புதன், 2 நவம்பர், 2022

விழிஞ்சம் துறைமுகத்தை எதிர்த்து
நடக்கும் போராட்டம் நியாயமற்றது!
கிறிஸ்துவ சர்ச்சுகள் நடத்தும் போராட்டம்  
என்று கேரளா மார்க்சிஸ்டு முதல்வர் கண்டனம்!
----------------------------------------------------------------------
கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு அருகில் 
உள்ளது விழிஞ்சம் துறையூகம். அரபிக் கடலில் 
அமைந்த துறைமுகம் இது.

கட்டி முடிக்கப்பட்ட துறைமுகம் அல்ல இது. 
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் துறைமுகம்.
சர்வதேச அளவிலான மாபெரும் கடல் 
துறைமுகமாக, சுமார் 7000 கோடி ரூபாய் 
செலவில் அமைந்த ப்ராஜக்ட் இது.

கேரளத்தில் உள்ள கிறிஸ்துவப் பாதிரியார்கள் 
இத்துறைமுகத்தை எதிர்த்து 100 நாட்களாக 
நீண்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

லத்தின் கிறிஸ்துவ சர்ச்சுகளின் நியாயமற்ற 
இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்டு முதல்வர் 
பினராயி விஜயன் கண்டித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து
விழிஞ்சம் துறைமுகத்தை ஆதரித்துப் போராட்டம் 
நடத்தி உள்ளன.

விழிஞ்சம் துறைமுகத்தைக் கட்டித்தரும் பொறுப்பை 
அதானி ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது தெரியுமா?

இந்தச் செயதிகளெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகளில் 
வெளிவராது. தமிழ் ஊடகங்கள், யூடியூப் சானல்களை 
நடத்துவோர் ஆகியோர் இச்செய்தியைக் கண்டு 
கொள்ள மாட்டார்கள். 
************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக