இந்தியாவின் ஆகப் பிற்போக்கான மாநிலம்
தமிழ்நாடு என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
கொரோனா தடுப்பூசி கட்டம் கட்டமாக இந்தியாவில்
போடப் பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின்
(covishield, covaxin) என்னும் இரண்டு வகையான
தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படுகின்றன.
முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களான
மருத்துவர்கள், நர்சுகள், காவல்துறையினர்
முதலியோருக்குப் போடப்பட்டது. இவர்களின்
எண்ணிக்கை மூன்று கோடி என்று மதிப்பிடப்
பட்டது. இந்த மூன்று கோடிப்பேருக்கு தடுப்பூசி
செலுத்தும் திட்டம் ஜனவரி 16, 2021 அன்று
தொடங்கி மார்ச்சில் முடிவுற்றது.
அடுத்து அ) 60 வயதினர் மற்றும் ஆ) 45 வயது
நிரம்பியோரில் இரண்டு நோய்களை உடையவர்கள்
ஆகியோருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம்
தொடங்கியது. மே முதல் தேதி தொடங்கி
தற்போது வரை 18 வயது நிரம்பிய அனைவருக்கும்
தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.
மே மாத இறுதியில் ரஷ்யாவில் இருந்து
தருவிக்கப்படும் ஸ்புட்னிக் வி (Sputnik V) என்னும்
மூன்றாவது தடுப்பூசி விரைவில் செலுத்தப்பட உள்ளது.
சில அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களைப்
பார்ப்போம். தற்போது மே 2021ல் தடுப்பூசி
செலுத்துதலின் மூன்றாவது கட்டம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. மே 15, 2021 காலை 7 மணி
நிலவரப்படி உள்ள தரவுகளைப் பார்ப்போம்.
இந்தியாவில் இதுவரை இரண்டு தவணைகளும்
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை
18 கோடியைத் தாண்டி விட்டது (18,04,57,579).
முதல் தவணை செலுத்திக் கொண்டோர் = 14 கோடி
இரண்டாம் தவணை செலுத்தியோர் = 4 கோடி.
பொதுமக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது
மார்ச் 1 முதல். இன்று மே 15, 2021 வரை இரண்டரை
மாதங்கள்தான் ஆகி உள்ளது. இந்த இரண்டரை
மாதங்களில் 18 கோடிப்பேருக்கு தடுப்பூசி போடப்
பட்டிருப்பது உலகில் வேறெந்த நாட்டிலும்
இல்லாத ஒன்றாகும்.
இந்தியாவில் போடப்பட்ட 18 கோடி தடுப்பூசிகளில்
மூன்றில் இரண்டு பங்கு (67 சதவீதம்) தடுப்பூசிகள்
10 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன. அந்த
10 மாநிலங்களும் பின்வருமாறு:-
1) மகாராஷ்டிரா 1 கோடியே 95 லட்சம் தடுப்பூசிகள்
2) ராஜஸ்தான் 1 கோடியே 49 லட்சம்
3) குஜராத் 1 கோடியே 48 லட்சம்
4) உத்திரப் பிரதேசம் 1 கோடியே 46 லட்சம்
5) மேற்கு வங்கம் 1 கோடியே 25 லட்சம்
6) கர்நாடகம் 1 கோடியே 11 லட்சம்
7) மத்தியப் பிரதேசம் 89 லட்சம்
8) பீகார் 85 லட்சம்
9) கேரளம் 82 லட்சம்
10) ஆந்திரா 74 லட்சம்.
முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு இல்லை.
படித்தவர்கள் நிரம்பிய, முற்போக்காளர்கள்
நிரம்பிய தமிழ்நாடு ஏன் முதல் பத்து
இடங்களுக்குள் வரவில்லை?
நியாயமாக தமிழ்நாடு அல்லவா தடுப்பூசி
போடுவதில் முதல் இடத்தில் இருந்திருக்க
வேண்டும்? ஆனால் இல்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக