation with the PMO has rightly decided to jettison the excess cargo lest the company should not sink. The decision to reduce the work force by one lakh is not an arbitrary decision but in agreement with the recommendations of SAM PITRODA committee.

VRS PROPOSALS:
------------------------
Now let us consider the VRS proposals put forth by the management. The details are now transpired through various web sites of BSNL unions and therefore it is needless to repeat them here. There are two sets of proposals in the air viz: ( a) BSNL MODEL and ( b) GUJARAT MODEL and of these two one will be chosen. The management has made these proposals sufficiently attractive and if the unions are not satisfied they are at liberty to fight for improvement.

The concept of VRS may be new to BSNL but the Indian working class has gained rich Experience and wisdom all along its path where numerous VR schemes were successfully dealt with.

The present proposals of VRS ARE INDEED BETTER, GAINFUL AND BY AND LARGE ACCEPTABLE in the contemporary socio-economic scenario. Any employee with a robust common sense will easily conclude that accepting the said VRS WOULD BE THE PRUDENT DECISION ever made in his life.

BSNL HR: THE SORDID PICTURE:
-------------------------------------------------
The sorrow of BSNL is its work force which is mainly sub standard. BSNL is the only organization where the promotees from the lower ranks constitute a large chunk of the Work force. A scrutiny of the HR details of these promotees reveals that many SUB- DIVISIONAL ENGINEERS (Divisional Engineers and few DGMs even) have a very low academic profile and most of them are mere matriculates. In BSNL till recently the promotions were not linked with academic qualification and because of this phenomenon matriculates and graduates in various non-science disciplines were baptized as Sub Divisional Engineers.

In the non-executive side also the same phenomenon operated and phone mechanics with the qualification of VIII standard passed/failed were made as Technical Assistants. With the induction of modern technology which is essentially wireless these promotees have become a liability to BSNL. Whatever is done by BSNL is done by the DIRECT RECRUITS who are physics/engineering graduates.

The high-tech projects like CDR, ERP and NGN could not be successfully implemented in BSNL and the reason therefor inter alia is the technically incompetent work force.

How a Sub Divisional Engineer who is a Tamil Pundit or a History graduate can contribute to NGN, the next generation network?

Another matter of concern is the ratio between the non-executives and the Executives which is
5:1. ( no. of executives is 55019 and non-executives 221287). This means that for every 5 phone mechanics there is an engineer!
How ridiculous!
From the sordid picture one concludes that the need of the hour is not a VRS but a grand OPERATION PURGE to weed out the incompetent which may be possible through a CRS!

THE NEGATIVE ROLE OF THE UNIONS:
---------------------------------------------------------
In BSNL the VRS has always been a rumour so far. But it has become an inevitable eventuality now. Yet some unions are skeptical about its arrival.

It is high time for the unions to lay an effective role and to extract the maximum benefit out of the proposed VRS. But they are callus and indifferent to the issue. They indulge in euphemism.
Without an objective assessment their one line solution is “ OPPOSE VRS”.
One wonders why the unions engage themselves with the conservative idea that VRS should be opposed. The unions with the illogical slogan of ‘oppose VRS’ can do incalculable harm to the innocent workers. Their Quixotic PROJECTS LIKE HINGER FAST, ONE DAY TOKEN STRIKE etc have alienated them from their members.
VRS DOES NOT HAVE ANY NEGATIVE CONNOTATION. But the unions look at it with a jaundiced eye. The unions by reducing everything to a conflict of villain and hero not only miss the point but land in falsified decisions even. Swayed by the customary belief the unions feel that anything by the Govt is to be opposed. This is the secret of their opposition to VRS.
Do the unions oppose the present VRS? Or do they oppose the very concept of VRS?
If they oppose the concept itself, then it becomes a theoretical question which can’t be discussed in mass front platforms. And Marxism teaches us that theoretical knowledge should be brought into the working class only from outside. It is not within. Interested readers may please refer the book: WHAT IS TO BE DONE? by V I LENIN.

VRS: THEORETICAL ANALYSIS:
--------------------------------------------
Theoretically VRS is a derivative obtained from certain initial conditions through a scientific process. There exists a clear CAUSE AND EFFECT relationship in it. As long as there is a cause, there will be an effect. If the effect is to be nullified then the cause should be removed.

In our case the causes for VRS are as under:-
a) Inflated population in BSNL
b) Incompetant HR
c) Crippled advancement
If these causes are removed then the VRS is not necessary.

Do the unions which oppose VRS have any meaningful alternative? The answer is a BIG NO. They have to seek the guidance of their mentors. But having travelled long in a direction opposite to the revolution their mentors, the pseudo Left parties could not guide them to a correct destination. But many UNMARXIST solutions are there in their cup-boards and the unions may be asked to pick up one.
IT IS CRYSTAL CLEAR NOW THAT THERE IS AN INTERNAL CONTRADICTION
BETWEEN BSNL AND ITS OWN STAFF. THIS IS AN UNANTAGONISTIC CONTRADICTION. HOW WILL THIS BE RESOLVED? THE ANSWER IS : VRS!

THEREFORE AN EXODUS OF ONE LAKH EMPLOYEES IS A MUST AND LET US GREET IT.

****************************************************




.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!!!---------------------------------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------------
முழுசாக ஆறு  ஆண்டுகள் முடிந்து விட்டன.
2009, மே 17. இந்தக் கொலைகார நாளை
மறக்க முடியுமா?
முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த அந்தக் கொடூரமான
படுகொலைகள் மானுட வரலாற்றில் இதுவரை
நடந்தது இல்லை.

**
வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு
சிங்கள ராணுவத்திடம் சரண் அடைவதற்காக

புலித்தலைவர்கள் நடேசன் தலைமையில் சென்றனர்.
நடேசன், பூலித்தேவன் இவர்களைத்  தொடர்ந்து
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரனும்
சென்றார். சரண் அடைந்த 300 புலித்தலைவர்களையும்
கோத்தபாய ராஜபக்ஷேவின் உத்தரவின்பேரில்
சரத் பொன்சேகாவின் ராணுவம் படுகொலை செய்தது.
**
மாவீரன் பிரபாகரன் படுகொலை செய்யப் பட்டார். 

அவர் வீர மரணம் அடைந்த  அந்த நாள் மே 17, 2009.
ஆனால், பிழைப்புவாதிகளான, போலி தமிழ்தேசியவாதிகள்
பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று
பொய் சொல்லிப் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


1) நெடுமாறன்
2) வைகோ
3) சீமான்
4) கொளத்தூர் மணி
5) கோவை ராமகிருஷ்ணன்
6) திருமுருகன் காந்தி


இன்ன பிற போலிகள் மறைந்த மாவீரர் பிரபாகரனுக்கு
அஞ்சலி செலுத்துவது இல்லை. அவர் உயிருடன் இருக்கிறார் 

என்று பொய் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
**
சிங்கள அரசும் இந்திய அரசும் பிரபாகரன் இறந்து
விட்டார் என்று சொல்வதை நாம் ஏற்கவில்லை.
இந்தியா-இலங்கை தவிர்த்த சர்வதேசப்
பத்திரிகையாளர்கள், சேனல்-4 போன்ற சுயேச்சையான
பத்திரிகையாளர்கள், விக்கிலீக்ஸ் அமைப்புடன் தொடர்பு
உடைய சுதந்திரமான பத்திரிகையாளர்கள் ஆகிய
அனைவரும் பிரபாகரன் இறந்து விட்டதை அசைக்க
முடியாத ஆதாரத்துடன் உறுதி செய்து இருக்கிறார்கள்.

**
திருமாவளவன் உறுதி செய்கிறார்!
-------------------------------------------------------------
"நடேசன், பூலித்தேவனுடன் பிரபாகரனும் சரண் அடைந்தார்,
அதன் பின்னரே கொல்லப்பட்டார் " என்று தீவிரமான புலி 
ஆதரவாளரான ஒரு நண்பர் கூறியதாக ஒரு தகவலை 
தோழர் தொல் திருமாவளவன் ஜூனியர் விகடன் ஏட்டுக்கு 
அளித்த பெட்டியில் கூறி இருக்கிறார். 
(ஜூ.வி, டிசம்பர் 27, 2009)
**       
யதார்த்தத்தை, உண்மையை ஏற்றுக் கொள்வோம்.
ஈழ விடுதலைப் போரை மீண்டும் முன்னெடுப்போம்.
மாவீரர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.


****************************************************************
வினவு, புதிய ஜனநாயகம் ஏடுகளின் 
ஆசிரியருக்குக் கடிதம் 
----------------------------------------------------
அன்புள்ள வினவு , புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழுவினருக்கு,

(இது பிரசுரத்துக்கு அன்று; ஆசிரியர் குழுவின் பார்வைக்கு)

--------------------------------------------------------------------------------------

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஏடான "உணர்வு" (ஆகஸ்ட் 08-14, 2014)
ஏடு காரல் மார்க்ஸ் மீதும், வினவு மற்றும் புதிய ஜனநாயகம்
ஏடுகளின் மீதும் இழிவான அவதூறுகளை எழுதி உள்ளது.
காரல் மார்க்ஸ் நடிகர்  விஜயகாந்த்தைப் போன்ற ஒரு குடிகாரர் என்றும், புதிய ஜனநாயகம் ஏடு கலைஞர் ஜெயா ஆகியோரின் அந்தரங்கங்களை எழுதி வருகிறது என்றும் "உணர்வு' ஏடு எழுதி உள்ளது.

இதை நான் சுட்டிக்காட்டி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய
அவசியம் இல்லை என்ற போதிலும், தங்களின் கவனத்துக்கு
கொண்டு வருவது எனது கடமை என்று உணர்ந்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.    

முன்பு, ஆனந்த விகடனில், ஸ்டாலினைப் பற்றி அவதூறாக
மதன் என்பவர் எழுதினார் என்பதற்காக, ஒரு கூட்டமாகத் திரண்டு விகடன் அலுவலகத்துக்குச் சென்று மதனைக் கண்டித்தது
எனக்கு நினைவு வருகிறது.

மிகுதியும் சிற்றிதழ்களில் மட்டுமே எழுதி வரும் ஒரு
கவிஞர், போராளிகளைக் கொச்சைப் படுத்தி எழுதினார்
என்பதற்காக (சந்தில் நிற்கிறாள் கல்யாணி என்று எழுதியதாக
நினைவு) முன்பு அவர் வீட்டுக்கே சென்று அவரை மிரட்டிவிட்டு வந்ததும் எனக்கு நினைவு வருகிறது.

இது குறித்து மகஇக மூத்த தோழர் ஒருவரிடம் ஏற்கனவே
தெரிவித்து விட்டேன். ஆயினும் "உணர்வு" ஏட்டின் அவதூறு குறித்து வினவு தளத்தில் ஒரு சிறு கண்டனம் கூட இல்லை என்பது
வருந்தத் தக்கது.

மதன் போன்ற சவுண்டிப் பாப்பான்களிடம் வீரம் காட்டுவதும்
தவ்ஹீத் ஆட்கள் என்றால் மிரள்வதும் ஆன  இந்த நடைமுறையை   என்னவென்று சொல்வது?

மண்ணடியில் இருக்கும் "உணர்வு" ஏட்டின்  அலுவலகத்துக்கு
கூட்டமாகச் சென்று (விகடன் அலுவலகத்துக்குச் சென்றது போல) தட்டிக் கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, வினவு தளத்தில் ஒரு கண்டனமோ எச்சரிக்கையோ கூட எழுத இயலாது என்றால். அந்த நடைமுறையை என்ன என்பது?

பின்குறிப்பு:
----------------- 
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் என்றும் அதை முறியடிப்பது தங்கள் கொள்கை என்றும் சுவரொட்டி ஒட்டி இருந்ததைப் படித்து விட்டு, அதனால் ஆர்வம் ஏற்பட்டு "உணர்வு" ஏட்டை வாங்கிப் படித்தேன்.மற்றப்படி, அதைச் சீந்தியது இல்லை.

தங்கள் அன்புள்ள,
பி. இளங்கோ சுப்பிரமணியன்
சென்னை -94.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

யாப்பென மொழிப!
---------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------------

ஒன்றிரண்டு கெட்ட வார்த்தைகளை
வாகாய் நுழைப்பதாலும்

தீய்ந்து போன சமஸ்கிருதச் சொற்களைத்
திணிப்பதாலும்

இடக்கர் அடக்கலை இகழ்ந்து
கத்தி பாய்ச்சுவதாலும்

கருப்பொருள்
மனப்பிறழ்ச்சி யுற்றவனின் தற்கூற்றாய்
எதுவாயினும்
கர மைதுனம் முதல்
ஆசனப்புழைப் புணர்ச்சி வரை

தலைப்பு
அதீதத்தினும் அதீதமாக
‘யவனப் போர் வீரனின் மதுக்குடுவையும்
முதுமக்கள் தாழியின் நாளமில்லாச் சுரப்பிகளும்’
என்பது போலும்

பாயாசத்து முந்திரியாய்
அல்குலும் நகிலும்

எனினும்
புரியாமையின் புகைமூட்டம்
கவிப்பதில்தான்
கனம் கொள்ளும் கவிதை.

--------------------------------------------------------------------------------------


வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சமஸ்கிருததத்தை எதிர்ப்பவர்கள் 
தமிழில் சமஸ்கிருதச் சொற்களைக் 
கலந்து பேசலாமா? எழுதலாமா?
என்ற கேள்விக்கான விடை!
---------------------------------------------------------
உயிருள்ள எல்லா மொழிகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே 
இருக்கின்றன.அந்த இயக்கப் போக்கில் மாறிக் கொண்டே 
இருக்கின்றன. செத்துப் போன சமஸ்கிருதம் இயங்குவதும்
இல்லை; மாறுவதும் இல்லை.

மொழிகள் தொடர்ந்து இயங்கும்போது மற்ற மொழிகளுடன்
உறவு கொள்கின்றன;மொழிகளுக்கு இடையில் 
கொடுக்கல் வாங்கல் நிகழ்கிறது.இதன் விளைவாக ஒரு 
மொழியின் சொற்கள் வேறு ஒரு மொழியில் கலக்கின்றன;
இது தவிர்க்க முடியாதது மட்டுமின்றி இயல்பானதும் 
ஆகும்.

எந்த ஒரு மொழியும் தனக்குச் சொந்தமான தனக்கு மட்டுமே 
உரித்தான சொற்களைக் கொண்டு மட்டும் இயங்குவதில்லை.
பிற மொழிகளின் சொற்களையும் ஏற்றுக் கொண்டுதான் 
ஒரு மொழி இயங்குகிறது.இதற்கு விதிவிலக்கே இல்லை.

ஆங்கில மொழியானது உலகின் பல்வேறு மொழிகளிலும் 
உள்ள சொற்களைத் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. சமகாலத் தமிழில் ஆங்கிலச் சொற்கள் மிகுதியும் விரவி உள்ளன.
மொழி என்பது உற்பத்தி சார்ந்து இயங்குவது என்ற
மார்க்சியப் புரிதல் இருந்தால், உற்பத்தி சார்ந்து உருவாகும் 
புதிய சொற்கள் எல்லா மொழிகளிலும் இடம் பெறுவது 
இயற்கையே என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

நிலவுடைமைச் சமூக அமைப்பு நிலவிய காலத்தில் 
சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் விரவின. இவ்வாறு விரவிய சொற்களைத் தொல்காப்பியம் ஏற்றுக் கொள்கிறது.
மொழி குறித்த மார்க்சியப் புரிதல் தொல்காப்பியருக்கு 
இருந்தது.இங்கு மார்க்சியப் புரிதல் என்பது அறிவியல் 
புரிதல் ஆகும்.

தமிழில் உள்ள சொற்கள் யாவை என்ற வினாவுக்கு 
விடையளிக்கிறார் தொல்காப்பியர்.
     "இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று 
      அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"
          ---- சொல்லதிகாரம், எச்சவியல், நூற்பா:880.....
தமிழில் உள்ள சொற்கள் நான்கு வகை என்கிறார் 
தொல்காப்பியர்.
1) இயற்சொல் (எளிய சொல்) எ.கா: மண், மரம், மலை, 
    செடி, கோடி.
2)திரிசொல் (கற்றவர்க்கு விளங்கும் சொல் ) எ.கா: தத்தை,
    கிள்ளை (கிளி என்று பொருள் படுவன இவை) 
3) திசைச்சொல்  (பல்வேறு திசைகளில் இருந்தும் வரும் 
    சொல். எ.கா: சைக்கிள்.
4) வடசொல் ( சமஸ்கிருதச் சொல் ).
     எ.கா: கமலம், காரியம் 
    கமலம் என்பது தாமரை ஆகும். 
    காரியம் என்பது செயல் ஆகும்.

ஆக, இயற்சொல்,திரிசொல் ஆகியன தமிழுக்கே உரிய 
சொற்கள்.திசைச்சொல்லும் வடசொல்லும் பிறமொழிச் 
சொற்கள். இந்த நான்கு வகையும் கொண்டதே தமிழ்.

எனவே, தமிழில் கலந்த சமஸ்கிருதச் சொற்களைப் 
பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவதற்கு 
தொல்காப்பியம் அனுமதிக்கிறது. ஒரு மொழியின் 
சொற்களஞ்சியத்தில் பிறமொழிச் சொற்கள் இருந்தே தீரும்.
இது தமிழுக்கு மட்டுமன்று, எல்லா மொழிகளுக்கும் 
பொருந்தும் கோட்பாடு ஆகும். 

தொல்காப்பியம் அறிவியல் வழியில் மொழிக்கு இலக்கணம் 
கூறிய நூல். உலகில் வேறு எந்த மொழியிலும் இதுபோல 
அறிவியல் வழியிலான இலக்கணம் இல்லை; இல்லவே 
இல்லை. தற்கால மொழியியல் அறிஞர்கள் 
தொல்காப்பியத்தைப் படித்து வியந்து போகின்றனர். 
தமிழுக்கு மட்டுமே அறிவியல் வழியிலான இலக்கணம் 
அமைந்து இருக்கிறது என்பதை அட்டியின்றி ஏற்கின்றனர்.

இன்னும் நிறைய விவரங்களைக் கூற இயலும்.
எனினும் வாசகர்களின் புரிதல் மட்டத்தையும் 
கணக்கில் கொண்டு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.     

எனவே, தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ் பேசும் எழுதும் 
அனைவரும் தமிழில் வந்து கலந்துள்ள சமஸ்கிருதச் 
சொற்களைப் பயன்படுத்துவது குறை அன்று.
இது எவ்விதத்திலும் சம்ஸ்கிருத எதிர்ப்புக்கு 
அருகதை அற்றவர்களாக அவர்களை ஆக்கி விடாது.
அவ்வாறு கருதுவது பேதைமை ஆகும்.

ஒரு மொழியின் சொற்களைப் பயன்படுத்துவது 
என்பது வேறு. அந்த மொழியின் ஆதிக்கத்த்க்கு 
உடன்படுவது என்பது வேறு.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவது எங்கும் காணோம்.
      ...........பாரதி...............    

****************************************************************

    
கருணை மனுவை ஏற்க மறுத்தார்!
தூக்குத் தண்டனை உறுதி!!
------------------------------------------------------ 
ராஜேந்திர வாஸ்னிக் என்று ஒரு கயவன்.31 வயதான 
இவன் திருமணம் ஆனவன்.மராட்டிய மாநிலம் 
அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஏழு ஆண்டுகளுக்கு 
முன்பு, மார்ச் 2, 2007 அன்று, இவன் தனது திரண்ட கயமையை 
ஒரு மூன்று வயதுப் பிஞ்சுப் பெண்  குழந்தையிடம் 
வெளிப்படுத்தினான். அந்த இளம் பிஞ்சைக் கற்பழித்துக் 
கொன்றான்.

பின்னர் பிடிபட்டான். தண்டிக்கப் பட்டான்.உச்ச நீதிமன்றத்தில்,
மேதகு நீதியரசர்கள் ஏ.கே.பட்நாயக், ஸ்வதந்தர் குமார் ஆகிய 
இருவரும் இவனது மரண தண்டனையை உறுதி செய்து 
பெப்ருவரி 29, 2012 அன்று தீர்ப்பளித்தனர்.

இதன் பிறகு, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு 
அனுப்பினான் இக்கயவன்.மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் 
இக்கயவனின் கருணை மனுவை நிராகரித்தார். அவரை வணங்குகிறேன்;போற்றுகிறேன். "செயற்கரிய செய்வார் 
பெரியர்" என்ற வள்ளுவரின் வாக்கு நிலைப்படும் வண்ணம் 
தீர்ப்பளித்த பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு நாடே தலை 
வணங்குகிறது.

கூடிய விரைவில் இக்கயவனைத் தூக்கில் இட வேண்டும்.
அதுவும் பகிரங்கமாகத் தூக்கில் இட வேண்டும். 

மூன்று வயதுக் குழந்தையின் மீது  காமவயப் படுகிறவன் 
பிறழ்ந்த மனநிலை உடையவன். இவன் வாழத் தகுதி 
அற்றவன். இவனை இந்த உலகில் வாழ விடக்கூடாது.
டாக்டர் மு.வ.வின் "கயமை" என்ற நாவலில் இறுதி வரியாக 
"ஒழிந்தான் ஒரு கயவன்" என்பது வரும்; அந்த வரியோடு 
நாவல் முடிவடையும். அதேபோல இந்தக் கயவன் வாஸ்னிக்
ஒழியட்டும்.

**********************************************************************************************8     
        

புதன், 6 ஆகஸ்ட், 2014


பிருஷ்டமும் உண்டுகொல்!
---------------------------------------------------- 

வீரை. பி. இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------  
தோழி!

ஒளி விலகும் அந்தியில்
புலால் நாறும்
கடற்கரையின் மணற்பரப்பில்
நீயும் நானும்
ஒரு தீவிர விவாதத்தில்.

கருமமே கண்ணாக
உனது தேற்றங்களை
நிரல்பட நீ மொழிகிறாய்.

சில நியூட்டன்கள் விசையைச் செலுத்தி
உப்பங்காற்று
உன் முந்தானையை விலக்க
அபினிக் கனிகளின் புலப்பாட்டில்
நான் கிளர்ச்சியுறுகிறேன்.

உன் கறுப்பு நிறக் கச்சின்
வார் வழியே
வாத்சாயனர் வந்திறங்க
மறைகிறார்கள்
ஐன்ஸ்டினும் ஹெய்சன்பெர்க்கும்.

உன் பிருஷ்டத்தில் கைவைத்து
ஒட்டியிருக்கும் மணல் துகளைத்
தட்டிவிட
வேட்கை கொள்கிறேன்.

என்னை
ஒரு கனவானாக அங்கீகரித்து
ஆடை திருத்தாத
உன் அமைதியின் உந்துதலால்
மனதை மடைமாற்றி
ஒரு லேசர் கற்றை போல்
பாடு பொருளில்
கவனம் குவிகிறேன்.

என்றாலும்
என் மனவலிமைக்கு
நேர்ந்த பங்கம் குறித்து
நாணவில்லை நான்.

ஒவ்வொரு மார்புக்கும்
ஒரு பிருஷ்டம்
உண்டு என்பதால்.
----------------------------------------------------------
முகநூலில் அவதூறு!
இளைஞர் கைது!!

--------------------------------------------------------------  
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த
ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் பிரதமர் மோடி அவர்களைப் பற்றி
அவதூறாகச் செய்தி வெளியிட்டதால் அவரை கொல்லம்
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
...தகவல் ஆதாரம்:
தினத்தந்தி சென்னை பதிப்பு 06.08.2014 ....

அனேகமாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும்
எவரேனும் ஒருவர் (அல்லது சிலர்), முகநூலில்
அவதூறாக எழுதியமைக்காக கைது செய்யப்
படுகின்றனர். இது நாளும் காணும் காட்சியாகும்.
இவ்வாறு மாட்டிக் கொள்கிறவர்களில் 99.9 சதம் பேர்
காசுவலாக எழுதி காசுவலாக ( CASUALLY)  மாட்டிக்
கொள்கிறவர்கள். மாட்டிக் கொண்டபின் நொறுங்கிப்
போகிறவர்கள். இவர்கள் எந்தவிதமான பற்றுறுதியும்
( CONVICTION ) இல்லாதவர்கள். இவர்கள் குட்டி
முதலாளித்துவ அரைவேக்காடுகள்.

கொள்கை, அரசியல் ஆகியவற்றில் பற்றுறுதி
கொண்டவர்கள் இவ்வாறு மாட்டிக் கொள்வதில்லை.
1) தான் எழுதுவது என்ன?
2) அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
3) அதன் பின்விளைவுகள் என்னென்ன?
என்பதைத் தெளிவாக உணர்ந்து எழுதுகிறவர்கள்
நேர்மையற்ற முறையில் கைது செய்யப் பட்டாலும்
அதை எதிர்கொள்ளும் வழிவகை அறிந்தவர்கள்;
எதிர்கொள்ளும் திறனும் அஞ்சாமையும்
படைத்தவர்கள்.ஏனெனில் அவர்கள் கொள்கையில்
பற்றுறுதி ( CONVICTION ) கொண்டவர்கள்.

இத்தகைய பற்றுறுதி இல்லாதவர்கள் தங்களின்
மனவக்கிரத்தை வெளிப்படுத்தி சிக்கலில்
மாட்டிக் கொள்கிறார்கள்.

முகநூல் என்பது எழுதத் தெரியாத ஒவ்வொருவனையும்
எழுத்தாளன் ஆக்கி விடுகிறது. அதோடு நிற்பதில்லை.
எழுதுகிறவனை  எல்லாம் பதிப்பாளன் ( PUBLISHER )   
ஆக்கி விடுகிறது. முகநூல் நட்பு காரணமாக
அவன் எழுதியதைப் படித்துப் பார்க்க வாசகர்களும்
கிடைத்து விடுகிறார்கள். இதனால் போதையேறிப் போகிற
குட்டி முதலாளித்துவ அரைவேக்காடுகள் மனசில்
தோன்றுவதை எல்லாம் முகநூலில் கொட்டி விடுகின்றனர்,
கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பது போல.
தன்வினை தன்னைச் சுடும் என்பது போல இவர்கள்
மாட்டிக் கொள்வதும் இயல்பான ஒன்றாகி விடுகிறது.

நாம் இதைச் சொல்வதற்குக் காரணம் ஒரு
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டுத் தான்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.

*************************************************************
            

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

மீரத நகரில் மதரசாவில் இளம்பெண் கற்பழிப்பு;
உ.பி மாநிலம் பெண்களின் நரகம்!
---------------------------------------------------------------------    
உ.பி மாநிலம் பெண்களுக்கான பாழ் நரகம் 
என்பது மீண்டும் மீண்டும் அம்பலப் பட்டுக்கொண்டே 
வருகிறது. "BOYS ARE BOYS",  "பையன்கள் அப்படித்தான்,
கற்பழிக்கத்தான் செய்வார்கள்"  என்று பாலியல் வன்புணர்ச்சிக் 
குற்றங்களை நியாயப் படுத்தும் முலாயம் சிங் உ.பியின் 
பிதாமகராக இருக்கும்போது வன்புணர்ச்சிக் குற்றங்கள் 
பெருகத்தான் செய்யும்.

அண்மையில் 20 வயது இளம்பெண் ஒருவர் மீரத்  நகரில் உள்ள
மதரசாவில் கூட்டு வன்புணர்ச்சி ( GANG RAPE ) செய்யப்பட்டுள்ளார்.
அது மட்டுமின்றி அவர் கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு 
மதமாற்றம் செய்யப் பட்டுள்ளார். கடந்த ஜூலை 30 அன்று 
கடத்தப்பட்ட அந்த இளம்பெண்ணை, மறுநாள் (ஜூலை 31)
அன்று முசாபர் நகரில்   உள்ள மதரசாவுக்குக் கடத்திச்சென்று 
அங்கு மதமாற்றத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பது 
குற்றவாளிகளின் திட்டமாக இருந்துள்ளது.

மதமாற்றத்துக்கான அந்தப் பெண்ணின் "சம்மதம்" வலிந்து 
பெறப்பட்டு அதற்கான முத்திரைத்தாளில் வாசகங்கள் 
எழுதப்பட்டு அந்தப் பெண்ணின் கையெழுத்து துன்புறுத்திப் 
பெறப்பட்டுள்ளது. இன்றைக்கு (04 ஆகஸ்ட்) ஹாப்பூர் ( HAPUR) 
மாவட்ட மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் 
வாக்குமூலம் கொடுத்தபோது முத்திரைத்தாள் ஆவணத்தையும் 
சமர்ப்பித்தார்.

ஏழை எளிய குடும்பத்துப் பெண்களை இவ்வாறு கடத்திச் சென்று, 
கற்பழித்து, மதம் மாற்றி வளைகுடா நாடுகளுக்கு விபச்சாரத்துக்கு 
அனுப்புவது என்பது உ.பியில் முலாயம்சிங்கின் ஆட்சியில்  மிகவும் இயல்பான நடைமுறையாக உள்ளது. பெருவாரியான 
மதரசாக்கள் இத்தகைய இழிசெயலில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் 
கொண்டுள்ளன என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

உ.பி.யில் கற்பழிப்புக் குற்றங்கள் நடக்காத இடம் இல்லை; 
நடக்காத நேரம் இல்லை. நடக்கிற கற்பழிப்புக் குற்றங்களில் 
பெரும்பான்மை காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்யப் 
படுவது இல்லை. 

புகார் கொடுக்கச் சென்றவர்கள் மீதே குற்றம் சுமத்தப் படுவது 
வாடிக்கை ஆகிவிட்டபடியால் பாதிக்கப் பட்டவர்கள் புகார் கொடுக்க 
முன்வருவது இல்லை. 

மதரசாக்கள் கற்பழிப்புக் குற்றங்களின் தலைமைச் செயலகமாக 
இருப்பது கேவலமானது; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
ஒடுக்கப்பட வேண்டியது. இந்த லட்சணத்தில் பாஜக அரசின் 
நிதியமைச்சர் அருண் ஜெட்லி மதரசாக்களை நவீனப் படுத்த 
கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளார். வாக்குவங்கி அரசியலுக்காக 
மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசுநிதியை, மக்களின் 
வரிப்பணத்தை ஒதுக்குவது நிறுத்தப் படவேண்டும். இந்த நிதி 
பெண்களைக் கற்பழிப்பதற்குத்தானே பயன்படும் என்று பாதிக்கப் 
பட்ட பெண்கள் கேட்கும் கேள்விக்கு பாஜக அரசின் பதில் என்ன?

கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருந்தபோது, அதைத் தட்டிக்   கேட்டார் கலைஞர். மதரசாக்கள் குற்றவாளிகளின் கூடாரமாக 
இருக்கும் உ.பி.யில் அதைத் தட்டிக்கேட்க அங்கு ஒரு 
கலைஞர் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை 
உ.பி. அரசு ஏற்படுத்தவில்லை. எனவே மத்திய அரசு தலையிட்டு 
வன்புணர்ச்சிக் குற்றவாளிகள் கைது செய்யப் படுவதையும் 
தண்டனை பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் 
நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். நகர்ப்புறப் பெண்களுக்கு ஆதரவாக கடந்த காலத்தில் திரண்ட இந்திய சமூகம், உ.பி.யின் 
இந்த எளிய கிராமப்புறப் பெண்ணுக்காகவும் திரள வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை இந்திய சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.  

தண்டனையைப் பற்றி:
--------------------------------- 
தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் முன்பு கூறிய 
ஒரு கருத்தை இங்கு நினைவு கூர்வது நலம். கற்பழிப்புக் 
குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் 
செய்யவேண்டும் என்னும் நல்லதொரு கருத்தை முதல்வர்
அவர்கள் தெரிவித்தார்கள்.
மத்திய அரசு தகுந்த சட்டத்தை இயற்றி அம்மா அவர்களின் 
கருத்தை நடைமுறைப் படுத்தவேண்டும். 
இதுவே நாட்டு மக்களின் விருப்பம்.

குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது!
அகிலேஷ் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.இது நம் கடமை.
எனினும், இதை விட முக்கியமானது, மதத்தையும் மதநம்பிக்கை, 
கடவுள் நம்பிக்கை போன்ற மூடநம்பிக்கைகளையும் முறியடிக்க வேண்டும்.இதுவே தலையாய கடமை.

*********************************************************************   
                        
புலனடக்கம்

--------------------------------------------- 
வீரை. பி. இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------
ஓசைகளும் உறைந்து விடும்
ஒரு பனிக்காலப் பின்னிரவில்
தொலைதூர நகரத்தின் விடுதி அறையில்
துணை பிரிந்த தனிமை வெடவெடக்க
விரகம் கொப்பளிக்கும் என் தேகம்
துயிலைத் துரத்தும்.

அல்குல்கள் வாடகைக்கு விடப்படும்
இடம் சேரும் வினைத்திட்பத்துடன்
தாழ் திறக்கையில்
தாள்கள் படபடத்துக்
கவனம் கலைக்கும்
மகாத்மா காந்தியின்
‘On Continence'.


*********************************************************