சனி, 29 மே, 2021

 மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை!

--------------------------------------------------------------

1) மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய 

கல்விக் கொள்கை உண்மையில் மோடி அரசின் 

சுய சிந்தனையில் விளைந்தது அல்ல. அது 

இந்தியாவில் ஏற்கனவே இருந்து வந்த பல்வேறு 

கல்விக் கொள்கைகளின் தொகுப்பு. மோடி அரசு 

புதிதாக எதையும் சொல்லி விட வில்லை.


2) நேரு காலத்தில் கல்விக் கொள்கை என்ற தனிப் 

பெயரில் எதுவும் இல்லை. என்றாலும் கல்வி 

பற்றிய சில கொள்கைகள் நேரு அரசுக்கு இருந்தன.


3) 1968ல் இந்திரா காந்தி ஒரு கல்விக் கொள்கையைக் 

கொண்டு வந்தார் அது இந்திரா கல்விக்கொள்கை.


4) 1986ல் ராஜிவ் காந்தி ஒரு கல்விக் கொள்கையைக் 

கொண்டு வந்தார். இதுவும் புதிய கொள்கை அல்ல.

ஏற்கனவே இருந்து வந்த இந்திரா காந்தி கல்விக் 

கொள்கையைச் சற்று நவீனப் படுத்தினார் 

ராஜிவ் காந்தி.கணினிக் கல்வி, நவீன மயம்,

ஆகியவற்றுக்கு ராஜிவ் முக்கியத்துவம் அளித்தார்.


5) பின்னர் 19992-95ல் நரசிம்மராவ் ஒரு கல்விக் 

கொள்கையைக் கொண்டு வந்தார். இதுவும் முற்றிலும் 

புதிய கல்விக் கொள்கை அல்ல. ஏற்கனவே இருந்து 

வந்த ராஜிவ் காந்தி கல்விக் கொள்கையில் உலகமயச் 

சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்தார்.


6) ஆக மோடி அரசு முற்றிலும் புதிதாக ஒரு கல்விக் 

கொள்கையைக் கொண்டு வந்து விடவில்லை. 

சொல்லப் போனால் இது புதிய கல்விக் கொள்கை 

என்று அழைக்கப் படுவதற்குப் பொருத்தமற்றது.

இந்தியாவில் காலங்காலமாக இருந்து வந்த,

முந்திய அரசுகள் நடைமுறைப் படுத்தி வந்த 

கல்விக் கொள்கையை மோடி அரசு அப்படியே 

எடுத்துக் கொண்டு, அதில் சம காலத்தின் தேவைக்கு 

ஏற்ப சில மாற்றங்களை செய்கிறது. அவ்வளவுதான்.


7) அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த 

பல்வேறு அரசுகளின் கல்வி கொள்கையை மறுபதிப்புச் 

செய்துள்ளது மோடி அரசு. ஆக புதிய கல்விக் கொள்கை 

என்பது ஒரு மறுபதிப்பு (A reprint).


8) மும்மொழித் திட்டம் என்பதும் 

அலுவல் மொழியான இந்தியைக் கற்க வேண்டும் என்பதும் 

சமஸ்கிருதத்துக்கு ஆதரவு என்பதும் 

மோடியால் முதன் முதலில் சொல்லப் படுவது அல்ல.

மேற்கூறிய மூன்றும் இந்தியாவின்  கல்விக் கொள்கையில் 

பாஜக ஆடசி வருவதற்கு முன்னரே உள்ளன.  

ஏற்கனவே உள்ள கல்விக் கொள்கை என்ன சொல்கிறதோ 

அதையே மோடி அரசின் கொள்கையும் சொல்கிறது.

        .


9) மும்மொழித்திட்டம் என்பது நேரு அரசின் 

கல்விக் கொள்கை என்ன கூறியதோ  அதை 

கிளிப்பிள்ளையாகத் திரும்பிச் சொல்வதுதான் 

மோடி அரசின்  கல்விக் கொள்கை.


10) The state government should adopt and vigorously implement 

Three language formula. இது 1968ல் உள்ள இந்திரா காந்தி 

கல்விக் கொள்கையில் உள்ள அம்சம். ஆக, இந்திரா 

காந்தியின் கல்விக் கொள்கை என்ன சொல்கிறதோ 

அதையே மோடியும் சொல்கிறார். ஒரே விஷயத்தை 

இந்திரா காந்தி சொல்கிறபோது தலையைத் தலையை 

ஆட்டிக் கொண்டு ஏற்றுக் கொள்வதும், அதே 

விஷயத்தை மோடி அரசு சொன்னால் மறுப்பதும் 

நியாயம் அல்ல. 

-----------------------------------------------------------------------


    

1 கருத்து: