காட்சி கண்கொள்ளாக் காட்சி!
ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை
விண்ணில் செலுத்தும் காட்சி!
போலிப்பகுத்தறிவுவாதிகளின் புறக்கணிப்பு ஏன்?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
கண்ணுள்ளவர் காணக் கடவர்!
சென்னைக்கு மிக அருகில் உள்ள ஊர் ஸ்ரீஹரிகோட்டா!
விண்கலன்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின்
ஏவுதளம் இங்கு உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தது.
இது ஒரு கடற்கரையோரச் சிறுநகரம். சென்னையில்
இருந்து சுமார் 100 கிமீ தூரம்! 2 மணி நேரப் பயணம்!
அவ்வளவுதான்!
நான் பணியாற்றிய தொலைதொடர்பு
அலுவலகத்தில், 1970களிலேயே
ஸ்ரீஹரிகோட்டா-சென்னை ஒரு ஹாட்லைன்
உண்டு. டெலிபிரிண்டர்/டெலக்ஸ் லைன்,
டெலிபோன் லைன் (STD) ஆகிய ஹாட்லைன்
வசதி உண்டு. சர்க்யூட்டின் பெயர்
ஷார் (SHAR). இப்போதும் அதே பெயர்தான்.
அப்போதெல்லாம் ஸ்ரீஹரிகோட்டா ஒரு
coastal villageதான்.
நீங்கள் ஸ்ரீஹரிகோட்டா போய் இருக்கிறீர்களா?
இல்லை எனறு சொல்கிறீர்கள். சொல்லிக் கொள்ளுங்கள்!
நான் போயிருக்கிறேன்.
ஜெருசலேம், மெக்கா, காசி போகிறோமோ இல்லையோ
ஸ்ரீஹரிகோட்டா போக வேண்டும். ஒரு அறிவியல்
மாணவனுக்கு, ஒரு அறிவியல் ஆர்வலனுக்கு,
ஸ்ரீஹரிகோட்டாதான் ஜெருசலேம்.
அடிக்கொருதரம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கைக்
கோள்களைச் சுமந்து கொண்டு ஏவுகணைகள்
விண்ணில் செலுத்தப் படுகின்றன. இன்றைய நாள்
(26 நவம்பர் 2022) அப்படிப்பட்ட ஒரு பொன்னாள்.
இன்று காலை 1156 மணிக்கு PSLV C-54 XL என்னும்
ஏவுகணை, மொத்தம் 9 செயற்கைக் கோள்களைச்
சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான்
விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில்
இருந்து விண்ணில் செலுத்தப் பட்டது.
இக்காட்சியைத் திரளான பொதுமக்களும்
மாணவர்களும் அறிவியல் ஆர்வலர்களும்
நேரில் கண்டு களித்தனர்.
எப்போதெல்லாம் ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்
படுகின்றனவோ, அப்போதெல்லாம் அக்காட்சியை
வந்து காணுமாறு பொதுமக்களை இஸ்ரோ
அழைக்கிறது. இஸ்ரோவின் அழைப்பை ஏற்று
ஐஐடி மாணவர்கள், ASTROPHYSICS மற்றும் PHYSICS
மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் வந்து
பார்க்கின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்களை அங்குள்ள அறிவியல்
ஆசிரியர்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்து வர
வேண்டும். அங்கு நடைபெறும் நிகழ்வுகளை
மாணவர்கள் நேரில் பார்ப்பதானது பாடப்
புத்தகத்தில் உள்ள இரண்டு அத்தியாயங்களைப்
படித்து முடிப்பதற்குச் சமம்.
நம்மூருக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அது என்ன
தெரியுமா? இங்குதான் போலிப்பகுத்தறிவுவாதிகள்
மிகவும் அதிகம். விடுதல் வீரமணி, கொளத்தூர்
மணி, கோவை ராமகிருஷ்ணன் என்று ஆளுக்கொரு
அமைப்பு வைத்துக் கொண்டு போலிப்பகுத்தறிவை
விலைக்கு விற்றுக் காசு பார்க்கும் கபோதிகள்
நிறைந்த மாநிலம் நம் தமிழ்நாடு!
இந்தியா தனது முதல் ஏவுகணையை எப்போது
விண்ணில் செலுத்தியது? மாணவர்களும் போட்டித்
தேர்வு எழுதுபவர்களும் இக்கேள்விக்குச் சரியான
பதிலை அளிக்க வேண்டும். (இது குறித்து முழு
விவரமும் அறிய விரும்புவோர் அறிவியல் ஒளி
இதழில் (செப்டம்பர் 2022) நான் எழுதிய கட்டுரையைப்
படிக்கலாம்).
அன்று முதல் இன்று வரை இஸ்ரோ பல நூற்றுக்
கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில்
செலுத்தி உள்ளது. அந்நிகழ்வுகளை ஆயிரக்
கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டு
களித்துள்ளனர்.
ஆனால் என்றைக்காவது வீரமணி, கொளத்தூர் மணி,
விடுதலை ராசேந்திரன் வகையறாக்கள் ஸ்ரீஹரிகோட்டா
சென்று ஏவுகணை விண்ணில் செலுத்தப் படுவதைப்
பார்த்து இருக்கிறார்களா?
அல்லது தங்கள் கட்சித் தொண்டர்களை, "போய்ப்
பார்த்து விட்டு வாருங்கள்" என்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு
அனுப்பி வைத்து இருக்கிறீர்களா? கிடையாது.
ஏனெனில் அவர்கள் போலிப் பகுத்தறிவுவாதிகள்!
அவர்கள் யாரும் பொருள்முதல்வாதிகள் அல்ல.
வாசகர்களே,
அடுத்த satellite launchன்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு
நேரில் சென்று launch நிகழ்வைக் கண்டு களியுங்கள்.
இன்றைய launchன்போது போய்ப்பார்க்க எனக்கும்
ஆசைதான்! இப்போது இயலாது. உடலும் வயதும்
அனுமதிக்க மறுக்கின்றன. நான் ஏற்கனவே
போயிருக்கிறேன். போக வேண்டிய எல்லா இடத்துக்கும்
அநேகமாக நான் போயிருக்கிறேன். இதுவரையிலும்
போகாத, இனிமேல் போக வேண்டிய ஒரு இடம்
இருக்கிறது. அது சுடுகாடுதான்!
ஆனால் அங்கும் நான் செல்லப் போவதில்லை. என்
உடலை மருத்துவக் கல்லூரிக்கு முழுஉடல்தானம்
என்று எழுதி வைத்து விட்டேன்.
இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, இஸ்ரோவின்
அடுத்த launchன்போது ஒன்றிரண்டு பேராவது
சென்றால், நான் பிறவிப்பயனை எய்தி விடுவேன்.
****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக