திங்கள், 24 மே, 2021

 இந்தியாவில் கொரோனா மரணங்கள்!

மாநிலவாரியான அட்டவணை!  

தமிழ்நாட்டில் கொரோனா மரணம் அதிகம் ஏன்?

-----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

------------------------------------------------------

இந்தியா முழுவதும் நிகழ்ந்த மரணம் = 2,99,266.

(மே 22, 2021 முடிவில்).


இனி 28 மாநிலங்களில் குறிப்பிடத்தக்க 

எண்ணிக்கையில் மரணம் நிகழ்ந்த 

மாநிலங்களைப் பார்ப்போம்.

Negligible death toll உள்ள மாநிலங்களைத் 

தனியாகப் பார்ப்போம். 


கொரோனா மரணங்கள் (மே 22, 2021 முடிவில்).

--------------------------------------------------------------------- 

1) மகாராஷ்டிரா = 87,300

2) கர்நாடகம் = 24,658

3) டெல்லி = 23,013 

4) தமிழ்நாடு = 20,046

5) உத்திரப் பிரதேசம் = 18,978

6) மேற்கு வங்கம் = 14,208

7) பஞ்சாப் = 13,089

8) சட்டிஸ்கர் = 12,494

9) ஆந்திரா = 10,022   


இந்தியாவின் மொத்த மாநிலங்கள் = 28.

இந்த 28ல் 9 மாநிலங்களில் மட்டுமே 

நான்கு இலக்க எண்ணிக்கையில் 

கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.


இந்திய மாநிலங்களில் மிகக் குறைவான 

கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள மாநிலம் 

மிசோரம் ஆகும். மரணம் = 31 மட்டுமே.


கொரோனா மரணத்தில் முதலிடம் பெறுவது 

மகாராஷ்டிரா மாநிலம். மரணம் = 87,300.


மேற்கு வங்கம் தமிழ்நாட்டை விட மக்கள்தொகை 

அதிகமான மாநிலம். என்றாலும் தமிழ்நாட்டை 

விட கொரோனா மரணங்கள் இங்கு குறைவு.  

தமிழ்நாட்டில் 20046; மேற்கு வங்கத்தில் 14,208.

தமிழ்நாட்டை விட 6000 மரணம் மே வங்கத்தில் குறைவு.


இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலம் உத்திரப் 

பிரதேசம். இங்கு மக்கள்தொகை = 20 கோடி.

(2011 மார்ச் சென்சஸ்படி 19,95,81,477).

ஆனால் இங்கு கொரோனா மரணம் குறைவு.

மரணம் = 18978 மட்டுமே.


தமிழ்நாட்டின் மக்கள்தொகை = 7.21கோடி.

(2011 சென்சஸ்படி, 7,21,47,030). உத்திரப் 

பிரதேசத்தின் மக்கள்தொகை தமிழ்நாட்டை 

விட சற்றேறக் குறைய மூன்று மடங்கு அதிகம்.

அப்படியானால் கொரோனா மரணங்களும்

மூன்று மடங்கு இருக்கும் என்று நினைத்தால் 

அது தப்பு. தமிழ்நாட்டை விட உபியில் 

மரணங்கள் குறைவு. தமிழ்நாடு = 20,046.

உபி = 18,978.      


கேரளத்தில் கொரோனா மரணம் = 7170.

கேரளத்தின் மக்கள்தொகை = 3.34 கோடி.

மக்கள்தொகையில் இந்தியாவின் 13ஆவது 

பெரிய மாநிலம் கேரளம் (13th largest state)  


பீகார் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் 

ஒன்று. இதன் மக்கள்தொகை = 10.4 கோடி.

மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது

பெரிய மாநிலம் இது. ஆனால் இங்கு 

கொரோனா மரணம் மிகவும் குறைவு.

நம்ப முடியாத அளவு குறைவு. எவ்வளவு 

தெரியுமா? 4442 மரணங்கள்தான்.  


10 கோடி மக்கள்தொகை உள்ள பீகாரில் 

மரணம் 4442 மட்டுமே. ஆனால் 3 கோடி 

மக்கள்தொகை உள்ள கேரளத்தில் 

மரணம் 7170.ஆகும்.பீகாரை விட 

2600 மரணங்கள் கேரளத்தில் அதிகம். 


இக்கட்டுரையில் உள்ள அனைத்து 

மக்கள்தொகை விவரங்களும் 2011 

சென்சஸ்படி உள்ளவை)

  

மத்தியப் பிரதேசம்: 

மக்கள் தொகை = 7.26 கோடி (7,26,26,809)

கொரோனா மரணம் = 7483.


ராஜஸ்தான் மக்கள்தொகை = 6.85 கோடி 

கொரோனா மரணம் = 7590. 


மேலும் குஜராத்தில் 9523 மரணங்களும், 

அரியானாவில் 7415 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.


இந்தி பெல்ட் எனப்படும் உபி, மபி, பீகார்,

ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களிலும் 

சேர்த்து மொத்த மக்கள்தொகை = 44.46 கோடி.

நான்கு மாநிலங்களிலும் 

மொத்த கொரோனா மரணம் = 38493.  


தமிழ்நாடு (புதுச்சேரி உட்பட) 

கொரோனா மரணம் = 21,371.

ஆந்திராவில் மரணம் = 10,022

கேரளத்தில் மரணம் = 7170

கர்நாடகம், தெலுங்கானா ஆகிய  மாநிலங்களைக்  

கணக்கில் கொள்ளாமலேயே, 

பின்வரும் மூன்று மாநிலங்களில் நிகழ்ந்த 

மரணங்கள் (தநா+ஆந்திரா+கேரளம்) = 38,563.


இது உபி, பீகார், மபி ராஜஸ்தானை விட அதிகம். 

மேற்கூறிய மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 

மக்கள்தொகை = 15.50 கோடி.


44.5 கோடி மக்கள்தொகை உள்ள நான்கு 

இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில் 

கொரோனா மரணம் = 38,493.


15.5 கோடி மக்கள்தொகை உள்ள மூன்று 

தென்னிந்திய மாநிலங்களில் 

கொரோனா மரணம் = 38,563.


வட இந்தியர்கள் பின்தங்கியவர்கள்,

பிற்போக்குச் சிந்தனை உடையவர்கள் 

என்றெல்லாம் வாய்நீலாம் காட்டுகிறோம்.

ஆனால் அங்கு, மக்கள்தொகை அதிகம்;

கொரோனா மரணம் குறைவு.


மிகவும் முற்போக்கான தமிழ்நாடு கேரளம் 

உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் 

மக்கள்தொகை குறைவு. ஆனால் 

கொரோனா மரணம் அதிகம்!


இதற்கு என்ன காரணம்?

வட இந்தியர்களும், இந்தி பேசுவோரும் 

கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக் 

கொள்வதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

அங்கு தடுப்பொசிகளை எதிர்த்து எந்த 

விதமான பிற்போக்குப் பிரச்சாரமும் 

நடைபெறுவதில்லை.


ஆனால் தமிழ்நாட்டில் அப்படி அல்ல.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 

தடுப்பூசியை எதிர்க்கும் கடைந்தெடுத்த 

பிற்போக்குப் பிரச்சாரம் நடைபெறுகிறது.


போலி முற்போக்கு, போலிக் கம்யூனிஸ்டு,

போலி நக்சல்பாரி, போலி இடதுசாரி என்று 

சகல தரப்பினராலும் வெறித்தனமாக 

தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் தமிழ்நாட்டில் 

செய்யப் படுகிறது. அதன் காரணமாகவே 

இங்கு கொரோனா மரணம் அதிகம் நிகழ்கிறது.    


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 

கடைந்தெடுத்த பிற்போக்குப் பிண்டங்கள் 

முற்போக்கு வேடம் தரித்துக் கொண்டு 

சமூக விரோதச் செயல்களைச் செய்கின்றன.

தமிழ்நாட்டில் அதிகரித்து விட்ட கொரோனா 

மரணங்களுக்கு தடுப்பூசியை எதிர்க்கும் 

பிற்போக்குப் பிண்டங்களே பொறுப்பு.  

*********************************************************  



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக