செவ்வாய், 22 நவம்பர், 2022

 தமிழ் இளைஞர்களின் தாழ்வு மனப்பான்மை!

பெ மணியரசன், சீமானின் தடித்தனம்!

-----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------

போனவாரம் (19.11.2022) முக்கியமான ஒரு தேர்வு நம் 

தமிழ்நாட்டில் பல மையங்களில் நடைபெற்றது.

ரன்ன தேர்வு அது?


அது TNPSC தேர்வு. அதிலும் GROUP I தேர்வு.

Prelim  என்னும் தொடக்கநிலைத் தேர்வு.


Group I தேர்வு என்றால் அதிகாரிகளை 

நியமிப்பதற்கான தேர்வு. தேர்வில் தேறி வேலை 

கிடைத்தால், எடுத்த எடுப்பிலேயே அதிகாரம் 

மிக்க உயர் அதிகாரி பதவி கிடைக்கும். பச்சை 

மையால் கையெழுத்திடலாம். கெஜட் பதிவு 

பெற்ற அதிகாரி வேலையை தங்கத் தாம்பாளத்தில்

வைத்துக் கொடுப்பார்கள்.


இந்தத் தேர்வில் 

1) தமிழர்கள்

2) தென்னிந்தியர்கள் (மலையாளி, தெலுங்கர், கன்னடர்)

3) வட இந்தியர்கள்         

உள்ளிட்ட மூன்று தரப்பினர் கலந்து கொண்டனர்.


வட இந்தியர்களிலும் தென்னிந்தியர்களிலும் 

அநேகமாக விண்ணப்பித்த அனைவரும் 

தேர்வு எழுதி விட்டனர். ஆப்சென்ட் ஆனவர்கள் 

மிக மிகக் குறைவு.  1 சதவீதம் மட்டுமே ஆப்சென்ட் 

ஆயினர்.


ஆனால் முட்டாள் தமிழர்கள் இவ்வளவு முக்கியமான 

தேர்வில் அக்கறை காட்டவில்லை. 41 சதவீதம் பேர்

ஆப்சென்ட் ஆனார்கள். 5 சதவீதம் வரையிலான 

absentism இயல்பானது. ஆனால் முட்டாள் தமிழன் 

41 சதவீதம் பேர் இத்தேர்வை எழுதவில்லை.

பின்பு வேலை எங்கிருந்து கிடைக்கும்?


எட்டுக்கோடித் தமிழர்களையும் தொடர்ந்து 

காலங்காலமாக தாழ்வு மனப்பான்மையில் 

ஆழ்த்தி வைத்திருக்கிறது திராவிட இயக்கம்.

ஈ வே ராமசாமி, அண்ணாத்துரை, கருணாநிதி என்று 

திராவிடத் தலைவர்களும், விசிக போன்ற 

தாழ்வு மனப்பான்மையின் ஊற்றுக் கண்ணாகத்

திகழும் மக்கள் விரோத அமைப்புகளும் 

`தேர்வுகளை சந்திக்க அஞ்சும் கோழைகளாக 

தமிழ் இளைஞர்களை மாற்றி விட்டனர்.


இதனால்தான் தமிழ் இளைஞர்கள் தேர்வு 

என்றதுமே தீயை மிதித்தால் போன்று 

அலறுகின்றனர். உலகம் மொத்தமும் 

உள்ள தாழ்வு மனப்பான்மையைத் தங்களின் 

மூளைகளில் ஏற்றிக் கொண்டு வாழத் தகுதியற்ற 

மாமிசப் பிண்டங்களாக உயிர் பிழைத்துக் 

கொண்டிருக்கின்றனர்.


பெ மணியரசன், சீமான் போன்ற தற்குறித்

தலைவர்களுக்கு இது தெரியுமா?

ஒரு இழவும் தெரியாது. இந்தத் தற்குறிகளை

சும்மா விடலாமா?

******************************************************  


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக