திங்கள், 31 மே, 2021

 ஹோமியோபதியும் மார்க்சியமும்!

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

---------------------------------------------

ஹோமியோபதி இந்த மண்ணின் மருத்துவம் அல்ல.

அது ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி 

செய்யப் பட்டது. சாமுவேல் ஹானிமன் 

(Samuel Hahnemann 1755-1843) என்னும் ஜெர்மானிய 

மருத்துவர் ஹோமியோபதியை உருவாக்கினார்.


நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

ஹோமியோபதியைப் பொறுத்த மட்டில் 

இதுதான்! அதாவது, மருந்து என்பது நோயை 

ஒத்தது (Let likes be cured by likes).  


ஹோமியோபதியில் இருந்து வேறுபட்ட ஒரு 

தத்துவத்தை நோயைக் குணப்படுத்தும் தத்துவமாகக் 

கொண்டவை இந்தியாவின் ஆயுர்வேதம், 

சித்த மருத்துவம், அல்லோபதி என்னும் ஆங்கில 

மருத்துவம் ஆகிய மூன்றும்.


இவற்றின் நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

இதுதான்! அதாவது மருந்து என்பது நோய்க்கு 

எதிரிடையானது என்பதுதான் (Let likes be cured 

by dislikes)     


ஓரிடத்தில் நெருப்பு எரிகிறது. கொழுந்து விட்டு 

எரிகிறது. இதை அணைக்க வேண்டும்.

ஹோமியோபதி என்ன சொல்கிறது? நெருப்பை 

நெருப்பே அணைக்கும் என்கிறது ஹோமியோபதி.


அல்லோபதியும் ஆயுர்வேதமும் என்ன 

சொல்கின்றன? நெருப்பைத் தண்ணீர்தான்  

அணைக்கும் என்கின்றன. நெருப்பை நெருப்பே 

அணைக்கும் என்பது மூடத்தனம் என்று 

அவை கூறுகின்றன.


சித்த மருத்துவமும் இதைத்தான் சொல்கிறது.

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகிய

இரண்டும் ஒன்றுதான். ஒரே மருத்துவமானது 

வட இந்தியாவில் ஆயுர்வேதம் என்றும் 

தென்னிந்தியாவில் சித்த மருத்துவம் என்றும் 

பெயர் பெற்றுள்ளன. தற்காலத்தில் இவை 

இரண்டும் கூட்டாக இந்திய மருத்துவம் 

(Indian Medicine) என்று பெயர் பெற்றுள்ளன.   


மேற்கூறிய ஓர் எளிய அறிமுகத்துடன் 

இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு வருவோம்.

இக்கட்டுரை பல்வேறு மருத்துவ முறைகளை 

ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு எது சிறந்தது என்று 

முடிவு செய்யும் கட்டுரை அல்ல. 


மார்க்சியம் ஹோமியோபதியை எப்படிப் பார்க்கிறது 

என்பது மட்டுமே இக்கட்டுரையின் கருப்பொருள் 

ஆகும். மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்கும் 

உள்ள தொடர்பு என்ன, கம்யூனிச நாடுகள் என்று 

அறியப்பட்ட சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா),

சீனா போன்ற நாடுகளில் ஹோமியோபதிக்கு இருந்த 

இடம் என்ன, ஸ்டாலின், மாவோ போன்ற 

மார்க்சிய மூல ஆசான்களின் ஹோமியோபதி 

குறித்த நிலைப்பாடு என்ன ஆகியவற்றைக் கூறுவது 

மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.     


சாமுவேல் ஹானிமன், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய 

மூவருமே கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள்; 19ஆம் 

நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ் எங்கல்சை 

விட ஹானிமன் 60 ஆண்டுகள் மூத்தவர். மார்க்ஸ் 

காலத்தில் ஹோமியோபதி மருத்துவம் 

செயல்பாட்டுக்கு வந்திருந்தது. மார்க்சும் 

ஏங்கல்சும் ஹோமியோபதி மருத்துவம் 

பற்றி நன்கு அறிந்து இருந்தனர். என்றாலும்

அவர்கள் ஹோமியோபதியை ஏற்கவோ 

ஆதரிக்கவோ இல்லை. கறாராகச்

சொல்வதானால், மார்க்சும் எங்கல்சும்

ஹோமியோபதியைப் பொருட்படுத்தவே இல்லை.


தங்கள் காலத்தில் நடைபெற்ற எந்த ஓவர் சிறிய 

அறிவியல் வளர்ச்சியையும் விட்டு விடாமல் 

அவற்றை நன்கு காற்றும் அறிந்தும் மக்களுக்கு 

எடுத்துச் சொல்லும் பழக்கம் உடைய மார்க்சும்

எங்கல்சும் ஹோமியோபதியைப் பொருட்படுத்த

வில்லை. அதை அவர்கள் அறிவியல் என்று  ஏற்றுக் 

கொள்ளவில்லை.     


1917ல் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டது; போல்ஷ்விக்குகள் 

அரசு அதிகாரத்தைக் கைப்பற்றினர். 

(போல்ஷ்விக்குகள் = ரஷ்யக் கம்யூனிஸ்டுகள்).

லெனின் ரஷ்ய அதிபர் ஆகிறார். 1922ல் சோவியத் 

ஒன்றியம் (Soviet Union) உருவாகிறது. 1924ல் 

லெனினின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின்

ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். 1924 முதல் 1954 

வரை முப்பதாண்டுகள் ஸ்டாலின் ரஷ்யாவை ஆண்டார்.


ஸ்டாலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் 

ஹோமியோபதி தடை செய்யப் படுகிறது.

இது அதிபர் ஸ்டாலினின் தனிப்பட்ட 

முடிவு அல்ல. இது CPSUவின் முடிவு. 

(CPSU = Communist Party of Soviet Union)         


சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் 

கட்சியானது சோவியத் நாட்டின் அறிஞர்கள், 

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் 

நன்கு விவாதித்து இறுதியில் ஹோமியோபதி 

ஒரு போலி அறிவியல் (Homeopathy is a pseudoscience)

என்ற முடிவுக்கு வந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் 

கட்சியின் இந்த முடிவை ஏற்று அதிபர் ஸ்டாலின் 

சோவியத் ஒன்றியத்தில் ஹோமியோபதியைத் 

தடை செய்தார். ஹோமியோபதி மருத்துவ 

மனைகள் அல்லோப்பதி மருத்துவ மனைகளாக 

மாற்றப் பட்டன. ஹோமியோபதியை ஆதரித்து 

ஸ்டாலினின் அரசை எதிர்த்த பலர் சிறைக்கு 

அனுப்பப் பட்டனர்.        



  

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக