செவ்வாய், 27 ஜூன், 2023

குவாண்டம் தியரியைப் படித்துப் 
புரிந்து கொள்ளாமல், ஒருபோதும் 
பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்ள இயலாது!
---------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------  
1) குவாண்டம் தியரி 1900ஆம் ஆண்டில் பெர்லின் 
நகரில் நடைபெற்ற மாநாட்டில் மாக்ஸ் பிளாங்க் 
என்னும் விஞ்ஞானியால் முன்மொழியப்  பட்டது.

2) 1920-30களில் குவாண்டம் விசையியலாக 
(quantum mechanics) வளர்ந்து அறிவியல் உலகை 
ஆளத் தொடங்கியது.

3) மாக்ஸ் பிளாங்க் 2) ஐன்ஸ்டின் 3) நியல்ஸ் போர் 
4) வெர்னர் ஹெய்சன்பெர்க் 5) எர்வின் ஷ்ராடிங்கர்
6) பால் டிராக் ஆகியோர் குவாண்டம் தியரியை 
வளர்த்தெடுத்தவர்கள்.

4) எப்படிப் பார்த்தாலும், குவாண்டம் தியரியின்
இன்றைய வயது நூறு. 100 ஆண்டு ஆன பின்னரும்கூட
இந்தியாவில் குவாண்டம் தியரியைப் புரிந்தவர்கள் 
அரை சதவீதத்திற்கும் குறைவே. 

5) குவாண்டம் தியரியைப் படிக்காதவர்களும்
ஏன் அறிவியலையே பிடிக்காதவர்களும் 
தமிழ்நாட்டில் மார்க்சிய முகாமில்தான் அதிகம்.
Non-Marxistsதான் அறிவியல் கற்றவர்களாக 
இருக்கிறார்கள். தன்னுடைய வாழ்க்கையில் 
ஒரு அறிவியல் கட்டுரையைஅக்கோடா இதுவரை 
படித்திராதவன் மார்க்சிய முகாமில்தான் 
இருக்கிறான், எத்தகைய குற்ற உணர்வுமின்றி.

6) குவாண்டம் தியரியைத் தெரிந்து கொள்ளாமல் 
பொருள்முதல்வாதம் பற்றித் தெரிந்து கொள்ள 
முடியாது.

7) குவாண்டம் தியரி குறித்து தமிழில் இதுவரை 
யார் எவரும் ஒரு நூல் எழுதவில்லை. மறைந்த 
சுஜாதா கூட குவாண்டம் தியரி பற்றி எழுதவில்லை.

8) சமகால அறிவியல் எழுத்தாளர்களில் குவாண்டம் 
தியரி குறித்து காத்திரமான கட்டுரைகளை 
எழுதியவர்கள் எவரும் இல்லை, நியூட்டன் அறிவியல் 
மன்றத்தைத் தவிர.

9) 2022 நவம்பர் அறிவியல் இதழில் "தொலைவில் 
நிகழும் பயங்கரம் அல்ல" (Not a spooky action at a distance)
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்.
குவாண்டம் தியரி குறித்த மிகவும் அதிரடியானதும் 
லேட்டஸ்ட் தகவல்களைக் கொண்டதுமான 
அக்கட்டுரை தமிழில் குவாண்டம் தியரி குறித்து 
எழுதப்பட்ட ஆகச்சிறந்த கட்டுரை ஆகும்.
அப்படிப்பட்ட ஒரு கட்டுரை ஆங்கிலத்தில்கூட 
இதுவரை எவராலும் எழுதப் பட்டதில்லை.
எனினும் அக்கட்டுரை போதிய அளவு வாசகர்களைப் 
பெறவில்லை.

10) தற்போது முகநூலில் குவாண்டம் தியரி குறித்து 
இதுவரை ஆறு கட்டுரைகள் எழுதி உள்ளேன்.
அவற்றைப் படியுங்கள். மீண்டும் மீண்டும் 
படியுங்கள். புரிந்து கொள்ள முயலுங்கள்.

11) Popular Science என்ற வகைமையில் எழுதும்போது 
12ஆம் வகுப்புத் தரத்தை அடிப்படையாகக் 
 கொண்டே எனது கட்டுரைகள் பெரும்பாலும் 
அமையும். ஆனால் குவாண்டம் தியரி குறித்த 
கட்டுரைகளில் M.Sc Physics portionsல் இருந்து 
சில பல விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது.
அது தவிர்க்க இயலாதது.

12) இதுவரை வெளியிட்ட 6 கட்டுரைகளயும், இனி 
வெளியிட இருக்கும் கட்டுரைகளையும் இடதுசாரி 
முகாமில் உள்ளூர் வாசிக்க வேண்டும்.
வாசித்தல் உங்களுக்கு நல்லது. வாசிக்கவிட்டால் 
எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.
************************************************    
    
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக