திங்கள், 3 மே, 2021

 பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்கும் அதிமுக!

பல்லக்குத் தூக்குவதில் முன்னோடி யார்?

---------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி

--------------------------------------------------------  

அன்று 2001 சட்டமன்றத் தேர்தலில் 

திமுகவுடன் பாஜக கூட்டணி கண்டது!

4 இடங்களில் பாஜக வெற்றி!


1) காரைக்குடி:: ஹெச் ராஜா 

2) மயிலாடுதுறை: ஜெகவீர பாண்டியன் 

3) மயிலாப்பூர்: கே என் லட்சுமணன் 

4) தளி: கே வி முரளிதரன் 

ஆகிய நான்கு பேரை தமிழக சட்டமன்றத்துக்கு 

அழைத்துச் சென்றார் கலைஞர்.


தற்போது, 20 ஆண்டு கழித்து, 2021ல் 

அதிமுக நான்கு பேரை சட்டமன்றத்துக்கு 

அழைத்துச் செல்கிறது. அதிமுகவுடன்  

பாஜக கூட்டணி! பாஜக 4 இடங்களில் வெற்றி!


1) திருநெல்வேலி: நயினார் நாகேந்திரன் 

2) நாகர்கோவில்: எம் ஆர் காந்தி 

3) மொடக்குறிச்சி: டாக்டர் சி கே சரஸ்வதி 

4) கோவை தெற்கு: வானதி சீனிவாசன்.


திமுகவும் அதிமுகவும் சரி சமம்! இரண்டு 

கட்சிகளுமே பாஜகவுக்கு சேவகம் செய்த  

கட்சிகள்தான்! அன்று வாஜ்பாய்க்கு காவடி 

எடுத்தார் கலைஞர். இன்று மோடிக்கு காவடி 

எடுக்கிறார் எடப்பாடியார். 


தூக்கி வைத்த கால்களுக்கு முருகையா!

துத்திப்பூ ஜல்லடமாம் முருகையா!

எடுத்து வைத்த கால்களுக்கு முருகையா!

எருக்கம்பூ ஜல்லடமாம் முருகையா!

(திருச்செந்தூர் முருகன் காவடிப் பாட்டு)   


அன்று 2001ல் தமிழக பாஜக தலைவர் 

டாக்டர் கிருபாநிதி! இன்று தமிழக பாஜகவின்  

தலைவர் டாக்டர் எல் முருகன்.


அன்று 2001ல் திமுக பாஜக கூட்டணியில் 

இடம் பெற்று பாஜகவுக்கு பல்லக்குத் தூக்கிய 

கட்சிகள் எவை எவை என்று பார்ப்போம்!


பல்லக்கினுள்ளே ஹெச் ராஜா அமர்ந்திருக்கிறார்.

பின்வரும் கட்சிகள் பல்லக்கைத் தங்களின் 

தோள்களில் தூக்கிச் சென்றன.


1) திமுக (பல்லக்குத் தூக்கியவர் கலைஞர்)  

2) புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி) 

3) புதிய நீதிக் கட்சி (ஏ சி சண்முகம்)  

4) விடுதலைச் சிறுத்தைகள் (தொல் திருமாவாவன்)

விசிக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 

போட்டி இட்டது.

5) காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை (ப சிதம்பரம்)

இக்கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 

போட்டி இட்டது.

6) தமிழக முஸ்லீம் இயக்க ஜமாஅத் (ஜெ எம் ஹாரூன்)   

இக்கட்சியும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 

போட்டி இட்டது.


மேலும் 7) மக்கள் தமிழ் தேசம் (எஸ் கண்ணப்பன்)

8) எம்ஜியார் அதிமுக (எஸ் திருநாவுக்கரசர்)

9) எம்ஜியார் கழகம் (ஆர் எம் வீரப்பன்)

10) கொங்குநாடு மக்கள் கட்சி (ஏ எம் ராஜா)

11) தமிழர் பூமி (கு ப கிருஷ்ணன்)

12) தமிழ்நாடு முத்தரையர் சங்கம் (குழ செல்லையா)   

13) தொண்டர் காங்கிரஸ் (குமரி ஆனந்தன்)

14) இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி 

(வேட்டவலம் மணிகண்டன்)   

     

ஆகிய மேற்கூறிய 14 கட்சிகளும் திமுக-பாஜக 

கூட்டணியில் இடம்பெற்று பாஜகவுக்கு 

சேவகம் செய்தன. ஹெச் ராஜாவுக்கு 

பல்லக்குத் தூக்கின.


பல்லக்கினுள் சொகுசாக அமர்ந்திருந்தார் 

ஹெச் ராஜா. கலைஞரோடு சேர்ந்து 

ஹெச் ராஜாவுக்குப் பல்லக்குத் தூக்கியவர்களில் 

காங்கிரசின் ப சிதம்பரம், ஜே.எம் ஹாரூன்,

குமரி அனந்தன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

மேலும் மிகவும் சிறப்பாக பல்லக்குத் தூக்கியவர் 

தொல் திருமாவளவன் அவர்கள்.


பாஜகவின் ஹெச் ராஜா உட்படநான்கு பேரை 

இவர்கள் பல்லக்குத் தூக்கி தமிழக சட்ட 

மன்றத்துக்குச் சுமந்து சென்று சட்டமன்ற 

இருக்கைகளில் அமர்த்தினார். 


ஹைகோர்ட்டானது மயிராவது என்று பேசினார்  

ஹெச் ராஜா! இந்தத் திமிர் அவருக்கு எங்கிருந்து 

வந்தது?


அந்தத் திமிர் கலைஞரால் வந்தது!

அந்தத் திமிர் ப சிதம்பரத்தால் வந்தது!

அந்தத் திமிர் தொல் திருமாவளவனால் வந்தது.


கலைஞரும் ப சிதம்பரமும் தொல் 

திருமாவளவனும் போட்டி போட்டுக் கொண்டு 

பல்லக்குத் தூக்கினால், ஹெச் ராஜாவுக்கு 

திமிர் வரத்தானே செய்யும்?


இன்று பாஜக எதிர்ப்புப் பேசும் அத்தனை பேரும்

அன்று 2001ல் பாஜகவுக்கு பல்லக்குத் தூக்கியவர்களே.

இவர்கள் யாரும் புனிதர்கள் அல்ல.

இவர்கள் எல்லோருமே பாஜகவிடம் சோரம் 

போனவர்கள்தானே! 


இது கல்லில் எழுத்தாக எழுதப்பட்ட தமிழகத்தின் 

அண்மைக்கால வரலாறு! நான் ஏதோ ஹைதர் அலி 

காலத்தின் வரலாற்றைச் சொல்லவில்லை.

இது நேற்றைய வரலாறு!  2001ன் வரலாறு!

வெறும் 20 ஆண்டுக்கு முந்திய தமிழக வரலாறு!

இதை எவராவது மறுக்க முடியுமா?

மறுத்துப் பார் என்று சவால் விடுகிறேன்.


பாஜக வாழ்க! பல்லக்குத் தூக்கிகள் வாழ்க!

பல்லக்குத் தூக்கி கலைஞர் 

பல்லக்குத் தூக்கி ப சிதம்பரம் 

பல்லக்குத் தூக்கி தொல் திருமாவளவன்

பல்லக்குத் தூக்கி ஜே எம் ஹாரூன் 

ஆகியோரின் செயலைப் போற்றுவோம்!


அவர்களின் வழியில் தொடர்ந்து பாஜகவிடம் 

சோரம் போவோம்!

Lightly, O lightly we bear her along,

We bear her along like a pearl on a string.

She sways like a flower in the wind of our song;

She skims like a bird on the foam of a stream,

She floats like a laugh from the lips of a dream.

Gaily, O gaily we glide and we sing,

We bear her along like a pearl on a string.

(The palanquin bearers, a poem by Sarojini Naidu) 

*******************************************************

      



 .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக