வியாழன், 7 ஆகஸ்ட், 2014

கருணை மனுவை ஏற்க மறுத்தார்!
தூக்குத் தண்டனை உறுதி!!
------------------------------------------------------ 
ராஜேந்திர வாஸ்னிக் என்று ஒரு கயவன்.31 வயதான 
இவன் திருமணம் ஆனவன்.மராட்டிய மாநிலம் 
அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஏழு ஆண்டுகளுக்கு 
முன்பு, மார்ச் 2, 2007 அன்று, இவன் தனது திரண்ட கயமையை 
ஒரு மூன்று வயதுப் பிஞ்சுப் பெண்  குழந்தையிடம் 
வெளிப்படுத்தினான். அந்த இளம் பிஞ்சைக் கற்பழித்துக் 
கொன்றான்.

பின்னர் பிடிபட்டான். தண்டிக்கப் பட்டான்.உச்ச நீதிமன்றத்தில்,
மேதகு நீதியரசர்கள் ஏ.கே.பட்நாயக், ஸ்வதந்தர் குமார் ஆகிய 
இருவரும் இவனது மரண தண்டனையை உறுதி செய்து 
பெப்ருவரி 29, 2012 அன்று தீர்ப்பளித்தனர்.

இதன் பிறகு, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு 
அனுப்பினான் இக்கயவன்.மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் 
இக்கயவனின் கருணை மனுவை நிராகரித்தார். அவரை வணங்குகிறேன்;போற்றுகிறேன். "செயற்கரிய செய்வார் 
பெரியர்" என்ற வள்ளுவரின் வாக்கு நிலைப்படும் வண்ணம் 
தீர்ப்பளித்த பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு நாடே தலை 
வணங்குகிறது.

கூடிய விரைவில் இக்கயவனைத் தூக்கில் இட வேண்டும்.
அதுவும் பகிரங்கமாகத் தூக்கில் இட வேண்டும். 

மூன்று வயதுக் குழந்தையின் மீது  காமவயப் படுகிறவன் 
பிறழ்ந்த மனநிலை உடையவன். இவன் வாழத் தகுதி 
அற்றவன். இவனை இந்த உலகில் வாழ விடக்கூடாது.
டாக்டர் மு.வ.வின் "கயமை" என்ற நாவலில் இறுதி வரியாக 
"ஒழிந்தான் ஒரு கயவன்" என்பது வரும்; அந்த வரியோடு 
நாவல் முடிவடையும். அதேபோல இந்தக் கயவன் வாஸ்னிக்
ஒழியட்டும்.

**********************************************************************************************8     
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக