பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின்
வீரஞ்செறிந்த போராட்டங்களின்
பின்னர் தொழிற்சங்கம் அமைக்கும்
உரிமைக்கான சட்டத்தை
(Indian Trade Union Act 1926) பிரிட்டிஷ்
அரசு கொண்டு வந்தது. இந்தியாவில்
தொழிற்சங்க உரிமைகளை
கம்யூனிஸ்டுகள் போராடிப் பெறறார்கள்.
இதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ்
அரசு மீரத் சதி வழக்கை கம்யூனிஸ்ட்
தலைவர்கள் மீது சுமத்தியது. இது
நடந்தது 1929ல். எஸ் ஏ டாங்கே,
எஸ் வி காட்டே, முசாபர் அகமது
ஆகிய தலைவர்கள் மீது சதி வழக்கைத்
தொடுத்து அடக்குமுறையை ஏவியது
பிரிட்டிஷ் அரசு.
மும்பை நகரில் உள்ள தொழிலாளர்கள்
அன்று நியாயமான கோரிக்கைகளுக்காக
AITUC தலைமையில் போராடியபோது
பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு ஆதரவான
நிலை எடுத்து தலித் தொழிலாளர்கள்
வேலைநிறுத்தம் செய்ய மாட்டார்கள்
என்று அறிவித்தார் அம்பேத்கார்.
எஸ் ஏ டாங்கே, எஸ் வி கட்டே, முசாபர்
அகமது மீது சதி வழக்கும் சிறையும்.
ஆனால் அம்பேத்காரை அரவணைத்தது
அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய
அரசு. இதில் எங்கே இருந்து நட்பு
முரண்பாடு வர வாய்ப்பு உள்ளது?
பிரிட்டிஷுக்கு அடிமைபட்டுக் கிடந்த
காலத்தில் இந்திய சமூகத்தின்
பிரதான முரண்பாடு எது?
அடிமைப் படுத்திய பிரிட்டிஷாருடன்
உள்ள முரண்பாடுதான் பிரதான
முரண்பாடு. சாதிப் பிரச்சினை,
மொழிப்பிரச்சினை, பெண்ணுரிமைப்
பிரச்சினை ஆகிய அனைத்தும்
பிரதான முரண்பாடுகள் அல்ல.
அம்பேத்கார் மிகவும் தெளிவாகவும்
உணர்வுபூர்வமாகவும் பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தை ஆதரித்தார்.
பிரிட்டீஷாரின் நம்பகமான விசுவாசியாக
இருந்தார். கோட்பாட்டு ரீதியாக
கம்யூனிசத்தை எதிர்த்தார். எனவே
அவருடன் கம்யூனிஸ்டுகளுக்கு
இருந்த முரண்பாடு நட்பு முரண்பாடு அல்ல.
நட்பு முரண்பாடு இருக்கவும் இயலாது.
சதி வழக்கும் சிறையும்! ஆனால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக