UCC-1
---------------------------------
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
அதைப்பற்றி நம் இந்திய அரசமைப்புச் சட்டம்
(Constitution of India) என்ன சொல்கிறது?
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
Indian Constitution பற்றிய ஒரு புத்தகம் வாங்குங்கள்.
விளக்கத்துடன் கூடிய புத்தகமாக இருக்கட்டும்.
GK level book போதுமானது. ரூ 200 முதல் ரூ 300 வரை
விலை இருக்கும். புத்தகத்தை வாங்குங்கள்.
படியுங்கள். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க
வேண்டும்.
தமிழில் யாராவது மொழிபெயர்த்து புத்தகம்
பதிப்பித்து இருக்கக் கூடும். நல்ல புத்தகமாக
இருந்தால் அதை வாங்கிப் படியுங்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்து 44 என்ன
சொல்கிறது என்று படியுங்கள்.
ஷரத்து-44
---------------
The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.
(தமிழில்)
இந்தியா முழுவதும் வாழும் இந்தியக் குடிமக்கள்
அனைவருக்கும் ஒரு பொதுவான சிவில் சட்டத்தை
உருவாக்கித் தருவது இந்திய அரசின் கடமை ஆகும்.
பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி
கூறப்பட்ட விஷயம் ஆகும்.
வேறு யாரையும் விட பொது சிவில் சட்டத்தைத்
தீவிரமாக ஆதரித்தவர், அதைக் கொண்டு வர
முயன்றவர் டாக்டர் அம்பேத்கார் ஆவார்.
------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக