செவ்வாய், 11 ஜூலை, 2023

சந்திரயான்-3 வெள்ளியன்று (14.07.2023
1435 hours IST) விண்ணில் ஏவப் படுகிறது.
காணக்  கண்கோடி வேண்டும்! காணுங்கள்!
 ----------------------
சந்திரயான்-3ன் PROJECT DIRECTOR
விஞ்ஞானி பி வீரமுத்துவேல் ஆவார்.
விழுப்புரம் இவரின் ஊர். IIT சென்னையில் 
படித்தவர். 

படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?
இவர்தான் பி வீரமுத்துவேல்.
சந்திரயான்-3ன் PROJECT DIRECTOR.
விழுப்புரம் ஊர்க்காரர். சென்னை IITயில் 
படித்தவர்.  

சந்திரயான்-1ன் project director மயில்சாமி 
அண்ணாத்துரை. சந்திரயான்-2வில் 
வனிதா முத்தையா.
சந்திரயான்-3ல் பி வீரமுத்துவேல்.

சந்திரயான்-1.. இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர்.
சந்திரயான்-2 ...கே சிவன். சந்திரயான்-3... எஸ் சோமநாத்.



படம்-1...சந்திராயன்-1ன் project director
மயில்சாமி அண்ணாத்துரை.
படம்-2... சந்திரயான்-2ன் project director
வனிதா முத்தையா.
படம்-3... சந்திரயான்-3ன் project director
பி வீரமுத்துவேல்.
-------------------
santhirayaan-3 enpathu oru vinkalam

சந்திரயான்-3 என்பது ஒரு விண்கலம் (spacecraft)
இதை விண்ணில் செலுத்த ஒரு ராக்கட் அதாவது ஒரு 
launch vehicle வேண்டும். அதுதான் LVM 3.
------------------------------------------------

சந்திரயான்-2க்கும் சந்திரயான்-3க்கும் 
என்ன வேறுபாடு?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
அதிமுக்கியமான வேறுபாடு என்ன?
வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
-----------------------------------------------------------     
santhiraayan-2vil orbiter

santhiraayan-2vil orbiterlanderrover

சந்திராயன்-2வில் orbiter, lander, rover என்ற 
மூன்றும் இருந்தன. சந்திராயன்-3வில் 
ஆர்பிட்டர் கிடையாது. லேண்டரும் ரோவரும்
மட்டுமே.


orbiter = கோள்சுற்றி.
lander = தரையிறங்கி 
rover = தரையுலாவி 
----------------------------------------------------------------
enathu edai

பூமியில் எனது எடை (weight) 66 கிலோகிராம் என்றால் 
சந்திரனில் எனது எடை என்ன? விடையளிப்பது கட்டாயம்.



சந்திரயான்-3 launch 14.07.2023 வெள்ளி 
14:35:17 hrs IST. இதற்கான 25 மணி 30 நிமிட 
countdown  இன்று பிற்பகலில் தொடங்கியது.



சந்திரனின் தரையில் கிருஷ்ணனும் ராதையும் 
இரண்டடி தூரத்தில் நிற்கிறார்கள். கிருஷ்ணன் 
சகியே என்று கூப்பிட்டால் ராதைக்குக் கேட்குமா?


 
பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் என்ன?
அ)  50 லட்சம் கிமீ;  ஆ) 2.15 கோடி கிமீ; 
இ) 1.48 லட்சம் கிமீ: ஈ) 3,84,000 கிமீ. 


சந்திரனில் இருந்து நியூட்டன் ஒரு லேசர் ஒளியை 
பூமியில் உள்ள ஐன்ஸ்டினுக்கு அனுப்பினால், அதை 


எவ்வளவு நேரம் கழித்து ஐன்ஸ்டின் பெறுவார்?     நேரத்தில் 
 
   

    
மணி ஜாடி பரிசோதனை!
----------------------------------------
ஊடகம் இல்லாமல் ஒலி பரவாது.
Sound requires a material medium for propagation.
இதை விளக்கும் BELL JAR Experiment 
ஆறாம் வகுப்பில் செய்து காட்டப் படுகிறது.
அதை அறிந்து கொள்ளுங்கள். 
   


விடை:
கேட்காது. ஒலி பரவ ஒரு ஊடகம் வேண்டும்.
சந்திரனில் material medium இல்லை.


-----------------------------------
பூமியின் ஈர்ப்பு விசை = 9.8 meter per second squared.
சந்திரனின் ஈர்ப்பு விசை என்ன? விடை தருக! 

சந்திரனில் எனது எடை = பூமியில் உள்ள எடையில் 
ஆறில் ஒரு பங்கு. எனவே எனது எடை = 11 கிகி.

சந்திரயான்-3 
-----------------------------------------
manithakula varalaarrileye 

மனிதகுல வரலாற்றிலேயே சந்திரனில் தண்ணீர் 
இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகிற்குச் 
சொன்னது இந்தியாவின் சந்திரயான்-1 (2008ல்)


பின்குறிப்பு:
-------------------
1) இந்தப் பதிவு அறிவியல் ஒளி இதழில் வெளியான 
(2019 ஆகஸ்ட்) எனது கட்டுரையில் இருந்து 
எடுக்கப் பட்டது. 

2) 2003ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் சந்திரயான்-1க்கு 
அனுமதி வழங்கினார். அதையடுத்து ஒரு ஆர்பிட்டரை 
மட்டும் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அப்போது 
அப்துல் கலாம் தலையிட்டு, நிலவில் மோதி அங்குள்ள 
மண்ணை அள்ளி வரக்கூடிய ஒரு கருவியையும் 
ஆர்பிட்டருடன் அனுப்ப வேண்டும் என்று அறிவுரை 
கூறினார். அந்தக் கருவிதான் Moon Impact Probe.

அந்தக் கருவி அள்ளி வந்த debrisஐ ஆராய்ந்த 
பின்னர்தான் சந்திரனில் தண்ணீர் இருக்கும் 
உண்மையை அறிய முடிந்தது.      
------------------------------------------------------------------

Perigee 170 கிமீ; Apogee 36500 கிமீ உள்ள ஒரு 
நீள்வட்டப் பாதையில் (elliptical orbit)
சந்திரயான்-3 முதல் நாளன்றே நிலைநிறுத்தப் பட்டது.   


 


 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக