சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் (2022)!
----------------------------------------------------------------
1) 2022 நவம்பர் 3ல் நடைபெற்ற இடைத்தேர்தலின்
முடிவுகள் நவம்பர் 6ல் அறிவிக்கப் பட்டன.
2) தேர்தல் நடந்த சட்டமன்றத் தொகுதிகள் = 7
நாடாளுமன்றத் தொகுதிகள் எதிலும் இடைத்தேர்தல்
நடக்கவில்லை.
3) மேற்கூறிய 7 தொகுதிகளும் பின்வரும் 6 மாநிலங்களில்
இருந்தன.
உபி = 1; ஹரியானா = 1; ஒடிசா = 1; தெலுங்கானா = 1;
மகாராஷ்டிரா = 1; பீகார் = 2. ஆக மொத்தம் = 7.
4) தேர்தல் முடிவுகள்:
பாஜக = 4.
லாலு கட்சி RJD = 1.
தெலுங்கானா BRS = 1 (பழைய பெயர் TRS)
சிவசேனை (தாக்கரே) =1.
காங்கிரஸ் = 0.
ஆக மொத்தம் = 7.
5) இடைத்தேர்தலுக்கு முன்பு, பாஜக 3 இடங்களை
வைத்திருந்தது. அந்த மூன்றையும் தக்க வைத்துக்
கொண்டதுடன் மேலும் ஒரு இடத்தையும் வென்றுள்ளது.
காங்கிரஸ் 2 இடங்களை வைத்திருந்தது. தற்போது
அந்த இரண்டையும் இழந்து பூஜ்யத்தில் வந்து
நிற்கிறது.
பீகாரில் கோபால்கஞ் தொகுதியில் பாஜக நிச்சயம்
தோற்று விடும் என்று நித்திஷ்குமார், தேஜஸ்வி
யாதவ், ஆங்கில டிவி சானல்கள் என்று எல்லோரும்
ஆருடம் சொன்னார்கள். காரணம் நித்திஷின்
கட்சியும்(JDU), லாலுவின் கட்சியான RJDயும்,
காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI)
சேர்ந்து பெருங்கூட்டணி (மஹா கட் பந்தன்)
அமைத்து பாஜகவைத் தனிமைப் படுத்தி
இருந்தன. ஆனால் இவ்வளவுக்கு அப்புறமும்
பாஜகவைத்த தோற்கடிக்க முடியவில்லையே
என்பதால் நித்திஷ் குமார் மிகவும் மனமுடைந்து
போய் இருக்கிறார்.
உபியில் கோலா கோகர்நாத் தொகுதியில் பாஜக
34000 வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி
பெற்றுள்ளது.
பாஜக = 1,24,000.
சமாஜ்வாதி = 90,000.
(figures are rounded up).
இந்த இடைத்தேர்தலால் தேசிய அளவில் எவ்வித
மாற்றமும் இல்லை. பாஜகவுக்கு சாதகமாக உள்ள
நிலைமை அப்படியே மாற்றமின்றி நீடிக்கிறது.
ராகுல் காந்தி முடிவுகளைப் பார்த்தார். அவர்
எவ்விதமான கவலையும் கொள்ளவில்லை.
நன்றறி வாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக