ஞாயிறு, 16 ஜூலை, 2023

 சந்திரயான்-3 பகுதி 2 details    
------------------------------------------
1) ஜுன் 14ல் விண்கலம் 170-36500 என்ற ஆர்பிட்டில் 
நிலைநிறுத்தப் பட்டது.
2) தற்போது ஒரு சுற்று சுற்றி முடித்த பின்.
ஜூன் 15 அன்று 173/ 41762 என்ற ஆர்பிட்டில் 
விண்கலம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.
இது முதல் orbit raising manuver ஆகும்.
Earth bound firing -1ஆகும். 

சந்திரயான்-3 ஜூன் 15 அன்று Perigee 173 km 
Apogee 36500 km என்ற orbitக்கு உயர்த்தப் 
பட்டுள்ளது. இது முதல் Orbit raising maneuver ஆகும். 


இந்தப் படத்தில் ரோவர் எங்கிருக்கிறது 
என்று வாசகர்கள் சொல்ல வேண்டும்.
சொல்லுங்கள்.

Perigee =  புவியண்மை. Apogee = புவிச்சேய்மை.

நான் உருவாக்கிய தமிழ்ச் சொற்கள்;
Perigee =  புவியண்மை. Apogee = புவிச்சேய்மை.
இவற்றின் பொருளை மனதில் பதியுங்கள் வாசகர்களே!


இந்தப் படங்களைப்  பாருங்கள்.

பூமியின் orbitல் சுற்றும் சந்திரயான்-3 அடுத்து 
சந்திரனின் orbitக்குச் செல்லும். அப்போது 
periselene, aposelene பற்றிப் பார்ப்போம்.

இஸ்ரோ எப்போது நிறுவப்பட்டது?
அ) 1948  ஆ) 1952 இ) 1969 ஈ) 1995.
சரியான விடை எது?



விடை:
-----------
மேலே உள்ள படத்தில் வலப்புறத்தில் 
(top right) அந்த லேண்டரின் வயிற்றுக்குள் 
வெளியே தெரியாதபடி இருக்கிறது ரோவர்.

கீழ் உள்ள படத்தில் அந்த pink நிற சரிவுப் 
பலகையில் (இதை ramp என்பர்) இறங்கி 
வருகிறது ரோவர். அடுத்த படத்தில் 
rampல் இருந்து இறங்கி தனியாக நிற்கிறது ரோவர்.
-----------------------------------------

பூமியை சந்திரன் சுற்றி வருகிறது அல்லவா?
என்ன வேகத்தில் சுற்றி வருகிறது?
Find the orbital velocity of the moon.   
----------------------------------------------------------
santhirayaan-3 julay 17

சந்திராயன்-3 ஜுலை 17 மாலையில் perigee 226 km,
apogee 41603 km உள்ள சுற்றுப்பாதைக்கு உயர்த்தப் பட்டது.
(2nd orbit raising manoeuvre).   
  
சந்திரயான்-3ன் orbit raising இங்கிருந்து செய்யப்படுகிறது!
அ) ஸ்ரீஹரிகோட்டா ஆ) மகேந்திரகிரி இ) பெங்களூரு 
ஈ) திருவனந்தபுரம்.    

santhirayaan-3n 

சந்திரயான்-3ன் 3ஆம் orbit raising 
ஜூலை 18ல் முடிந்ததாக  இஸ்ரோ கூறுகிறது. 
ஆனால் orbit detailsஐ (perigee, apogee)
வெளியிடவில்லை.  

3ஆம் orbit raising நடவடிக்கை சந்திரயான்-3ல் 
ஜுலை 18 மாலையில் நடைபெற்றது.
Perigee = 228 km. Apogee = 51400 km.


Perigee = 228 km, Apogee = 51400 km உள்ள  
ஒரு நீள்வட்டச் சுற்றுப்பாதையின் (elliptical orbit)
மையப்பிறழ்ச்சி (eccentricity) என்ன?





    






     





       



பல ஆண்டுகளாக இவற்றையே பயன்படுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக