சனி, 14 செப்டம்பர், 2013

தண்டனைக்கும் குற்றத்துக்கும் உள்ள
உறவு என்ன?
---------------------------------------------------------------  
அறிவியல் கூறுவது என்ன?
---------------------------------------------------------------   
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் 
எல்லா உயிரினங்களுக்கும்
தூண்டலுக்குத் துலங்கல் என்ற பண்பு உண்டு. 
( there will be a  response when there is a disturbance.)

எனவே மனித மனம், பாராட்டப் படும்போது 
உற்சாகம் அடையும்; ஊக்கம் பெறும்.
எனவேதான் பத்மஸ்ரீ முதல் பாரத ரத்னா வரை,
சாஹித்ய  அகாடமி முதல் ஞான பீடப்  பரிசு வரை 
பரிசுகள் வழங்கப் படுகின்றன.
பரிசுக்கு உரிய செயலைத்தொடர்ந்து செய்வதற்கு
ஏதுவான ஊக்கத்தை இப்பரிசுகள் வழங்குகின்றன.

அது போலவே, 
தண்டனைகள் வழங்கப் படும்போது
மனம் திருந்தும். 
தண்டனைக்கு உரிய செயலைச் 
செய்யக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கும்.

இதுதான் மனித மனம் இயங்கும் முறை.
இந்திய தண்டனைச் சட்டம் ( IPC )
குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்கும் 
சட்டம். (THE PUNISHMENT SHOULD COMMENSURATE with THE GRAVITY OF THE OFFENCE என்ற 
கோட்பாட்டின் 
அடிப்படையில் அமைந்த சட்டம்.)

எனவே தண்டனை கடுமையாக இருக்கும் போது
குற்றங்கள் குறையும் என்ற கோட்பாடு சரியான கோட்பாடு.
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு.
மனித மனம் எவ்வாறு இயங்குகிறது 
என்பதைப் புரிந்து கொண்டு, 
அதன் அடிப்படையில் அமைந்த கோட்பாடு.
தனி மனித உளவியலைப் பேசுகிற விஞ்ஞானம் சைக்கலாஜி.
ஒட்டுமொத்த மானுடத்தின் உளவியலைப் பேசுகிற 
விஞ்ஞானம் ANTHROPOLOGICAL PSYCOLOGY என்று 
அழைக்கப் படுகிறது. 

Criminology, Psycology மற்றும் Anthropological psycology ஆகிய  அறிவியல் கோட்பாடுகளின் 
அடிப்படையில் அமைந்ததுதான் 
இந்தியாவின் தண்டனைக் கோட்பாடு.
தண்டனை கடுமையாக இருக்கும் போது மட்டுமே 
குற்றங்கள் குறையும். இதுதான் அறிவியல். 

வள்ளுவரும் இதைத்தான் கூறுகிறார்:

கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்.

பயிர்களைக் காப்பாற்ற களைகளைப் பிடுங்கி
எறிவது அவசியம் என்பதுதான் இந்தக் குறளின் பொருள்.

அதுபோல, ஒரு சமுதாயம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால், 
அங்கு குற்றங்கள் குறைவாக இருக்க வேண்டும். 
அதற்கான வழிகளில் ஒன்றுதான் 
கடுமையான தண்டனைகள் வழங்குவதன் முலம் 
குற்றங்களைக் குறைப்பது.
இது மட்டுமே வழி என்பதல்ல.
ஆனாலும் இது நிச்சயமான உத்தரவாதமான வழி!

சாம பேத தான தண்டம் என்கிறான் சாணக்கியன்.
தண்டம் கடைசியாகத் தான் பிரயோகிக்கப் படும்.
என்றாலும் தண்டம் இல்லாமல் வெற்றி இல்லை.
அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்னும் தமிழ்ப் பழமொழியும் 
இதைத்தான் கூறுகிறது.

எனவே, மரண தண்டனை அவசியம்.
***************************************************                 
     
 

WILL THE DETERRENT PUNISHMENT RESULT IN THE DECLINE OF CRIME RATE?

கடுமையான தண்டனை வழங்குவதால்
குற்றங்கள் குறைந்து விடாது.
 இது சரியா?
--------------------------------------------- 
1) தொலைக்காட்சி விவாதங்கள், சிறு பத்திரிகைகளில் கட்டுரைகள்
இவற்றில் எல்லாம், 
கடுமையான தண்டனைகளால் 
குற்றங்களைக் குறைத்து விட முடியாது 
என்ற வாதம் மேலோங்கி நிற்கிறது.

2) இந்தக் கூற்றுக்கு எதேனும் ஆதாரம் உண்டா? இந்த வாதத்துக்கு
வலு சேர்க்கும் புள்ளி விவரங்கள் உண்டா?

3) கிடையாது என்பதே உண்மை.

4) ஆனாலும் நெஞ்சாரப் 
பொய்தன்னைச் சொல்கின்ற
குட்டி முதலாளித்துவ அரைகுறை அறிவு ஜீவிகள்
எந்த விதமான ஆதாரமும் இல்லாமல்,
" கடுமையான தண்டனையால்  குற்றங்கள் குறைந்து விடாது"
என்ற தங்களின் உளறல்,
 புள்ளி விவரங்களால் நிருபிக்கப்பட்ட உண்மை
என்பது போல்
 பம்மாத்துப் பண்ணி வருகின்றனர்.

5)கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிப்பவன் முதல்
ஜிஆர்டியில் தங்கம் வாங்கும் சீமாட்டி வரை
எல்லோரும் கத்தை கத்தையான புள்ளி விவரங்களைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு 
திரிவது போலவும், .....
இந்தியாவின் தேசியக் குலத்தொழிலே புள்ளி விவரம் சேகரிப்பதுதான்
என்பது போலவும் .....
இந்தக் குட்டி முதலாளித்துவ அறிவு (!)ஜீவிகள்
செய்யும் பாசாங்கு
அருவருப்பைத் தருகிறது.

6)அரசோ தனியார் நிறுவனங்களோ,
கடுமையான தண்டனை விதிப்பதால்
குற்றங்கள் குறைந்து விடாது என்ற
 வாதத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில்
எத்தகைய புள்ளி விவரங்களையும்
சேகரிக்க வில்லை என்பதே உண்மை.

7)அப்படியானால் இந்தக் கேள்விக்கு
என்னதான் பதில்?
தண்டனைக்கும் குற்றத்துக்கும் உள்ள உறவுதான் என்ன?
தண்டனையை கடுமை ஆக்கினால்
குற்றங்கள் குறையாது என்றால்,
குற்றங்களைக் குறைப்பதற்கான வழிதான் என்ன?

8) மேற்கண்ட கேள்விகளுக்கு
அறிவியல் கூறும் தீர்வு என்ன என்பதைப் பார்ப்போம்.
                         ...................... .......தொடரும்.........

வெள்ளி, 13 செப்டம்பர், 2013


death sentence to Delhi gang rape culprits

நிர்பயா வழக்கில் நாடு போற்றும் தீர்ப்பு!
நான்கு கயவர்களுக்கும் மரண தண்டனை!!
-----------------------------------------------------------------------------------  
புது டில்லி சாகேத் நீதிமன்ற நீதியரசர் மேதகு யோகேஷ் கன்னா 
 நிர்பயா   வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கி உள்ளார். குற்றவாளிகள் என்று அறிவிக்கப் பட்ட நான்கு கயவர்களுக்கும் மரண தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டி உள்ளார்.

செப்டம்பர் 13, 2013 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் மூலம் நீதித்துறை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 

தீர்ப்பை வரவேற்போம். நான்கு கயவர்களும் தூக்கில் இடப்படும் வரை போராடுவோம். உயர்நீதி   மன்றம் , உச்சநீதி  மன்றம், ஜனாதிபதியிடம் கருணை மனு, மனித உரிமை என்ற பெயரிலான கயமை ஆகிய 
தடைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தில் வெல்லும் வரை போராடுவோம். 

இத்தீர்ப்பின் மூலம்,
1) குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்து உள்ளது.
2) பாதிக்கப் பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைத்து உள்ளது.
3)இத்தகைய கொடூரங்கள் சகித்துக் கொள்ளப் பட மாட்டாது 
    என்ற செய்தி சமூகத்துக்கு உரத்துச் சொல்லப்பட்டு  உள்ளது.
********************************************************************************* 

வியாழன், 12 செப்டம்பர், 2013

SHOULD THE CAPITAL PUNISHMENT CONTINUE?

மரண தண்டனைவேண்டாம் 
என்று கூறுவோர்க்குச் சில கேள்விகள்!!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------------------------------------
 1)விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தில் அரசாட்சி நடத்திய காலத்தில்,
     அவர்களிடம் மரண தண்டனை உண்டு. 
    தமிழ் ஈழ தேசியத் தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழ் 
     ஈழத்தின் நீதி   பரிபாலனத்தில் மரண தண்டனையை முக்கியமாக   இடம்   பெறச் செய்து இருந்தார்.  

2) தளபதி மாத்தையா இயக்கத்துக்குத் துரோகம் செய்து தளபதி கிட்டுவைக் காட்டிக் கொடுத்தார். 
இதற்காக புலிகள் அவருக்கு மரண தண்டனை 
விதித்து நிறைவேற்றினர்.

3)  TULF  தலைவர் அமிர்த லிங்கம் அமைதிப் படையை ஆதரித்து துரோகி யானார். புலிகள் அவருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றினர்.
இன்னும் உதாரணங்கள் உண்டு; பட்டியல் நீளும் என்பதால் தவிர்க்கிறோம்.

4) மேதகு பிரபாகரன் அவர்கள் 
மரண தண்டனை வேண்டும் என்ற கருத்துக் 
கொண்டவர். 
மரண தண்டனை வேண்டாம் என்று கூச்சலிடும்   நண்பர்கள்
மேதகு  பிரபாகரன் அவர்களின் எதிரிகள் அல்லவா!

5) ரஷ்ய அதிபராக ஸ்டாலின் இருந்த போது , 
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் 
மத்திய கமிட்டி உறுப்பினர்களில் முக்கால் வாசிப் பேர் துரோகிகள் ஆகி விட்டனர் என்று கூறி அனைவருக்கும் மரண தண்டனை விதித்தார்.

6) முன்னாள் கம்யூனிச நாடுகளான ரஷ்யா, சீனாவில் இன்றும் மரண தண்டனை உண்டு.

7)இஸ்லாமிய நாடுகளில் அன்றும் இன்றும் மரண தண்டனை உண்டு.

8 )உலகின் எல்லா விடுதலை இயக்கங்களிலும் மரண தண்டனை உண் டு .
LTTE  முதல் PLO (பாலஸ்தின விடுதலை இயக்கம்) வரை.

9) எனவே மரண தண்டனை வேண்டாம் என்ற கூச்சல் ,   
மேதகு பிரபாகரன் அவர்கள் மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் புரட்சிகரமான 
கருத்துக்களுக்கு எதிரானது என்பது மேலே சொன்ன கருத்துகள் மூலம் 
நிருபிக்கப் பட்டு விட்டது அல்லவா!
....................................   வாதங்கள் தொடரும்   .........................
......

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

capital punishment: right or wrong?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? 
--------------------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------------------- 
      
மரண தண்டனை என்ற கோட்பாட்டை எதிர்த்து நாடு முழுவதும் 
குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

இவை யாருடைய குரல்கள்? இவை குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகளின் குரல்கள். 

கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் , மரண தண்டனை வேண்டாம் என்ற கருத்து தாராளவாத முதலாளிகளின் கருத்து. இது மார்க்சியக் கருத்தோ புரட்சிகரக் கருத்தோ அல்ல.பாட்டாளி வர்க்கத்தின்  கருத்தோ அல்லது உழைக்கும் மக்களின்   கருத்தோ அல்ல.  ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு,  பாதாம் அல்வாவும்   முந்திரிப் பருப்பு பக்கோடாவும் தின்று கொண்டு,
வாட் திஸ் இண்டியா ! நான்சென்ஸ்!! என்று தம்  மேட்டிமைத் தனமான 
கருத்து முத்துக்களை இந்திய மக்கள்  முன் உதிர்க்கும்  இவர்கள்தான் 
மேற்சொன்ன தாராளவாத முதலாளித்துவக் கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் தான் மரண தண்டனை வேண்டாம் என்று 
கூச்சல் போடுபவர்கள்.

இவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள்; சிறைக்குப் போக மாட்டார்கள்.
புரட்சி என்பது ஒரு மாலை நேரத்து விருந்து என்று கருதும் இந்தக் கோழைகள், மூடர்கள்  " மரண தண்டனை வேண்டாம்" என்பது போன்ற 
பாதிப்பு ஏற்படுத்தாத கோரிக்கைகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இதன் முலம் இந்தக் கோழைகளுக்கு ஒரு முற்போக்கு முகமூடி கிடைத்து விடுகிறது! இதற்குத்தான் இந்தக் கூச்சல்!

1967-இல் இந்தியாவில் விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சி வெடித்தது.
நக்சல்பாரிப் புரட்சி என்ற பெயரிலான இந்தப் புரட்சியை, மார்க்சிய-லெனினிய கட்சி நடத்தியது.மகத்தான புரட்சியாளர் சாரு மஜும்தார் இந்த நக்சல்பாரி புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தினார்.வர்க்க எதிரியை அழித்து ஒழிப்பது   
 ( annihilation of class enemies ) என்ற கோட்பாட்டை முன்வைத்து நடைமுறைப் படுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அழித்தொழிப்புகள் 
நடைபெற்றன; அதாவது வர்க்க எதிரிகள் கொலை செய்யப் பட்டார்கள்.
சீனாவிலும் தலைவர் மாவோ தலைமையில் பல்வேறு அழித்தொழிப்புகள் 
நடைபெற்றன.சாரூ  மஜும்தாரின் கோட்பாடு  அடிப்படையில் மார்க்சியக் கோட்பாடாகும். காரல் மார்க்சே தம்முடைய கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற நூலில் குறிப்பிட்ட கோட்பாடாகும். ( பார்க்க: let the ruling classes tremble over a communist revolution ) இந்தக் கோட்பாட்டில்  நம்பிக்கை உடையவர்கள் எவ்வாறு மரண தண்டனையை  எதிர்க்க முடியும்?         .......தொடரும்......

திங்கள், 9 செப்டம்பர், 2013

பற்றி எரிகிறது முசாபர் நகர் (உபி )! 31 உயிர்கள் பலி!!
-------------------------------------------------------------------------  
மதக் கலவரத்தால் பற்றி எரியும் உபியில் இன்னும் அமைதி திரும்பவில்லை.
31 உயிர்கள் பலி ! 100க்கு மேற்பட்டோருக்குக் காயம் ! 130 பேர் கைது! 1000 பேர் மீது வழக்குப் பதிவு!!!!
     தொடர்ந்த ஊரடங்கு!  கண்டவுடன் சுட உத்தரவு !ராணுவத்தின் கொடி  அணிவகுப்பு !! என்னதான் நடக்கிறது முசாபர்நகரில் ? கலவரம் எப்படி ஆரம்பித்தது?

         காமவெறியால் விளைந்த கலவரம்!
        ----------------------------------------------------- 
முசாபர்நகர் சன்சாத் பகுதியில் , ஷா நவாஸ் என்ற முஸ்லிம் வாலிபன் 
ஒரு இந்துப் பெண்ணிடம் பாலியல் வன்முறையைப் பிரயோகித்தான் .
அந்தப் பெண் தன வீட்டில் புகார் செய்தாள். அந்தப் பெண்ணீன் அண்ணனும் அவன் நண்பனும் சென்று முஸ்லிம் வாலிபன் ஷா நவாசிடம் தட்டிக் கேட்டனர் . அந்தப் பகுதி முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி . சிறிது நேரத்தில் எல்லா முஸ்லிம்களும் அங்கு திரண்டு விட்டனர். தட்டிக் கேட்ட இந்து வாலிபர்கள்  ( சச்சின் , கெளரவ் ) இருவரும்  முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். நிகழ்ந்த வன்முறையில் ஷா நவாசும் கொல்லப் பட்டான். 
இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. கலவரம் தொடர்கிறது.

முசாபர் நகர் மக்கள் தொகையில் இந்துக்களும் முஸ்லிம்களும் சரி சமமாக உள்ளனர் .விவசாயம் சிறப்பாக நடைபெறும் மாவட்டம் அது. ஜாட்  இன மக்கள் கரும்பு பயிரிடும்  விவசாயத்தில் சிறந்து விளங்கி பொருளாதார நிலையில் மேம்பட்டு உள்ளனர். தற்போதைய ஜாட் -முஸ்லிம் கலவரத்தில் 
ஜாட்டுகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஜாட் இனத தலைவரான அஜித் சிங்கை முசாபர் நகரில் நுழையக் கூடாது என்று தடை விதித்துள்ளது அகிலேஷ் யாதவ் அரசு. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அமைதியை நிலை நாட்டும்படி அகிலேஷ் யாதவ்வுக்கு கட்டளை இட்டுள்ளார். கூடிய விரைவில் முசாபர் நகரில் அமைதி திரும்பும் என்று நம்புவோமாக!