சனி, 5 நவம்பர், 2022

டிஎஸ்பியை ஒரே நிமிடத்தில் கான்ஸ்டபிளாக 
பதவி இறக்கிய  உபி முதல்வர் 
யோகி ஆதித்யநாத்தின் திமிரை அடக்குவோம்!
--------------------------------------------------------------------
உத்தரப் பிரதேசத்தில் ராம்வீர் யாதவ் என்று 
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இருந்தான். இவன் 
ஒரு மருத்துவமனையையும் நடத்தி வந்தான்.

இவனுடைய மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற 
ஒரு பெண் வந்தார். அந்தப் பெண்ணை 
இன்ஸ்பெக்டர் ராம்வீர் யாதவ் கற்பழித்து 
விட்டான். இவன் கற்பழித்தது மட்டுமின்றி
இவனுடைய கூட்டாளிகள் சிலரும் அந்தப் 
பெண்ணைக் கற்பழித்தனர். ஆக இது ஒரு 
gang rape வழக்கு ஆகிறது. இது நடந்தது போன 
ஆண்டில்; அதாவது 2021ல்.

அந்தப் பெண் காவல் நிலையம் சென்று புகார் 
கொடுத்தார். அந்தப் புகாரை ஏற்க மறுத்த போலீசார் 
இறுதியில் அந்தப் பெண்ணின் கடும் போராட்டத்திற்குப் 
பின்னர், புகாரை ஏற்றுக்கொண்டனர்.

என்றாலும் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் 
எடுக்கப் படவில்லை. மேலதிகாரிகளிடம் முறையீடு 
செய்தார் அந்தப் பெண். அப்போது அந்த சரகத்தின் 
DSPயாக இருந்தவர் வித்யா கிஷோர் சர்மா.
(DSP = Deputy Superintendent of Police).   
 
பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு
உத்தரவிட வேண்டிய டிஎஸ்பி அதைச் செய்யவில்லை.
மாறாக வேலியே பயிரை மேய்ந்தது போல,
குற்றம் பிரிந்த இன்ஸ்பெக்டர் ராம் வீர் யாதவ்விடம் 
ரூ 5 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, பாதிக்கப் 
பட்ட பெண்ணின் புகாரை குப்பையில் வீசினார்.

பாதிக்கப்பட்ட பெண் உபி முதல்வர் யோகியின் 
கவனத்துக்கு தமது முறையீட்டைக் கொண்டு 
சென்றார். குற்றவாளியிடம் ரூ ஐந்து 
லட்சம் வாங்கிக் கொண்டு புகாரை குப்பையில் 
வீசி விட்டார் டிஎஸ்பி என்ற குற்றச்சாட்டை 
விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரவிட்டார். 

துறை ரீதியான உள்ளக விசாரணை (domestic inquiry) 
நடைபெற்றது. விசாரணையின் இறுதியில் டிஎஸ்பி
சர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் 
பட்டன. எனவே துறை ரீதியான நடவடிக்கை 
எடுக்கப் பட்டது. முதற்கண் டிஎஸ்பி சர்மா சஸ்பெண்ட் 
செய்யப் பட்டார். 

மிக்க கடுமையான நடவடிக்கை அது. அவருக்கு 
பதவி இறக்கம் ( reversion) என்னும் தண்டனை 
வழங்கப் பட்டது. டிஎஸ்பியாக இருந்த அவர் 
அவரின் Basic cadreக்கு revert செய்யப் பட்டார்.
அவரது Basic cadre கான்சடபிள் ஆகும். எனவே 
அவர் கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப் 
பட்டார். Suspension was revoked and he was posted as a 
constable.

குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ராம்வீர் யாதவ் மீது 
FIR போடப்பட்டு அவன் சிறையில் அடைக்கப் 
பட்டுள்ளான். முன்னதாக அவனும் சஸ்பெண்ட் 
செய்யப் பட்டுள்ளான்.

உப்பி போன்ற யாதவர்களின் ஆதிக்கம் மேலோங்கி 
இருக்கும் ஒரு மாநிலத்தில் , குற்றம் புரிந்த ஒரு 
யாதவன் மீது நடவடிக்கை எடுப்பது என்பது 
யாராலும் முடியாத ஒன்று. அதே போல ஒரு உயர்சாதிப் 
பார்ப்பனன் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆனால் யோகி ஆதித்யநாத் துணிந்து குற்றவாளிகள்
மீது நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளியான 
யாதவ்வை கம்பி என்ன வைத்துள்ளார். அவனுக்கு 
எப்படியும் 10 ஆண்டு சிறை கிடைக்கும் இது உறுதி.

அது போல பார்ப்பானாகிய சர்மா மீது கடும் 
நடவடிக்கை எடுத்து ஒரு டிஎஸ்பியை கான்ஸ்டபிள் 
ஆக்கி விட்டார். கயவன் சர்மாவுக்கு மானம் இருந்தால் 
இந்நேரம் அவன் நாண்டுக்கிட்டு நின்று இருக்க 
வேண்டும்.

வேறு எந்த மாநிலத்திலும் எந்த முதல்வராலும் 
இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுத்து, 
குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க 
முடியாது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு 
நடக்குமா? சகல போலி முற்போக்குகள், போலி 
இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள், போலி 
மாவோயிஸ்டுகள் இப்படி எல்லோரும் ஒன்றாகச் 
சேர்ந்து கொண்டு குற்றவாளிக்கு வக்காலத்து  
வாங்குவார்கள். தமிழ்நாடு என்பது குற்றவாளிகளின் 
சொர்க்கம்.

நான் யோகி ஆதித்யநாத்தை வணங்குகிறேன்.
********************************************
    அவர்தான் பெரியார்! எவர் செயற்கரிய செய்கிறாரோ 
அவர்தான் பெரியார் என்கிறார் திருவள்ளுவர்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செய்கலா தார். 

இந்தப் பதிவை அனைவரும் ஷேர் செய்து உதவுமாறு 
வேண்டுகிறேன். வாட்ஸாப்பிலும் அனுப்புமாறு 
வேண்டுகிறேன். இந்தப் பதிவு குறைந்தது 
1000 ஷேர் என்ற அளவில் ஷேர் செய்யப்பட்டிருக்க 
வேண்டும். இல்லையேல் தமிழ்ச் சமூகம் 
வீணாப்போன சமூகம் என்று பொருள்படும்.

எதிர்மறை கமெண்டுகளுக்கு அனுமதி கிடையாது.
மீறி எவரேனும் எதிர்மறையாக கமெண்டு
செய்தால் அவனின் முதுகுத்தொலி உரிக்கப்படும்.    

 


ஆங்கில இந்து ஏட்டில் (தி ஹிண்டு) வெளிவந்த 
செய்தியின் இணைப்பை முந்திய கமெண்டில் 
கொடுத்துள்ளேன். அதை ஒவ்வொருவரும் படிக்க 
வேண்டும். இவ்வளவு முக்கியமான செய்தியாக 
இருந்தாலும் தமிழ் ஊடக வேசிமக்கள் இந்தச் 
செய்தியைப் போடமாட்டான். எனவே ஆங்கிலச் 
செய்தியைப் படியுங்கள்.
  
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக