புதன், 6 ஆகஸ்ட், 2014

முகநூலில் அவதூறு!
இளைஞர் கைது!!

--------------------------------------------------------------  
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த
ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் பிரதமர் மோடி அவர்களைப் பற்றி
அவதூறாகச் செய்தி வெளியிட்டதால் அவரை கொல்லம்
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
...தகவல் ஆதாரம்:
தினத்தந்தி சென்னை பதிப்பு 06.08.2014 ....

அனேகமாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும்
எவரேனும் ஒருவர் (அல்லது சிலர்), முகநூலில்
அவதூறாக எழுதியமைக்காக கைது செய்யப்
படுகின்றனர். இது நாளும் காணும் காட்சியாகும்.
இவ்வாறு மாட்டிக் கொள்கிறவர்களில் 99.9 சதம் பேர்
காசுவலாக எழுதி காசுவலாக ( CASUALLY)  மாட்டிக்
கொள்கிறவர்கள். மாட்டிக் கொண்டபின் நொறுங்கிப்
போகிறவர்கள். இவர்கள் எந்தவிதமான பற்றுறுதியும்
( CONVICTION ) இல்லாதவர்கள். இவர்கள் குட்டி
முதலாளித்துவ அரைவேக்காடுகள்.

கொள்கை, அரசியல் ஆகியவற்றில் பற்றுறுதி
கொண்டவர்கள் இவ்வாறு மாட்டிக் கொள்வதில்லை.
1) தான் எழுதுவது என்ன?
2) அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
3) அதன் பின்விளைவுகள் என்னென்ன?
என்பதைத் தெளிவாக உணர்ந்து எழுதுகிறவர்கள்
நேர்மையற்ற முறையில் கைது செய்யப் பட்டாலும்
அதை எதிர்கொள்ளும் வழிவகை அறிந்தவர்கள்;
எதிர்கொள்ளும் திறனும் அஞ்சாமையும்
படைத்தவர்கள்.ஏனெனில் அவர்கள் கொள்கையில்
பற்றுறுதி ( CONVICTION ) கொண்டவர்கள்.

இத்தகைய பற்றுறுதி இல்லாதவர்கள் தங்களின்
மனவக்கிரத்தை வெளிப்படுத்தி சிக்கலில்
மாட்டிக் கொள்கிறார்கள்.

முகநூல் என்பது எழுதத் தெரியாத ஒவ்வொருவனையும்
எழுத்தாளன் ஆக்கி விடுகிறது. அதோடு நிற்பதில்லை.
எழுதுகிறவனை  எல்லாம் பதிப்பாளன் ( PUBLISHER )   
ஆக்கி விடுகிறது. முகநூல் நட்பு காரணமாக
அவன் எழுதியதைப் படித்துப் பார்க்க வாசகர்களும்
கிடைத்து விடுகிறார்கள். இதனால் போதையேறிப் போகிற
குட்டி முதலாளித்துவ அரைவேக்காடுகள் மனசில்
தோன்றுவதை எல்லாம் முகநூலில் கொட்டி விடுகின்றனர்,
கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பது போல.
தன்வினை தன்னைச் சுடும் என்பது போல இவர்கள்
மாட்டிக் கொள்வதும் இயல்பான ஒன்றாகி விடுகிறது.

நாம் இதைச் சொல்வதற்குக் காரணம் ஒரு
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டுத் தான்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.

*************************************************************
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக