புதன், 2 நவம்பர், 2022

மத நல்லிணக்கம் பேண வேண்டும்!
-------------------------------------------------------
1) சைதை சாதிக் என்னும் திமுகவின் நாலாந்தரப் 
பேச்சாளர் நடிகை குஷ்பூ உட்பட சில நடிகைகளை 
மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். அவர் இன்னும் கைது 
செய்யப்படவில்லை. கைது செய்யப்படவும் மாட்டார்.

2) எம் எம் அப்துல்லா என்பவர் திமுக எம்பி.
இவர் பாஜகவினரை எப்படி வேண்டுமானாலும் 
திட்டட்டும். அது அவர் பாடு, பாஜகவினரின் பாடு.
ஆனால் அப்துல்லா இந்திய தேசியத்தை இழிவு 
படுத்துகிறார். தேசிய உணர்வு கொண்ட 
அனைவரையும் இழிவுபடுத்துங்கள் என்று 
திமுகவினருக்கு அறைகூவல் விடுக்கிறார்.

3) சமீர் என்னும் ஊடகவியலாளர் 
 திமுகவின் வேலைக்காரர். அவர் அரசியல் 
தலைவர்களிடம் கேள்வி கேட்கும்போது 
மிகவும் இழிவாக நடந்து கொண்ட ஒரு வீடியோவைப் 
பார்த்தேன். அண்மையில் கோவையில் 
திரு அண்ணாமலையிடம் கேள்வி கேட்கும்போது,
திரு அண்ணாமலை பேசுகின்ற போடியத்தின் மீது 
(podium = மேடை) தன்னுடைய காலைத் தூக்கி 
வைத்துக் கொண்டு மிகவும் ஆபாசமான 
உடல்மொழியுடன் திரு அண்ணாமலையுடன் 
உரத்த குரலில் வாக்குவாதம் செய்யும் காட்சியைப்
பார்த்தேன்.

இந்த மூன்று உதாரணங்களுடன் நிறுத்திக் 
கொள்கிறேன். சொல்ல இன்னும் நிறைய உண்டு.
அறிவும் இல்லாமல் 
பண்பாடு நாகரிகம் இவை எதுவும் இல்லாமல்      
மூளை முழுவதும் வன்மத்தையும் 
காழ்ப்புணர்ச்சியையும் திணித்துக் கொண்டு 
வெறுப்பு அரசியலின் சீழ் ஒழுகும் நடத்தையுடன் 
திரியும் இவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து  
கொள்ளக் காரணம் என்ன? அவர்களின் மூளையில் 
உறைந்துபோன மதவெறி தவிர வேறு என்ன?  

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினராக உள்ள  
இந்த மண்ணின் மக்களை சிறுபான்மையினரான வேற்று 
மதத்தவர் அனுசரித்துப் போவதுதான். 
தொட்டதெற்கெல்லாம் பெரும்பான்மை சமூகத்துடன் 
மல்லுக்கு நிற்பதும் பெரும்பான்மையினரான 
இந்த மண்ணின் மைந்தர்களின்பால் வெறுப்பு 
அரசியலைக் கையாள்வதும் மதவெறியர்களின் 
அழிவில்தான் போய் முடியும். இதை உணர்ந்து 
தங்களைத் திருத்திக் கொள்வது மதவெறியர்களின் 
கடமை.

இப்போதுதான் கோவையில் மீண்டும் ஒரு குண்டு 
வெடிப்பை நிகழ்த்த முனைந்த சதி தோற்றுப்
போனது. அதைத் தொடர்ந்து சைதை சாதிக்,
எம் எம் அப்துல்லா,  சமீர் ஆகியவர்கள் 
தங்களின் ஆத்திரத்தை வெளிப்படையாகவே 
காட்டிக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

மதவெறி அரசியல் மத்திய கால அரசியல்.
அதாவது 500 ஆண்டுகளுக்கு முந்திய அரசியல்.
இன்று இந்த மில்லேனியத்திற்குப் பின்னும் 
சில சிறுபான்மை மதவெறியர்கள் இந்தியா 
முழுவதும் 500 ஆண்டுகளுக்கு முந்திய மதவெறி 
அரசியலைக் கொண்டுவர நினைத்தால், அது 
அவர்களின் அழிவில்தான் போய் முடியும்.

பெரும்பான்மையினரோடு மல்லுக் கட்டுவதை 
சிறுபான்மை மத வெறியர்கள் கைவிட வேண்டும்.
மதநல்லிணக்கம் என்பது சிறுபான்மையினரின் 
தரப்பில் இருந்து வர வேண்டும்.

சீனாவிலும்  ஐரோப்பிய நாடுகளிலும் சிறுபான்மை 
என்ற பெயரில் நிகழ்த்தும் அராஜகம் முற்றிலுமாக 
முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. இதுவே 
நாளை உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும்.

The Muslim world remains largely mute on 
Uyghur (China) Muslim's plight. Why? 
Indian fools should think over it. 
************************************************        
velippaduththuvathu  velippaduththuvathu

வெளிப்படுத்துவதை தமிழ்நாட்டு மக்கள்
ஏற்க மாட்டார்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக