வெள்ளி, 7 மே, 2021

 காற்றில் கரைந்த கற்பூரமாக மார்க்சிஸ்ட் கட்சி!

மகிஷாஷுர மர்த்தினியாக மமதா பானர்ஜி!

2021 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் புகுப்பாய்வு!

---------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------

ஐகிரி நந்தினி நந்தித மேதினி

விஷ்வ வினோதினி நந்தனுதே 

கிரிவர விந்திய ஷிரோதினி வாஸினி 

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுனுதே.  


மேற்கு வங்கத்தில் 2011 சட்ட மன்றத் தேர்தலில் 

மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைகிறது. மார்க்சிஸ்ட் 

முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆட்சியை 

இழக்கிறார். முதல் முறையாக மமதா பானர்ஜி 

2011 மே மாதத்தில் ஆட்சியைப் பிடிக்கிறார்.


மேற்கு வங்க சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 

294 இடங்களில் மமதாவின் திரிணமூல் கட்சி

184 இடங்களைப் பிடிக்கிறது. திரணமூல் கட்சியும்

காங்கிரசும் ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்து 

தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ் 42 இடங்களைப் 

பிடித்தது. திரிணமூல்+காங்கிரஸ் கூட்டணி 

226 இடங்களில் வென்றது/    


அப்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது 

முன்னணி பெற்றிருந்த இடங்கள் வருமாறு:-

மார்க்சிஸ்ட் CPM  = 40

கம்யூனிஸ்ட் CPI = 02

பார்வர்டு பிளாக் = 11

புரட்சி சோஷலிஸ்ட் RSP = 07

ஆக மொத்தம் இடது கட்சிகள் = 60.


சுருங்கக் கூறின்,

2011 சட்டமன்றத் தேர்தல், மேற்கு வங்கம்:

மொத்த இடங்கள் = 294

திரணமூல்+காங்கிரஸ் கூட்டணி = 226 (184+42)

இடது முன்னணி = 60.


இந்த 2011 தேர்தலில் பாஜக பிச்சரிலேயே 

இல்லை (Not in the picture) என்பது நம் கவனத்துக்கு 

உரியது. 2011 தேர்தலில் பாஜக போட்டி இட்டதா?

ஆம். 189 இடங்களில் போட்டி இட்டது. ஆனால் ஒரு 

இடம் கூட பாஜகவுக்கு கிடைக்கவில்லை..

***********

ஐந்தாண்டுகள் உருண்டோடின. 2016 தேர்தலும் 

வந்தது. திரிணமூல் கட்சியே மீண்டும் வெற்றி 

பெற்றது. இரண்டாவது முறையாக மமதா 

பானர்ஜி முதல்வர் ஆனார்.    

 

2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது கூட்டணியை 

மாற்றிக் கொண்டது. 2011 தேர்தலில் திரிணமுல்

காட்ச்சியுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 

இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டுச் 

சேர்ந்தது.


மொத்தமுள்ள 294 இடங்களில், மார்க்சிஸ்ட் கட்சி

148 இடங்களிலும், காங்கிரஸ் 92 இடங்களிலும், 

மீதியில் சிறிய இடதுசாரிக் கட்சிகளும் 

போட்டி இட்டன. இவ்வாறு மார்க்சிஸ்ட்+காங்கிரஸ் 

கூட்டணி 294 இடங்களிலும் போட்டி இட்டது.


திரிணமூல் கட்சி 293 இடங்களில் தனித்துப் 

போட்டி இட்டது.  


பாரதிய ஜனதா கட்சி 291 இடங்களில் போட்டி 

இட்டது.  


தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.

திரிணமூல் கட்சி = 211.

மார்க்சிஸ்ட்+காங்கிரஸ் கூட்டணி = 76.

(காங்கிரஸ் = 44: மார்க்சிஸ்ட் = 26; பிற = 6).

பாஜக = 3.


திரிணமூல் கட்சியின் வாக்கு சதவீதம் = 44.91

மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் = 19.75

காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் =  12.25.

பாஜகவின் வாக்கு சதவீதம் = 10.16.


இந்த இடத்தில் இந்தியத் தேர்தல் முறையின் 

தனிச்சிறப்பு மிக்க ஒரு அம்சத்தைப் பார்ப்போம்.

வெற்றிக் கம்பத்தை யார் முதலில் தொடுவது 

என்னும் முறையே இந்தியத் தேர்தல் முறையாகும்.

ஆங்கிலத்தில் இது FIRST PAST THE POST எனப்படும்.


10.16 சதவீதம் வாக்குகளைப் பெற்ற பாஜக மூன்று 

இடங்களை மட்டுமே பெறுகிறது. பாஜகவை விட 

2.09 சதவீதமே கூடுதலான வாக்குகளைப் பெற்ற 

அதாவது 12.25 சதவீத வாக்குகளைப் பெற்ற

காங்கிரஸ் 44 இடங்களைப் பெறுகிறது.   

  

ஆக, 2016 மே மாதத்தில் மேற்கு வங்க சட்ட 

மன்றத்துக்குள் முதன் முறையாக மூன்று 

உறுப்பினர்களுடன் பாஜக நுழைகிறது. 

*************

சரி, இனி அண்மையில் நடந்து முடிந்த 2021

(முடிவு அறிவிப்பு: மே 2, 2021) சட்ட மன்றத் 

தேர்தலையும் முடிவுகளையும் பார்ப்போம்.


இடையில் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் 

முடிவுகளை மனத்தில் கொள்ளுவோம்.

2019ல் கட்சிகள் பெற்ற இடங்கள் வருமாறு:-


மொத்த இடங்கள் -42

திரிணமூல் கட்சி = 22

பாஜக =18 

காங்கிரஸ் = 2

மார்க்சிஸ்ட் = 0. 


2021 சட்ட மன்றத் தேர்தலின்போது இரண்டு 

வேட்பாளர்கள் இறந்து விட்டதால், 

மேற்கு வங்கத்தில் 292 இடங்களுக்கு 

மட்டுமே தேர்தல் நடைபெற்றது.


இத்தேர்தலிலும் முன்பு போலவே காங்கிரசும் 

மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் 

கட்சிகளும் ஒரே கூட்டணியாக இருந்து 

தேர்தலைச் சந்தித்தன. 


திரிணமூல் கட்சி தனித்துப் போட்டி இட்டது. 

அது போலவே பாஜகவும் தனித்துப் போட்டி இட்டது. 

(எல்லாத் தரப்பிலும் கூட்டணியில் இடம் பெற்ற 

துண்டு துக்காணிக் கட்சிகளை நான் இங்கு 

கணக்கில் சேர்க்கவில்லை).

 

2021 தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

------------------------------------------------------------

கட்சி, வெற்றி, போட்டியிட்டது, வாக்கு சதம். 

திரிணமூல் = 213 (290ல் போட்டி), வாக்கு 47.94%

பாஜக = 77 (293); வாக்கு 38.13%

மார்க்சிஸ்ட் = 0 (137); வாக்கு 4.73%

காங்கிரஸ் = 0 (91); வாக்கு 2.94%


காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பிற இடதுசாரிக் 

கட்சிகள் அனைத்தும் பெற்ற இடங்கள் பூஜ்யம்.

காங்கிரஸ் = பூஜ்யம் 

மார்க்சிஸ்ட் = பூஜ்யம் 

கம்யூனிஸ்ட் CPI = பூஜ்யம்.

பார்வர்டு பிளாக் = பூஜ்யம் 

புரட்சி சோஷலிஸ்ட் = பூஜ்யம்.


1977 ஜூனில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி

தொடங்கியது ஜோதிபாசு முதல்வராக இருந்தார்.

1977 ஜூன் முதல் 2000 நவம்பர் வரை ஜோதிபாசுவே 

முதல்வர். அடுத்து புத்ததேவ் பட்டாச்சார்யா 

நவம்பர் 2000 முதல் மே 2011 வரை முதல்வராக 

இருந்தார். ஜோதிபாசுவும் புத்ததேவும் சேர்ந்து 

35 ஆண்டுகள் NON STOPஆக மேற்கு வங்கத்தை 

ஆண்டனர்.


இவ்வளவு பாரம்பரியம் மிக்க மார்க்சிஸ்ட் கட்சி,

35 ஆண்டுகள் NON STOPஆக ஆண்ட மார்க்சிஸ்ட் 

கட்சி, இன்று காற்றில் கரைந்த கற்பூரமாக 

ஆகிப்போனது. இது ஏன்? என்ன காரணம்?

சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?


காங்கிரஸைப் பொறுத்தமட்டில், மேற்கு வங்க

மக்களால் கடவுளாக மதிக்கப்பட்ட பி சி ராய் 

(B C Roy), பி சி சென் (P C Sen), அஜய் முகர்ஜி,

Notorious சித்தார்த்த சங்கர் ரே என்று கொடி கட்டி 

ஆண்ட கட்சி.இன்று பூஜ்யத்தில் நிற்கிறது.


2016ல் 44 இடங்களை வென்ற காங்கிரஸ் 

2021ல் பூஜ்யம் ஆனது. மகிஷாஷுர மர்த்தினி

மமதா காங்கிரசைக் கொன்று விட்டார் 


2016ல் 26 இடங்களில் வென்ற மார்க்சிஸ்ட் கட்சி

2021ல் பூஜ்யம் ஆனது, முன்னதாக 2019 

நாடாளுமன்றத் தேர்தலிலும் பூஜ்யம் ஆனது.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் பெறுவது பூஜ்யம்.

காரணம் மகிஷாஷுர மர்த்தினி மம்தா

மார்க்சிஸ்ட் கட்சியை அடித்துக் கொன்று விட்டார்.     

மமதாவால் கொலை செய்யப்பட்டு இறந்து போன 

மார்க்சிஸ்ட் கட்சியை பாஜக குழி தோண்டிப் 

புதைத்து விட்டது. 


காங்கிரஸ் ஒரு பூர்ஷ்வாக் கட்சி. எனவே அது 

அழிவதிலோ, புழுத்துச் சாவதிலோ ஆச்சரியத்துக்கு 

இடமில்லை. ஆனால் வெல்லற்கரிய தத்துவமான 

மார்க்சியத்தால் வழிகாட்டப் பெற்ற மார்க்சிஸ்ட் 

கட்சி இப்படி INFINITYயில் இருந்து ZEROவுக்கு 

வந்து சேர்ந்திருப்பது.வியப்புக்கு உரியதுதான்.

A POINT OF NO RETURN என்ற இடத்துக்கு 

மார்க்சிஸ்ட் கட்சி வந்து சேர்ந்து விட்டது.

இது எப்படி நிகழ்ந்தது? 


இது குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

***************************************************************


       

    

 

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக