சனி, 19 நவம்பர், 2022

கணிதமும் இயக்கவியலும்!
------------------------------------------
1878ல் தமது 57ஆம் வயதில் square root of minus 1 பற்றி  
எங்கல்ஸ் பேசுகிறார். (பார்க்க: எங்கல்ஸ் எழுதிய 
Anti Duhring என்னும் நூல்) இந்நூலை எழுதும்போது 
கணிதம் அறிவியல் ஆகியவற்றில் தமக்கு இருந்த 
போதாமையை அவர் உணர்ந்தார். எனவே கணிதம் 
அறிவியலை சுயமாகக் கற்க முயன்றார்.

அப்படிக் கற்றபோது square root of minus 1 பற்றி 
அறிந்ததும் பிரமிப்புக்கு உள்ளானார். அதை 
அவரின் சிந்தை ஏற்கவில்லை. எனவே 
அதை முரண்பாடு (contradiction) என்று வர்ணித்தார்.

கணிதத்தை கசடறக் கற்ற ஒரு அறிஞன் 
ஒன்றை முரண்பாடு என்று சொல்வதற்கும், 
ஒரு பள்ளிச் சிறுவனின் புரிதலில் இருந்து அதை 
முரண்பாடு என்று சொல்வதற்கும் இடையிலான 
வேறுபாட்டை நுண்மாண் நுழைபுலம் மிக்கோர் 
அறிவர்.

அடுத்து, அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் 
முரண்பாடு என்பது வேறு. எங்கல்ஸ் கூறிய 
முரண்பாடு என்பது வேறு. எங்கல்ஸ் கூறிய 
முரண்பாடு என்பது இயக்கவியல் முரண்பாடு 
(dialectical contradiction) ஆகும். இயக்கவியல் 
கற்று, அதை நன்கு புரிந்து கொண்டோருக்கு  
மட்டுமே இயக்கவியல் முரண்பாடு பற்றிய
தெளிவு கிட்டும். (படிக்க: ஹெக்கல் மற்றும் 
மார்க்சின் இயக்கவியல்).

ஹெக்கலிய முரண்பாடு (Hegelian contradiction)
என்னும் templateஐக் கையில் எடுத்துக் கொண்டு 
கணிதம், இயற்பியல், வேதியியல் என்று 
ஒவ்வொரு துறையிலும் அதைப் பொருத்திப் 
பார்த்து,ஹெக்கலிய முரண்பாட்டைச் 
சரியென்று நிரூபிக்கும் முயற்சியில் இருந்தபோது 
எங்கல்ஸ் கூறியதே square root of minus 1 என்பது 
ஒரு contradiction என்பது. பார்த்த மாத்திரத்தில் 
மைனஸ் 1ன் வர்க்கமூலம் என்ரூ பேசுவதே எந்த 
ஒரு laymanக்கும் முரண்பாடாகவே தெரியும். 
It is a visible contradiction; easily understandable contradiction.

ஆனால் அது ஒரு முரண்பாடு என்று கூறி, அதைக் 
குப்பையில் வீசியிருந்தால் கணிதம் வளர்ந்து 
இருக்காது. கணிதமானது இயல் எண்களோடு
(Natural numbers) நின்று போயிருக்கும். எனவே 
மெய்யெண் கற்பனை எண் ஆகிய எல்லாமுமே 
கணிதத்திற்குத் தேவை. 

இயல் எண்கள் எப்போதுமே கொடுத்து வைத்தவை.
அவற்றுக்கு கிடைக்கும் பேறுகள் பிற எண்களுக்குக் 
கிடைப்பதில்லை.

இன்றைய உலகின் கணித அறிவுக்கும் 
எங்கல்ஸ் வாழ்ந்த காலத்தின் (1878) கணித 
அறிவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு 
உண்டு. எங்கல்ஸ் வாழ்ந்த காலத்தில் நம் 
தமிழகக் கணித மேதை ராமானுஜன் 
பிறந்திருக்கவே இல்லை. எனவே அன்றைய 
கணிதம் ராமானுஜனின் பங்களிப்பைப் 
பெற்றிராத கணிதம். எனவே மெய்யெண் 
கற்பனை எண் ஆகிய எல்லாமுமே 
கணிதத்திற்குத் தேவை.    

எனது இப்பதிவானது கணிதம் பற்றிய academic பதிவு 
மட்டும் அல்ல. அது மார்க்சியப் பொருள்முதல்வாதப் 
பதிவும் ஆகும். எனவே இப்பதிவைப் புரிந்து
கொள்ள கணிதம் மற்றும் இயங்கியலில் 
(Hegelian and Marxian dialectics) காத்திரமான புரிதல் 
தேவைப்படுகிறது. எனவே எங்கல்ஸ் கூறிய 
absurd contradiction என்பது தவறானது. 

வளர்ச்சிக்குப் பயன்படாது என்ற பொருளில் 
எங்கல்ஸ் கூறியிருந்தார். அதை ஒருவர் 
முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் 
இயக்கவியல் விதிகள் அனைத்தும் வளர்ச்சிக்கானவை 
(Dialectical laws are laws of GROWTH).

இறுதியாக, மார்க்சம் எங்கல்சும் கடவுள்கள் அல்ல.
அவர்களைக் கடவுள்களாக மார்க்சியம் கருதுவதில்லை.
எனவே மார்க்ஸ் எங்கல்சை விமர்சிக்கத் தடை 
இல்லை. ஆனால் எங்கல்ஸ் சரியான கணிதத் 
தளத்தின்மீது நின்றுகொண்டுதான் பேசுகிறார் 
என்று மார்க்சிய மூல ஆசான் எங்கல்சுக்கே மிகுந்த 
மேட்டிமைத்தனத்துடன் சான்றிதழ் வழங்க முற்படுவது
அகந்தையை அன்றோ வெளிப்படுத்துகிறது! 
-----------------------------------------------------------------

  

  
  
          

      
   

 
 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக