அண்ணன் தியாகு அவர்களுக்குச் சில கேள்விகள்!
சாதி பொருளாகவும் இருக்கிறது என்ற தங்களின்
கருத்து தவறு என்பதற்கான நிரூபணம்!
-------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
1) மனிதர்களிடையே பிறப்பின்போதே உயர்வு தாழ்வு
இருக்கிறது என்று சொல்கிறதே சாதியம், இது
உண்மையா அல்லது வெறும் கற்பிதமா?
2) சாதி என்பது ஒரு படிநிலை அமைப்பாக (graded system)
உள்ளது. கீழ் சாதியில் இருந்து மேலே செல்லச் செல்ல
ஓர் ஏறுவரிசை உயர்வு உள்ளது. அதே போல, மேல்
சாதியில் இருந்து கீழே வர வர, ஓர் இறங்குவரிசைத்
தாழ்வு இருக்கிறது என்று சொல்கிறதே சாதியம்.
இது உண்மையா அல்லது வெறும் கற்பிதமா?
3) சாதியப் படிநிலையில் மிகவும் தாழ்ந்த நிலையில்
இருக்கும் சாதியினர் அசுத்தமானவர்கள். அவர்களைத்
தீண்டக் கூடாது. மொத்த சமூகமும் அவர்கள் மீது
தீண்டாமை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறதே
சாதியம். இது உண்மையா அல்லது வெறும் கற்பிதமா?
4) சாதியம் என்பது மேற்கூறிய மூன்று உள்ளடக்கக்
கூறுகளைக் கொண்டது. இதுதான் சாதியம். சாதியம்
கூறும் மேற்கூறிய மூன்று கூறுகளும் வக்கிரமான
குரூரமான பொய்மையின் அடிப்படையில்
உருவாக்கப் பட்டவை.
5) மனிதர்களிடையே பிறப்பிலேயே உயர்வு தாழ்வு
இல்லை என்று நிரூபித்துள்ளது அறிவியல். சாதியம்
கூறுகிற படிநிலை அமைப்பான இறங்குவரிசைத்
தாழ்வு என்பது அப்பட்டமான பொய் என்று
அறிவியல் நிரூபித்து உள்ளது. தீண்டாமைக்கு
உள்ளாக்கப்பட்ட மக்கள் அசுத்தமானவர்கள் என்பதில்
அணுவளவும் உண்மை இல்லை என்றும் நிரூபித்து
உள்ளது அறிவியல்.
6) ஆக சாதியம் என்பது தவறான, பொய்யான
கோட்பாடுகள் மீது கட்டப்பட்ட ஒரு கருத்தியல்
கட்டுமானம் என்பதை அறிவியல் நிரூபித்து உள்ளது.
உண்மை இப்படியிருக்க, சாதிக்கு ஒரு பொருளாயத
அடிப்படை இருக்கிறது என்று தாங்கள் கூறுவது
எப்படிச் சரியாகும்?
7) சாதியத்துக்கு எப்போது ஒரு பொருளாயத அடிப்படை
இருக்க முடியும்? சாதி கூறுகிற பிறப்பிலேயே வருகிற
உயர்வு தாழ்வு உண்மையாக இருந்தால் மட்டுமே
சாதிக்கு ஒரு பொருளாயத அடிப்படை இருப்பதாகக்
கூற முடியும். ஆனால் உண்மையில் சாதிக்கு
அப்படி எதுவும் இல்லை. சாதியம் என்பது வெறும்
கற்பிதங்களின் அடிப்படையில் கட்டப்பட்டது.
8) முற்றிலும் கற்பிதங்களின் அடிப்படையில்
கட்டப்பட்ட சாதிக்கு பொருளாயத அடித்தளம்
எப்படி இருக்க முடியும்? சாதி எவ்வாறு ஒரு பொருளாக
இருக்க முடியும்?
9) சாதிக்கு பொருளாயத அடிப்படை இருக்கிறது என்று
சொல்வது, சாதி கூறுகிற பிறவியிலேயே உயர்வு
தாழ்வு உண்டு என்ற பொய்மையை ஏற்றுக் கொள்வதாக
அமையும்.
10) சாதியம் என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம்.
இயற்கைக்கு விரோதமான முற்றிலும் செயற்கையான
கற்பிதங்கள் மீது கட்டப்பட்ட சாதியத்துக்கு எவ்வித
பௌதிக அடிப்படையோ, பொருளாயத அடிப்படையே
கிடையாது. இதைத் தங்களால் மறுக்க முடியுமா?
பதில் கூறுங்கள் மதிப்புக்குரிய அண்ணன் தியாகு
அவர்களே.
*********************************************************************.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக