திங்கள், 16 மே, 2022

 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்!

2024 தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற 

கட்டுரையின் முன்னுரை (5 அல்லது 6)

------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------

மொத்த வாக்காளர்கள் = 91.19 கோடி 

வாக்குப் பதிவு = 67.40% 

பதிவான வாக்குகள் = 62 கோடி 


பாஜக பெற்ற வாக்குகள் = 37.36%

அதாவது 22.9 கோடி வாக்குகள். 

(23 கோடி என்று கொள்க)

பாஜக பெற்ற இடங்கள் = 303.

(மொத்த இடங்கள் = 543)


காங்கிரஸ் பெற்ற வாக்குகள் = 19.49%

அதாவது 11.94 கோடி வாக்குகள். 

காங்கிரஸ் பெற்ற இடங்கள் = 52.   


புரிந்து கொள்ள எளிமையாகவும் 

மனதில் பதிக்க ஏதுவாகவும் 

பின்வருமாறு புரிந்து கொள்ளுங்கள். 


1) பாஜக காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து 

பதிவான வாக்குகளான 62 கோடியில் 

35 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளன.

மிச்சமுள்ள 27 கோடி வாக்குகளை 

மாநிலக் கட்சிகள் பெற்றுள்ளன.


2) காங்கிரஸைப் போல் இரண்டு மடங்கு 

வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.

அதாவது காங்கிரஸ் 12 கோடிக்குச் சற்றுக் 

குறைவான வாக்குகளையும், பாஜக 

23 கோடி வாக்குகளையும் பெற்றுள்ளது.


3) வாக்கு சதவீதத்தைப் பொறுத்து,

காங்கிரஸ் 19 சதவீதமும் பாஜக 38 சதவீதமும் 

பெற்றுள்ளன. இரண்டு மடங்கு!


4) இடங்களைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் 

52 இடங்களையும் பாஜக 303 இடங்களையும் 

பெற்றுள்ளன. பாஜக பெற்றுள்ளது கிட்டத்தட்ட 

காங்கிரசைப்போல் ஆறு மடங்கு இடங்கள்!


5) 2014 தேர்தல், 2019 தேர்தல் என்று 

தொடர்ச்சியாக இந்த இரண்டு தேர்தல்களிலும்

காங்கிரஸ் மூன்று இலக்க இடங்களை 

மக்களவையில் பெறவில்லை (2014: 44 இடங்கள்;

2019: 52 இடங்கள்)  


6) எனவே காங்கிரஸானது இந்திய நாடாளுமன்றத்தின் 

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸதை 

தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும் பெறவில்லை.

    


CPI, CPM கட்சிகளின் பரிதாப நிலை!

--------------------------------------------------------

இறுதியாக தேசியக் கட்சிகளான CPI, CPM

கடசிகள் வாக்கு சதவீதம் என்ன என்று 

பார்த்து விடுவது நல்லது.


2019 தேர்தலில் CPI கட்சி 2 இடங்களையும்

CPM கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளன.    

CPI பெற்ற வாக்குகள் = 35.76 லட்சம் (0.58%)


CPM பெற்ற வாக்குகள் = 1 கோடியே 7 லட்சம்.

அதாவது 1.75%


CPI பெற்ற இரு இடங்களும் திமுக கூட்டணியில் 

இடம் பெற்று தமிழ்நாட்டில் கிடைத்த 

இடங்கள். மீதி 27 மாநிலங்களிலும் யூனியன் 

பிரதேசங்களிலும் சேர்த்து CPI பெற்றது 

பெரிய பூஜ்யம். அது போலவே CPM பெற்ற 

3 இடங்களில் 2 இடங்கள் தமிழ்நாட்டில் திமுக 

கூட்டணியால் கிடைத்த இடங்கள். மீதி ஒரு இடம் 

கேரளத்தில் கிடைத்தது.


தமிழ்நாடு தாண்டி CPI ஒரு பூஜ்யம்.

தமிழ்நாடு கேரளம் தாண்டி CPM ஒரு 

மிகப்பெரிய பூஜ்யம்.

இவ்விரு கட்சிகளும் தேசியக் கட்சி என்ற

அந்தஸ்தை இழக்கின்றன.     


இவை அனைத்தையும் மனதில் பதித்துக் 

கொள்ளுங்கள். அடுத்து நான் எழுதப்போகும் 

கட்டுரையைப் புரிந்து கொள்ள இந்தப் 

புள்ளி விவரங்கள் தேவை.

******************************************



புரட்சியாளர் வேல்முருகனின் மனைவி 

பாஜகவில் இணைந்தார்!

--------------------------------------------------------------

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்

வேல்முருகன் அவர்கள். இவர் பெரும் 

புரட்சியாளர் ஆவார்.


இவரின் மனைவி காயத்ரி.

தற்போது காயத்ரி பாஜகவில் சேர்ந்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு 

கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார்.


காயத்ரி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம்

அமையட்டும் என்று வாழ்த்துவோம். காயத்ரி 

அழகான பெயர். அழகான சமஸ்கிருதப் பெயர்.


போலி முற்போக்கு கபோதிகளே,

சம்ஸ்கிருத எதிர்ப்பு போலிக் கயவர்களே 

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்னடா?


ஏல, நாண்டுக்கிட்டு நில்லுங்கலே என்று 

கூறி செருப்பால் அடிக்கிறார் 

இசக்கிமுத்து அண்ணாச்சி!

**********************************************

தகவல் ஆதாரம்: சாமுராய் பத்திரிகை.     

---------------------------------------------------------

 பிராமண பெண் தன் கணவனை அண்ணா என்று அழைப்பதேன்???

இதோ பதில்.......
நான் பெருமைமிகுந்த பிராஹ்மண ஜாதியில் பிறந்தவள் ;அறிவுள்ள ஆரிய வம்சத்தவள் ;பண்பாட்டை உலகிற்கு வழங்கிய பார்ப்பன குலத்தைச் சேர்ந்தவள்.
“நாமெல்லாம் வீட்டில் கணவரை ‘மாமா’ என்றும்,வெளியில் மற்ற ஆண்களை ‘அண்ணா’ என்றும் அழைக்கிறோம்.
ஆனால் அவா வீட்டில் கணவரை ‘அண்ணா’என்றும்,வெளியில் மற்ற ஆண்களை ‘மாமா’என்றும் அழைக்கிறார்கள்.
இதுதான் அவாளோட நாகரிகம்!”என்று கிண்டல் அடித்து எங்கள் குலப்பெண்களை இழிவுபடுத்தியிருக்கிறீர்கள்.
நீங்களும் ஒரு பெண் ( அருள் மொழி) என்பதையும் மறந்து அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று பேசியிருக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட ஒரு பேச்சு ஒரு வழக்கறிஞரின் வாயிலிருந்து வரக்கூடாத பேச்சு.
இப்படி நீங்கள் பேசியவுடன் உங்களுக்கு முன் அமர்ந்திருப்பவர்களும் உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களும் கரகோஷமிட்டு,பலத்த சிரிப்பொலிகளை எழுப்பியதைக் கேட்கமுடிந்தது.
அந்தக் கரகோஷமும் ஆரவாரச் சிரிப்பும் ஏதோ உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதிபோல் நீங்கள் நினைத்துக்கொண்டு உங்கள் முகத்திலும் புன்முறுவலைத் திரும்பத் திரும்ப நீங்கள் இழையவிட்டதையும் என்னால் காணமுடிந்தது.
இதைப் பார்க்கின்றபோது, என்ன தோன்றுகிறதென்றால்,ஒரு முழு முட்டாளின் பேச்சை சில அடிமுட்டாள்கள் ஆரவாரித்து அங்கீகரிக்கின்றபோது,அந்த முழுமுட்டாள் சந்தோஷ போதையில் தன்னை மறந்து சிரிப்பதுபோல் இருக்கிறது.
மேடம்,உங்களுக்குக் கொஞ்சமாவது மொழி அறிவிருந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டீர்கள்.
உங்கள் பெயருக்குத் தகுந்த தன்மை உங்களிடம் இல்லை. ‘அருள்மொழி’என்ற அழகான பெயரை வைத்துக்கொண்டு ‘இருள்மொழி’யை உதிர்த்திருக்கிறீர்களே,மேடம்!.
ஆரியர்கள் அதாவது பிராஹ்மணர்கள் அதாவது பார்ப்பனர்கள் தங்கள் இல்லங்களில் பண்டுதொட்டு வடமொழிகலந்த மணிப்ரவாள நடையில்தான் பேசுவது வழக்கம்.
அவர்களது பேச்சில் ஸம்ஸ்க்ருதம் கலந்துதான் இருக்கும்.அவர்கள் வீட்டில் உபயோகிக்கும் ‘அண்ணா’என்ற சொல் நீங்கள் நினைப்பதுபோல் ‘உடன்பிறந்தவன்’என்ற பொருளை உட்கொண்டதன்று.
அச்சொல் ‘அண்’என்ற வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து உருவானது. ‘அண்’என்பது உயிர்,உயிர்மூச்சு,வாழ்வு என்ற பொருள்களைத் தரும் வடமொழி வேர்ச்சொல். ‘அண்ண’என்றால் ‘என் உயிரே’, ‘என் உயிர் போன்றவனே’என்று பொருள்.
அதாவது,தன் கணவனைத் தன் உயிராகவே நினைத்து விளிக்கும் சொல் அது. ‘உடன் பிறந்தவன்’ என்ற பொருளைத் தரும் ‘அண்ணன்’என்ற தமிழ்ச்சொல் அல்ல அது.
வடமொழியில் உடன் பிறந்த மூத்தவனை ‘ஜ்யேஷ்ட ப்ராதா’என்றழைப்பர். உடன் பிறந்த மூத்தவனை வடமொழியில் விளிக்க‘அண்ணன்’என்ற சொல்லைப் பயன் படுத்தமாட்டார்கள்.
நீங்கள் சொல்வதுபோல் சகோதர உறவைக் குறிக்கும் சொல்லால் கணவனை அழைப்பதென்றால் ‘ப்ராதா’என்றுதான் அழைத்திருப்பார்கள்.
அப்படி யாரும் பிராஹ்மணக் குடும்பங்களில் கணவனை அழைப்பதில்லை.
ஆகவே மொழியறிவற்ற நீங்கள்தான் நாகரிகமில்லாத விளக்கம் கொடுக்கிறீர்களேயொழிய,கணவனை உயிராக மதிக்கும் நாகரிகத்தைக் கொண்ட எமது குலப் பெண்கள் சரியாகத்தான் பேசினார்கள்;பேசுகிறார்கள்;பேசுவார்கள்
அதைப்போலவே, ‘மாம’என்ற சொல் ஒரு வடமொழிச்சொல்.நீங்கள் சொல்வது போல் தாயுடன் பிறந்தவனைக் குறிக்கும் தமிழ்ச்சொல் அல்ல அது.தாயுடன் பிறந்தவனை வடமொழியில் ‘மாதுலன்’என்றழைப்பர். ‘மாம’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘எங்களைச் சேர்ந்தவர்’, ‘எங்களுக்கு வேண்டியவர்’என்று பொருள்.
அதாவது,தன் உறவல்லாத, தனிப்பட்ட ஒரு ஆண்மகனை மரியாதை நிமித்தம் ‘எங்களுக்கு வேண்டியவர்’என்ற கருத்தில் அழைக்கப் பயன்படும் சொல்தான் அது.
சாதரணமாக,அன்னியர் ஒருவர்மீது நாம் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தால் சில நேரங்களில் ‘நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்;எங்களைச் சேர்ந்தவர்’என்றெல்லாம் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்தப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தும் ஒற்றைச் சொல்தான் ‘மாம’என்பது.நீங்கள் சொல்வதுபோல் தாயுடன் பிறந்தவனை விளிக்கப் பயன்படுத்தும் தமிழ்ச்சொல்லான ‘மாமா’ என்ற சொல்லன்று அது.
மற்ற ஆண்களைத் தன் தாயுடன் பிறந்தவனாக பாவித்து வடமொழியில் அழைப்பதென்றால் ‘மாதுல’என்றுதான் அழைக்கமுடியும்.அப்படி எங்கள் குலப்பெண்கள் யாரும் அன்னிய ஆடவனை தங்களின் மாதுலன் ஸ்தானத்தில் வைத்து அழைப்பதில்லை.
ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.ஒரே பொருளைத்தரும் பலசொற்களும் உண்டு.ஒருமொழியில் உள்ள ஒரு சொல் வேறு மொழியில் வேறு பொருளைத் தருவதாகவும் இருக்கும்.
ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தரும் ஒரு சொல் கால தேச வர்த்தமானங்களுக்குத் தக்கபடியும் பொருள் மாற்றத்தை அடையும். மொழியறிவுள்ளவர்கள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் ஒரு சொல்லின் பொருளை அறிய முற்படுவர்.
ஆங்கிலத்தில் மாமன்,சிற்றப்பா,பெரியப்பா-இவர்கள் எல்லோரையுமே‘Uncle’என்ற ஒரே சொல்லால்தான் அழைக்கிறார்கள்.
ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன் ஒரு அன்னிய ஆடவனைப் பார்த்து ‘Uncle’என்றழைத்தால் அச்சிறுவனின் தாய், தன் பிள்ளை அந்த ஆடவனை சிற்றப்பாவாகக் கருதிவிட்டான் என்று நினைத்து அந்த ஆடவனைத் தன் படுக்கைக்கு அழைத்துவிடலாமா? அந்த ஆடவனும் அதேமுறையில் எண்ணி அப்பெண்ணைச் சேர எண்ணிவிடலாமா?அருள்மொழி மேடம்!ஒரு மொழியின் சொல்லை நீங்கள் விளக்கும் விதத்தின்படி பார்த்தால் இனி எந்தச் சிறுவனும் அன்னிய ஆடவன் ஒருவனைப் பார்த்து ‘Uncle’என்று விளித்து விட்டால் பெரும் சிக்கலாகிவிடுமே!
வயதில் மூத்த பெண்களையும் உயர்பதவியில் இருக்கும் பெண்களையும் மரியாதை நிமித்தமாக ஆங்கிலத்தில் “Madam’’என்று அழைக்கிறார்கள்.
நானும் அந்தக் காரணத்தால்தான் அச்சொல்லால் தங்களை அழைக்கிறேன்.அந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் “A woman who is in charge of the PROSTITUTES in a Brothel”என்று பொருள் சொல்லப்பட்டிருகிறது.அங்கில அகராதியில் சொல்லப்பட்ட பொருளில்தான் நான் தங்களை அழைத்ததாக நீங்கள் நினைத்து,என்னைத் தாங்கள் தவறாக எண்ணிவிடாதீர்கள்.ஏனெனில் தங்களின் “மேதாவிலாசம்”அப்படிப்பட்டது!
பிராஹ்மணர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற உங்களது குதர்க்க புத்தியால், ஒருசொல்லின் உண்மையான பொருளை உணராமல் தான்தோன்றித்தனமாக அதற்குப் பொருள் சொல்லி உங்களையே நீங்கள் அசிங்கப்படுத்திக்கொண்டுவிட்டீர்களே மேடம்!
…… “பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாக இருப்பதுடன் பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாக இருக்கிறது……
புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்துகொள்வதாலும் பெண்சாதி ஒரு புருஷனைத்தவிர வேறு எந்தப் புருஷனையும் எந்தக்காரணம் கொண்டும் மணந்துகொள்ள முடியாததற்கும் இந்தக் குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாக இருக்கிறது…..
ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும் பிள்ளை பெறுவதும் இடையூறான காரியமாகிறது அதிலும் பெண்களின் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியாக இருக்கிறது….”என்று ஆண்களையும் பெண்களையும் வன விலங்குகளாக்க, இப்படிப்பட்ட ‘தத்துவ முத்துக்களை’ உதிர்த்த “தமிழர் தலைவனின்”கொள்கைகளை ஏற்று அதன்படி ஒழுகும் உங்களின் “நாகரிகத்தின் பெருமையைப்”பேச வார்த்தைகளே இல்லை! “ஒரு பெண், தான் விரும்பும் எத்தனை ஆண்களுடன் வேண்டுமானாலும் படுத்துக்கொள்ளலாம்,தவறில்லை.”என்று போதித்திருக்கிறார் உங்கள் தலைவர்.
அவரது கொள்கையைப் பின்பற்றி வாழும் நீங்கள்,ஒரு மொழியில் உள்ள ஒரு சொல்லின் பொருள் தெரியாமல் அதற்கு அவப்பொருள் சொல்லிப் பண்பட்ட எங்கள் குல மரபை விமர்சிக்க முற்பட்டதுதான் பெரிய வேடிக்கை.
இதைவிட, நீங்கள் செய்யும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் உங்களின் சாக்கடைப் பண்பாட்டை “தமிழ்ப் பண்பாடு”என்றுவேறு சொல்லித் தமிழர்களின் உண்மையான பண்பாட்டையே கேவலப்படுத்தும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் தலைவனின் கொள்கையைப் பின்பற்றி வாழும் உங்கள்பண்பாடு தமிழ்ப் பண்பாடல்ல, மேடம்.
தொல்காப்பியம் முதலாக உள்ள தமிழ்ச்சங்க இலக்கியங்களில் உங்கள் தலைவனின் கொள்கைகளில் ஏதாவதொரு கொள்கையாவது இடம்பெற்றிருக்கும் ஒரு இடத்தை உங்களால் காட்ட முடியுமா,மேடம்?
தமிழ்நாகரிகம் ஆரியத்தின் ஒரு அங்கம்தான்.ஆரியத்தின் அங்கமாக இருப்பதில் அக்காலத் தமிழர்கள் பெருமிதம் கொண்டிருந்தார்கள்.
தமிழனின் தலைசிறந்த பண்பாட்டை உங்களது தரங்கெட்ட தலைவனின் தரங்கெட்ட கொள்கைகளோடு இணைத்து அசிங்கப்படுத்தாதீர்கள்
.மேடம்,உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.எக்காலத்திலும் எவ்வூரிலும் பிராஹ்மணர்களாகிய எங்களுக்குள்ள உயர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது
.அன்று ஒருவகையில் இருந்தால் இன்று ஒருவகையில் அவ்வுயர்வு இருக்கிறது.இன்று மற்ற ஜாதிக்காரர்கள் நடை,உடை,பாவனை,பேச்சு,உணவு முதலியவற்றில் பிராஹ்மணர்களாக மாற (அம்முயற்சி பலிக்குமா,சமூகம் அதை ஏற்குமா என்பது வேறு விஷயம்) முயற்சிசெய்து கொண்டிருகிறார்கள்,மேடம்,தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் சொல்வதுபோல் நாங்கள் உயர்ந்தவர்களில்லையென்றால் எங்கள் ஜாதி மரபைப் பின்பற்ற மற்றவர்கள் ஏன் விரும்ப வேண்டும்?
பிறவியிலேயே எங்களுக்கு அமைந்த இந்த உயர்வின்மீது உங்களுக்குள்ள பொறாமைதான் இப்படியெல்லாம் எங்களைப்பற்றி அவதூறாகப் பேச உங்களைத் தூண்டுகிறது
.இந்த சமூகத்தில் எங்களை மட்டுமே நீங்கள் குறிவைத்துத் தாக்குவதற்கு காரணம் என்னவெனில்,எங்கள் பெருமைகுறித்தும் உயர்வுகுறித்தும் உங்கள் அடிவயிற்றில் கனன்று எரிந்து கொண்டிருக்கும் பொறாமைத்தீதான்.
உங்கள் தலைவன்போல் எத்தனை தலைவன் வந்தாலும் மக்கள் மனங்களை மாற்றிவிடமுடியாது.ஏனெனில் மக்கள் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்.
பெண்கள் பொது வாழ்க்கைக்கு வந்தால் பேச்சில் கண்ணியம் வேண்டும்.வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.
கொள்கையளவில் நீங்களும் நானும் வடதுருவம் தென்துருவம் என்ற நிலைதான் என்றாலும் நீங்கள் ஒரு பெண் என்பதால் ஒரு அளவுக்குமேல் உங்களை விமர்சிக்க எனக்கு மனம் வரவில்லை.
ஏனெனில்,பெண்மையை மதிப்பவன் நான்.உங்களது யூட்யூப் பதிவிற்குக் கீழே உங்கள் கருத்துக்கு எதிர் வினையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களைப் பார்த்தீர்களா,மேடம்? எவ்வளவு கீழ்த்தரமாக உங்களைத் திட்டமுடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாகத் திட்டி எழுதியிருக்கிறார்கள்.
மற்றவர்கள் பாணியில் சொன்னால் நன்றாகக் கழுவி ஊற்றியிருக்கிறார்கள்.இது தேவையா உங்களுக்கு? ‘அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை’என்றுகூட நீங்கள் சொல்வீர்கள்.
உங்கள் மீது இந்த அனுதாபம் என் மனதில் வந்ததற்குக் காரணம் நீங்கள் ஒரு பெண் என்பதால்தான்.மற்றபடி வேறொன்றும் இல்லை.
இப்படிப்பட்ட கீழ்த்தரமான வசவுகள் உங்கள் கருத்துக்களுக்கு எதிர்வினையாக வந்ததற்குக் காரணம் உங்களது தரக்குறைவான பேச்சுதான்.விதைத்ததுதானே
2

ஞாயிறு, 15 மே, 2022

 விவசாயிகள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து 

ராகேஷ் திகாயத் நீக்கப் பட்டார்!

---------------------------------------------------------------------

மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களை 

இயற்றி இருந்தது. இதை எதிர்த்து விவசாயிகளின் 

போராட்டம் நடந்தது. இப்போராட்டம் பஞ்சாப், 

மேற்கு உபி மாநிலங்களில் மிகவும் தீவிரமாக 

நடைபெற்றது. இறுதியில் மோடி அரசு 

இச்சட்டங்களை வாபஸ் வாங்கியது.


உபியைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் 

ராகேஷ் திகாயத். இவர் மகேந்திரசிங் திகாயத் 

என்னும் மறைந்த விவசாய சங்கத் தலைவரின் 

மகன். இவரின் சங்கம் BKU எனப்படும் 

பாரதீய கிசான் சங்கம் ஆகும்.


ராகேஷ் திகாயத் FIRE BRAND LEADER ஆவார்.

இன்று இவரின் BKU சங்கத் கூட்டத்தில் 

ராகேஷ் திகாயத் சங்கத்தில் இருந்து நீக்கப் 

பட்டார். விவசாயிகளின் நலனைப் 

புறக்கணித்து வீணாக அரசையால் செய்ததாக 

அவர் மீது குற்றச்சாட்டு.


ஆக ராகேஷ் திகாயத் BKU சங்கத்தில் இருந்து 

நீக்கப்பட்டு விட்டார். சங்கமும் இரண்டு துண்டுகளாக 

உடைந்து விட்டது.

******************************************

கருந்துளையைப் படம் பிடித்து விட்டோம்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
நமது காலக்சி பால்வீதி ஆகும். ஆங்கிலத்தில் 
இது Milky way என்று அழைக்கப் படுகிறது.

நமது காலக்சியில் உள்ள ஒரு கருந்துளையை 
படம் பிடித்து இருக்கிறோம். இது சகிட்டாரியஸ்
(Sagittarius) என்னும் தனுஷ் ராசி நட்சத்திரக் 
கூட்டம் இருக்கும் இடத்தில் உள்ளது.

தற்போது இதன் உருவம் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தச் செய்தியை விஞ்ஞானிகள் மே 12, 2022ல் 
உலகின் பல்வேறு இடங்களில் நடத்திய 
செய்தியாளர் சந்திப்புகளில் வெளியிட்டனர்.

ஆக, கருத்துளையைப் படம் பிடித்து விட்டோம்.
சரி, படம் பிடித்தது யார்? EHT எனப்படும் 
Event Horizon Telescope குழுவின் விஞ்ஞானிகள் 
கருத்துளையைப் படம் பிடித்துள்ளனர். இக்குழுவில் 
உலகெங்கிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட 
ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கருந்துளைகள் 
பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

கருந்துளையைப் படம் பிடித்து விட்டோம் 
என்பது கருந்துளை ஆய்வில் ஒரு முக்கியமான 
மைல்கல்.  இது ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் 
கோட்பாட்டை உறுதிப் படுத்துகிறது.
இது மானுடத்தின் வெற்றி.

வேறுள குழுவை எல்லாம் 
மானுடம் வென்ற தம்மா.
.............கம்பன்............
****************************************       
பின்குறிப்பு:
விரிவான விளக்கக் கட்டுரையை  
அறிவியல் ஒளி ஏட்டில்  எழுதலாமா என்று 
யோசித்துக் கொண்டுள்ளேன்.
-------------------------------------------------------   

சனி, 14 மே, 2022

வரலாறு காணாத பணவீக்கம்!
மோடி அரசு சமாளிக்குமா?
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
எட்டு ஆண்டுகளுக்கு முன், இதே மே மாதத்தில் 
(2014 மே) மோடி பிரதமர் ஆனார். இன்று வரை அவரே 
 நீடித்தும் வருகிறார்.

இந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து உள்ளது.
மார்ச் 2022ல் சில்லரைப் பணவீக்கமானது 
(retail inflation) 6.95% என்று அதிகரித்தது.
ஏப்ரல் மாதத்தில் (2022 ஏப்ரல்) இது மேலும்
அதிகரித்து 7.79% ஆக உயர்ந்தது.

மே 2022ல் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது 
என்று அஞ்சப் படுகிறது.

இந்தியாவின் தொழிலாளர் துறை அமைச்சகமானது  
(ministry of labour) நுகர்வோர் விலைவாசிக்குறியீட்டு 
எண் என்ற கணக்கீட்டைத் தயாரிக்கிறது. இது 
ஆங்கிலத்தில்  CPI = Consumer Price Index என்று அழைக்கப் 
படுகிறது. இந்த CPI என்னை வைத்துத்த்தான் 
மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் மற்றும் 
ஏனைய தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படி 
வழங்கப் படுகிறது.

ஆக CPI எகிறிக் கொண்டிருக்கிறது. எனவே 
பணவீக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த இடத்தில் பணவீக்கம் என்றால் என்ன என்று 
தெரிந்து கொள்வது அவசியம்.

அரசியல் பேசுவோரில் பலர், குறிப்பாக போலி 
இடதுசாரிகள். போலி முற்போக்குகள் ஆகியோருக்கு 
பணவீக்கம் (INFLATION) என்றால் என்ன என்றே 
தெரியாது. தெரிந்தது போல் நடித்துக் கொண்டே 
இருப்பார்கள்.

Too much of money chasing too few of goods is called inflation.
இது ஒரு bookish definition ஆகும். விளக்கி எழுத 
விரும்பவில்லை. கருப்பு நாயைக் குளிப்பாட்டி
வெள்ளையாக்க முடியாது அல்லவா! அது போல 
போலி இடதுசாரி, போலி முற்போக்கு கபோதிகளை 
விஷய ஞானம் உள்ளவர்களாக ஆக்குவது இயலாது.
மேலும் அது என்னுடைய அஜெண்டாவிலும் இல்லை.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. பணவீக்கம் ஏன் 
இந்த அளவு அதிகரித்து உள்ளது? பணவீக்கம் என்பது 
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் 
ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடி. காரணம் கொரோனாவும் 
அதனால் விளைந்த உற்பத்தி முடக்கமும்.
          
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தான் காரணம் 
பெட்ரோல் டீசலின் விலை உயர்வும் உணவுப் 
பொருட்களின் விலை உயர்வும் ஆகும். நுகர்வோர் 
விலைவாசிக் குறியீட்டு எண் விவரங்களை 
ஆர்வமுள்ள வாசகர்கள் தேடி எடுத்துப் படிக்கலாம்.

சரி, இந்தப் பணவீக்கத்தை மோடி அரசு சமாளிக்குமா?
சமாளிப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறார்?
அவை விலைவாசியைக் குறைத்து விடுமா?

யோசித்து வையுங்கள். அடுத்த கட்டுரையில் 
சந்திப்போம்.
***********************************************
 
     
 


 

 இந்த ஃபார்முலாவை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியவில்லை.

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி இலக்கத்தை எடுத்துக்குங்க.
2) அந்த எண்ணை 2 ஆல் பெருக்கவும்
3) அந்த எண்ணுடன் 5 ஐ கூட்டவும்.
4) கூட்டி வரும் எண்ணை 50 ஆல் பெருக்கவும்
5) நீங்கள் பெறும் எண்ணுடன் 1772 ஐ கூட்டவும்
6) பெறப்பட்ட எண்ணிலிருந்து உங்கள் பிறந்த ஆண்டைக் கழிக்கவும்
7) நீங்கள் 3 இலக்கங்களைப் பெறுவீர்கள். முதலாவது உங்கள் மொபைல் எண்ணின் கடைசி இலக்கம்.
மற்ற இரண்டு உங்கள் வயது.

6
12
17
850
1772 + 850 = 2622
2622-1953 = 669
----------------------------------

வெள்ளி, 13 மே, 2022

இலங்கையின் அரசியல் சிக்கல்கள்!
புதிய பிரதமர்  ரணில் விக்கிரம சிங்கே தீர்ப்பாரா?
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
1) ஜனாதிபதி, பிரதமர் என்னும் இரண்டு பதவிகளில் 
இலங்கையைப் பொறுத்தமட்டில், ஜனாதிபதி 
பதவியே அதிக அதிகாரம் கொண்டது. அங்கு 
ஜனாதிபதிதான் Chief Executive. இந்திய ஜனாதிபதி 
போன்றவர் அல்லர் இலங்கையின் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி போன்றவர் என்று புரிந்து 
கொள்ளுங்கள்.

2) எனவே இலங்கைப் பிரதமர் என்பவர் அதிகாரம் 
குறைந்த பதவியில் இருப்பவர் என்ற உண்மை 
நம் அறிவில் உறைய வேண்டும். (அறிவினில் உறைதல்
கண்டீர் என்பார் பாவேந்தர்). எனவே இந்தியப் 
பிரதமர் பதவி போன்றதல்ல இலங்கைப் பிரதமர் பதவி.

3) இலங்கையின் ஜனாதிபதியாக தற்போது இருப்பவர் 
கோத்தபய ராஜபக்சே. இவர் அண்மையில் பிரதமர் 
பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடிப்போன 
மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரர்.

4) கோத்தபய ராஜபக்சே ஒரு ராணுவத் தளபதி.
லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்த ராஜபக்சே 
விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை 
அரசின் ஆயுதப் படைகளை வழிநடத்தியவர்,

5) கோத்தபய ராஜபக்சே SLPP எனப்படும் ஸ்ரீ லங்கா 
பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்தவர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே UNP எனப்படும் 
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்.
பிரதமரும் ஜனாதிபதியும் வெவ்வேறு கட்சிகளைச்
சேர்ந்தவர்கள். ரணில் பலமுறை இலங்கையின் 
பிரதமராக இருந்தவர். எதிர்க்கட்சித் தலைவராகவும்
இருந்தவர்.

7) ஜே ஆர் ஜெயவர்த்தனா யார் என்று தெரியுமா? 
முன்பு இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர்.
அவரின் மருமகன்தான் இந்த ரணில் விக்கிரமசிங்கே.

8) உங்களுக்கு பிரேமதாசா யாரென்று தெரியுமா?
இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர்தான் அவர்.
அவர் ஒரு வெடிகுண்டுச் சம்பத்தில் விடுதலைப் 
புலிகளால் கொல்லப்பட்டார். அவரின் மகன் 
சஜித் பிரேமதாசா  தீவிர அரசியலில் இருக்கிறார்.
அவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால் 
கோத்தபய ராஜபக்சே அவரை ஏற்கவில்லை.

9) சஜித் பிரேமதாசா கடுமையான தமிழர் எதிர்ப்பாளர்.
இவருக்கு இலங்கையின் முஸ்லீம் மக்கள் 
ஆதரவு அளிக்கின்றனர். இலங்கையில் முஸ்லிம்கள் 
முற்றிலுமாக தமிழர்களுக்கு எதிராக நிற்கின்றனர்.

10) ரணில் விக்கிரமசிங்கே கற்றறிந்தவர். மிதவாதப் 
போக்கு உடையவர். இதன் காரணமாக மற்றவர்களை 
விட ஒப்பீட்டளவில் இவருக்கு ஒரு ஏற்புடைமை 
(ACCEPTABILITY) உண்டு. மேலும் இவர் இந்திய 
ஆதரவாளர். ராஜபக்சே சகோதரர்கள் இந்திய 
எதிர்ப்பாளர்கள். தமிழர்களைப் பொறுத்தமட்டில்,
இவர் தமிழர்களின் கொடிய எதிரியாக இருந்தவரும் 
அல்லர்; இருப்பவரும் அல்லர்.

11) இலங்கையின் அரசியல் சிக்கல்களுக்கு ரணிலிடம் 
தீர்வு எதுவும் கிடையாது. ஆனால் தற்போது அதள 
பாதாளத்தில் கிடைக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை 
ஓரளவேனும் தூக்கி நிறுத்திட இவரை விட்டால் 
இலங்கை ஆளும் வர்க்கத்திடம் வேறு பொருத்தமான 
ஆள் இல்லை.
 
12) இந்தியாவின் உதவி இல்லாமல் இலங்கை 
பிழைக்க இயலாது. இதுதான் யதார்த்தம்.
பார்ப்போம் ரணிலின் சாதுரியத்தை!
***************************************