பித்தைத்தரு தத்தித்தருதலை
வெள்ளி, 11 பிப்ரவரி, 2022
கோவை குண்டுவெடிப்பை நிகழ்த்திய
பயங்கரவாதிகளை முன்கூட்டியே
விடுதலை செய்ய முடியாது!
அவர்களுக்கு ஜாமீனும் வழங்கக் கூடாது!
முதல்வர் ஸ்டாலின் உறுதி!
--------------------------------------------------------
பல ஆண்டுகளுக்கு முன்பு, 1998ல்
பெப்ரவரி 14ஆம் நாளில்,
கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு
வைத்து அப்பாவிகளைக் கொன்றது
அல் உம்மா என்னும் இஸ்லாமிய
பயங்கரவாத அமைப்பு.
கோவையில் வெவ்வேறு இடங்களில் மொத்தம்
13 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான
அல் உம்மா. குண்டு வெடிப்பில் 46 பேர்
இறந்து போயினர். 2000 பேர் காயமுற்றனர்.
ஆண் பெண் குழந்தைகள் என்று 46 பேரைக்
கொலை செய்த அல் உம்மா பயங்கரவாத
அமைப்பை அன்றைய தமிழக முதல்வர்
(1996-2001) கலைஞர் அவர்கள் உடனடியாகத்
தடை செய்தார்.
கலைஞரின் தலைமையில் இயங்கிய காவல்துறை
முழுவீச்சில் செயல்பட்டு, குண்டு வைத்த
பயங்கரவாதிகளின் தலைவன் எஸ் ஏ பாட்சா
உள்ளிட்ட 72 பேரைக் கைது செய்தது.
கொடிய இந்தக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம்
ஆயுள் தண்டனை விதித்தது. அதைத்தான்
இக்கொலைகாரர்கள் இன்று வரை அனுபவித்துக்
கொண்டு இருக்கிறார்கள்.
கலைஞர் என்றுமே சிறுபான்மையினரின்
காவலராக இருந்து வந்தார். ஆனால் கலைஞரின்
ஆடசியைக் கலைக்கும் அளவுக்கு, இஸ்லாமிய
பயங்கரவாதிகள், பொது மக்களைக்
குண்டு வைத்துக் கொலை செய்தால் அதைப்
பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு
கலைஞர் முட்டாள் அல்ல. கலைஞரின் காவல்துறை
வெகு சிறப்பாகச் செயல்பட்டு, கொடிய
பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி
தண்டனை வாங்கிக் கொடுத்தது.
இஸ்லாமிய சிறைவாசிகளை முன்கூட்டியே
விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு
இயக்கத்தைத் தமிழ்நாட்டில் இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் நடத்தி வருகின்றனர்.
கோவை குண்டுவெடிப்புக் குற்றவாளிகள்
72 பேரையும் முன்கூட்டியே விடுதலை
செய்வதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.
இது பல நூறு கோடி ரூபாய் ப்ராஜக்ட்.
தமிழ்நாட்டில் போலி முற்போக்குகள் மற்றும்
வேஷதாரிகள் நிறைய உண்டு. அவர்களில்
பலர் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை
செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி
செமத்தியாக காசு பார்த்து விட்டனர்.
கைதிகளுக்கு சிறைத் தண்டனையில் தளர்வு,
சலுகை, தள்ளுபடி ஆகியவற்றை வழங்க
தமிழக அரசுக்கு சட்டப்படி உரிமை உண்டு.
ஆனால் குண்டு வைத்து அப்பாவிப் பொதுமக்களைக்
கொன்ற பயங்கரவாதிகளுக்கு இந்தச் சட்டம்
பொருந்தாது.
இதை அன்றைய முதல்வர் கலைஞரும்
இன்றைய முதல்வர் ஸ்டாலினும் நன்கு
அறிவார்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளை
முன்கூட்டியே விடுதலை செய்ய எந்தச்
சட்டமும் இடம் தரவில்லை.
தற்போது கொடிய பயங்கரவாதியான
அல் உம்மா பாட்சா உச்ச நீதிமன்றத்தில்
ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு
விசாரணைக்கு வர உள்ளது. அதில் தமிழக
அரசு தனது தரப்பை முன்வைத்து, இக்கொடிய
பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது
என்று தெரிவித்து உள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். அவரை
இங்குள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்
மிரட்ட முடியாது.
இங்குள்ள போலி முற்போக்குகள், போலி
இடதுசாரிகள், போலி மாவோயிஸ்டுகள்,
போலி நக்சல்பாரிகள் ஆகியோர் இஸ்லாமிய
அடிப்படைவாதிகளிடம் காசு வாங்கிக் கொண்டு
புரட்சி வேஷம் போடுவார்கள். அவர்களை
அம்பலப் படுத்துங்கள். அவர்களிடம் ஏமாந்து
போய் விடாதீர்கள்.
******************************************************
வியாழன், 10 பிப்ரவரி, 2022
இன்குலாப் ஜிந்தாபாத் என்பது
பிற்போக்கான முழக்கம்!
அல்லாஹு அக்பர் என்பதே புரட்சிகரமான முழக்கம்!
------------------------------------------------------------------------
1) தடுப்பூசியை எதிர்ப்பான். தடுப்பூசி
போடக்கூடாது என்று மூர்க்கத் தனமாகப்
பிரச்சாரம் செய்வான். ஆனால் தன்னை
இடதுசாரி என்று சொல்லிக் கொள்ளுவான்.
இவன் எப்படி இடதுசாரி ஆவான்??
.
2) ஹோமியோபதி என்பது ஒரு போலி அறிவியல்.
அது ஒரு பித்தலாட்டம். எனவேதான் சோவியத்
ஒன்றியத்தில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சியில்
ஹோமியோபதி தடை செய்யப் பட்டது.
ஹோமியோபதியை மார்க்சியம் ஏற்கவில்லை.
அப்படியிருக்க ஹோமியோபதியை ஆதரிப்பவன்
எப்படி இடதுசாரி ஆவான்? அவன் மார்க்சிய விரோதி
அல்லவா!
3) மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை எதிர்ப்பான.
அறிவியலை எதிர்க்கும் இப்பிற்போக்காளன் எங்ஙனம்
இடதுசாரி ஆவான்?
4) பெண்களுக்கு முக்காட்டை விதிக்கும்
நிலவுடைமைக்கால இஸ்லாமியப்
பிற்போக்குவாதத்தை ஆதரித்து, பெண்களே
முக்காடு அணியுங்கள் என்பான். இவன் எப்படி
இடதுசாரி ஆவான்?
5) இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம்
தவறான முழக்கம்; எனவே நீங்கள் அல்லாஹு
அக்பர் என்று முழங்குங்கள். அதுவே புரட்சிகரமானது
என்பான். இவன் எப்படி இடதுசாரி ஆவான்?
சகல பிற்போக்குவாதத்தையும்
சகல மூட நம்பிக்கைகளையும்
ஆதரிப்பான். அவற்றைப் பாதுகாப்பான்.
இவன் எப்படி இடதுசாரி ஆவான்?
******************************************************
செவ்வாய், 8 பிப்ரவரி, 2022
இதற்கு மாறானது டிஜிட்டல் எனப்படும் ஈரிலக்க முறையிலான
திங்கள், 7 பிப்ரவரி, 2022
அமித்ஷாவும் சிதம்பரமும்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
1) கூடங்குளம் அணுஉலையை நிர்மாணித்து
அணுமின்சாரம் எடுக்க மன்மோகன்சிங் அரசு
தீர்மானித்தது. கூடங்குளம் அணுஉலை ரஷ்ய
அணுஉலை என்பதால் இதை எதிர்த்து ஒரு பெரும்
போராட்டத்தைக் கட்டமைக்க அமெரிக்கா திட்டமிட்டது.
இப் போராட்டத்துக்கு அமெரிக்கா பெரும் பணத்தை
வாரி இறைத்தது.
சுப உதயகுமார் என்பவர் சுற்றுச் சூழல்
போராளியாக வேடம் தரித்து நடித்தார்.
ஆஸ்கார் விருதுக்குரிய நடிப்பு அது.
இந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில்
கலந்து கொண்டவன், கலந்து கொள்வதாகப்
போக்குக் காட்டியவன் எல்லோரும் நிறையக்
காசு பார்த்து விட்டான்.
போலி மாவோயிஸ்ட், போலி நக்சல்பாரி என்று
பலரும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில்
பணக்காரனாகி விட்டான்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில்
ப சிதம்பரமும் நாராயணசாமியும் முக்கியமானவர்கள்.
ஒரு காரியத்தைச் சாதிக்கலாம். இதில் நான்காவது
முறையைக் கையாண்டு போலிப் போராட்டத்தை
முறியடித்து போலிப் போராளிகளை மொட்டை
அடித்து மூலையில் தள்ளினார் ப சிதம்பரம்.
கட்டப்பட்டு வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக அணுஉலைகள் வளர்ந்து வருகின்றன.
ஆனால் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் செத்துப்
போய் விட்டது.
நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வந்து சமாதி கட்டி
விட்டார் அமித் ஷா. அணுஉலை எதிர்ப்புப் போலிப்
போராளிகளை மலிவாக விலைக்கு வாங்கிப் போட்டு
விட்டார் அமித் ஷா. நான்கு முறைகளில் மூன்றாவது
முறையைக் கையாண்டு அணுஉலை எதிர்ப்புப்
போராட்டத்திற்குக் கொள்ளி வைத்து விட்டார் அமித் ஷா.
கோடீஸ்வரன் ஆயிட்டான். முகிலன் கற்பழிப்பில்
இறங்கி விட்டான். அதன் விளைவாக ஜெயிலில்
அடைபட்டு இப்போது ஜாமீனில் இருக்கிறான். இவனெல்லாம்
ஒரு போராளி!! பாதிரியாராக இருந்த ஒருவன் அமெரிக்கப்
பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்க முடிவு செய்து,
துறவைத் துறந்து கிரகஸ்தன் ஆகி விட்டான்.
சந்தி சிரித்துப் போச்சு. சிதம்பரம் அடி உதை மூலம்
சாதித்ததை, அமித்ஷா காசை விட்டெறிந்து
சாதித்து விட்டார்.
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022
ஆட்டுக்கும் தாடி அவசியம்!
அன்றைய ஆளுநர் பர்னாலாவும் அவசியம்!
மோசடியும் பித்தலாட்டமும் அதன் உச்சத்தில்!
-----------------------------------------------------------------
படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா?
இவர்தான் சுர்ஜித் சிங் பர்னாலா!
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர்.
எப்போது இருந்தார்? 1990-91 காலக்கட்டத்தில்
தமிழக ஆளுநராக இருந்தார்.
பின், 2004 முதல் 2011 வரை ஏழாண்டுகள் மீண்டும்
தமிழக ஆளுநராக இருந்தார்.
2006 ஜனவரியில் ஜெயலலிதா முதல்வராக
இருந்தபோது, கேபிள் டிவி தொழிலில்
ஏகபோகத்தை ஒழிக்கும் நோக்குடன் அரசு
கேபிள் டிவி சட்டத்தைக் கொண்டு வந்தார்.
தமிழக செட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட
இச்சட்டத்தை ஆளுநரின் கையெழுத்துக்காக
பர்னாலாவுக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.
உடனே கருணாநிதிக்கு அடிவயிறு கலங்கியது.
கேபிள் டிவி தொழிலில் ஏகபோகத்துடன்
அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்களையும்
சுரண்டிக் கொழுக்கும் தன்னுடைய பேரன்களின்
வருமானத்துக்கு அரசு கேபிளால் பாதிப்பு
வருமே என்று கலங்கினார் கருணாநிதி.
உடனடியாக ஆளுநர் பர்னாலாவைச் சந்தித்தார்
கருணாநிதி. எக்காரணம் கொண்டும் ஜெயலாலிதா
அரசு நிறைவேற்றிய இந்த அரசு கேபிள்
சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்கக்
கூடாது என்று கோரிக்கை வைத்தார்.
சுர்ஜித் சிங் பர்னாலா திமுகவின் பரிந்துரையால்
ஆளுநர் ஆனவர். 1990-91 அன்றைய திமுக அரசைக்
கலைக்க மத்திய காங்கிரஸ் அரசு விரும்பியது.
அதற்காக ஆளுநரிடம் அறிக்கை கோரியது.
ஆனால் அறிக்கை கொடுக்க மறுத்தார் பர்னாலா.
அதைக் கருத்தில் கொண்டு மீண்டும் பர்னாலாவே
எங்களுக்கு ஆளுநராக வேண்டும் என்று
மத்திய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிடம்
கோரிக்கை வைத்தார் கருணாநிதி. இக்கோரிக்கையை
ஏற்று பர்னாலா தமிழக ஆளுநராக நியமிக்கப் பட்டார்.
ஜெயலலிதா அரசு நிறைவேற்றிய கேபிள் டிவி
சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற
கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றுக்
கொண்ட பர்னாலா, அச்சட்டத்துக்கு ஒப்புதல்
வழங்கவில்லை.
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்!
ஏமாற்று வேலை! பித்தலாட்டம்! மோசடி!
ஏதோ ஆளுநர் பதவியை எதிர்ப்பது போல் வேஷம்
போட்டுக்கொண்டு திரியும் இவர்களின்
யோக்கியதை 2006ல் எங்கே போனது?
அன்று பர்னாலாவை எதிர்க்க வேண்டியதுதானே!
ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும்
வேண்டாம் என்றால், அன்று பர்னாலாவை
எதிர்த்திருக்க வேண்டியதுதானே!
*******************************************************
பின்குறிப்பு:
புழுத்த அரசியல்வாதிகளுக்கு ஒரே நோக்கம்தான்!
அது சம்பாதிப்பதுதான்! அவர்களுக்கு
கொள்கை என்பதெல்லாம் ஒரு மயிரும் கிடையாது.
போலி முற்போக்குச் சொங்கிகள், போலி இடதுசாரிச்
சொங்கிகள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள
வேண்டும்.
-----------------------------------------------------------------------
NEET
