ஞாயிறு, 9 மே, 2021

 கொரோனாவில் இருந்து தற்காத்துக் 

கொள்வது எப்படி?

சில எளிய வழிமுறைகள்!

------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம்

------------------------------------------------ 

1) தினமும் ஆவி பிடிக்கவும்! (steam inhaling) 

அது சுவாசப் பாதையைச் சீர் செய்யும்!


2) தினமும் குறைந்தது இரண்டு வேளை 

மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்த  

பாலை அருந்துக. சுகர் உள்ளவர்கள் 

நீர்த்த பாலில் மஞ்சள் தூள் சேர்த்து 

அருந்தலாம். இங்கு பால் அல்ல, மஞ்சளே  

முக்கியம்.


3) தினமும் வெயிலில் உடம்பு படும்படியாக 

அரை மணி நேரம் நிற்கவும். இது முக்கியம்.


4) இரண்டு தவணை தடுப்பூசிகளைப் 

போட்டுக்கொள்ளவும். தடுப்பூசி போடாமல் 

இருப்பது தற்கொலை செய்து கொள்வதற்குச் 

சமம்.


5) டெட்டால் சோப்புப் போட்டு தினமும் 

நன்றாகக் கை கழுவுக! தினசரி 10 முறை 

கழுவுதல் நல்லது.


6) முகக் கவசத்தைப் பெயருக்கு அணிவது 

கூடாது. ஏனோதானோ என்று அணியாமல் 

அக்கறையுடன் அணியவும்.

மருத்துவ முகமூடி(surgical mask),

துணி முகமூடி (cloth mask) ஆகிய 

இரண்டையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

துணி முகமூடிகளை நன்கு துவைத்து 

அணிந்து கொள்ளுவோர், அதிக காலத்திற்கு

ஒன்றையே அணிவதைத் தவிர்க்கவும்.

மூக்கு, வாய் இரண்டையும் நன்கு இறுக்கி 

மூடும் விதத்தில் முகமூடியை அணியவும்.    


7) உடலின் நோய்த்தடுப்புச் சக்தியை 

அதிகரிப்பதை நோக்கியே உங்களின்  

உணவு உட்கொள்ளுதல் இருக்க வேண்டும்.


8) மட்டன், மீன், சிக்கன், மாட்டுக்கறி 

ஆகியவை நல்ல புரதம் ஆகும். ஆனால் 

இறைச்சிக் கடையில் மணிக்கணக்கில் 

காத்துக் கிடந்து மட்டனோடு சேர்த்து 

கொரோனா வைரசையும் வாங்கிக் 

கொண்டு வீட்டுக்குப் போவது 

முட்டாள்தனம்.  


9) மீன் கடையிலும், இறைச்சிக் கடையிலும் 

தினமும் 5 நிமிட நேரம் நின்றாலே போதும்!

உங்களை கொரோனா வைரஸ் தொற்றிக் 

கொள்ளும் வாய்ப்பு (probability) மிக அதிகம்;

say 60%. 


இறைச்சிக் கடைகளில் கியூவில் 

நிற்பவர்கள் சமூக இடைவெளியைக் 

கடைப்பிடிக்க மாட்டார்கள்.மூன்று அடி 

இடைவெளியை இறைச்சிக் கடைகளில்

கடைப்பிடிக்க இயலாது. 

இதுவே உண்மை நிலை.      


10) எனவே இறைச்சி உண்பதைக் கைவிட்டு 

காய்கறிகளை (vegetables) வாங்கி உண்ணவும்.

இது பாதுகாப்பானது. கொரோனா வந்தாலும் 

கவலையில்லை; இறைச்சிதான் உண்பேன் என்று 

பிடிவாதம் பிடிப்பவர்கள், வாங்கிய இறைச்சியை 

நன்கு சுத்தம் செய்து, குக்கரில் வைத்து 

முழுமையாக வேகவைத்து உண்ணவும்.

முக்கால் வேக்காடு, முக்காலே அரைக்கால் 

வேக்காடு ஆகியவற்றைத் தவிர்க்கவும். 


11) இது வெயில் நேரம். எனவே தினமும் இரண்டு 

முறை குளிக்கவும். திருநெல்வேலிக்காரனுக்கு 

இதை நான் சொல்ல வேண்டியதில்லை. யாரும் 

சொல்லாமலே அவன் தினமும் குறைந்தது 

இரண்டு முறை குளிப்பான். இரண்டு முறை 

குளிக்க வேண்டும் என்ற கட்டளை அவனது 

DNAவில் உள்ளது.


12) அந்தரங்க சுத்தம், அந்தரங்க உறுப்புகளின் 

சுத்தம், மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும் 

இடத்தின் சுத்தம், படுக்கையின் சுத்தம், 

உள்ளாடைகளின் சுத்தம் ஆகிய அனைத்தையும் 

பேணவும். படுக்கை விரிப்பை, தலையணை 

உறைகளை  அடிக்கடி மாற்றவும்; துவைக்கவும்.


13) கணவன் மனைவி உடலுறவு கொள்வதில் 

தடையில்லை. ஆனால் உறவுக்கு முன் இருவரும் 

நன்கு பல் துலக்கி, நன்கு குளித்து விடவும். 

உடலுறவின் FREQUENCY: Per day frequency, 

per week frequency, per month frequency

ஆகியவற்றை இயன்ற அளவு குறைவாக

வைத்துக் கொள்வது நல்லது. 

A very low frequency is safe.


14) கொரோனாவை மனித குலம் எதிர்த்துப் 

போராடி முறியடிக்கும். எனவே நம்பிக்கை

கொள்க. எச்சரிக்கையாக இருங்கள். அதே 

நேரத்தில் நம்பிக்கையோடு இருங்கள்.

மனிதனால் அனைத்தையும் வெல்ல 

முடியும் என்கிறார் கம்பர்! கல்வியில் 

பெரியவரான கம்பர்!


வேறுள குழுவை எல்லாம் 

மானுடம் வென்றதம்மா!

.....கம்பன்   

---------------------------------------------------

பின்குறிப்பு:

இக்கட்டுரையாளர் மருத்துவரோ தொற்றுநோய் 

நிபுணரோ (pathologist) அல்லர். எனினும் மக்களால் 

அங்கீகரிக்கப்பட்ட சிறந்த அறிவியல் பரப்புநர் 

(science communicator). உலக சுகாதாரக் கழகம் 

(WHO), இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை 

ஆகிய அமைப்புகளிடம் இருந்து கொரோனா (COVID 19)

பற்றிய அறிவுறுத்தல்களை நேரடியாகப் பெற்று 

மக்களுக்கு எடுத்துச் சொல்பவர்.


Print media, Visual electronic media, Social media ஆகிய 

ஊடகங்களிலும், பொதுவெளியிலும் கொரோனா 

குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். 

டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு 

நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் 

அமைப்பினை நிறுவி  கடந்த 20 ஆண்டுகளாக 

அறிவியலைப் பரப்பி வருபவர்.

*********************************************************      . 

        

 


கடைப்பிடிப்பதில்லை என்பதைப் பார்க்கிறோம்.

நிகழும் ஏற்படும் கூட்ட நெரிசலில்  

துவைத்த துணிகளை நல்ல வெயிலில் 

உலர்த்துங்கள். மொட்டை மாடிக்குச் 

சென்று வெயிலில் காயப்போடுங்கள். கொளுத்தும் 



கபசுரக் குடிநீரை தேவையை ஒட்டி அளவோடு 

அருந்தலாம். ஓரளவு குறைந்த விலையில் 

கிடைக்கும் ராஜம் சுக்கு காப்பியை அருந்தலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக